குரு பகவானின் அருளால் இந்த ராசியினருக்கு தீபாவளிக்கு பிறகு நினைத்தது நடக்கும்..!
குரு பகவானின் அருளால் இந்த ராசியினருக்கு தீபாவளிக்கு பிறகு நினைத்தது நடக்கும்..!
குரு பகவான்
Gurupeyarchi 2022 | எந்த ஒரு ஜாதகத்திலும் குருவின் இருப்பு மிக மிக முக்கியம். இதை வைத்துதான் குல தெய்வ அனுக்ரஹம், முன்னோர்கள் ஆசீர்வாதம் ஆகியவற்றை கணிக்க முடியும்.
குரு நின்ற வீட்டில் அதிக நற்பலன்களை கொடுப்பதில்லை என்றாலும், பார்வை செய்யும் இடங்கள் ஏற்றம் பெறுகிறது. ‘குரு பார்க்க கோடி புண்ணியம்’ என்பது ஆன்றோர் வாக்கு. எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும். குரு உச்சம் பெற்று கடக ராசியில் சஞ்சரிக்கும்போது, 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ பூக்கிறது. சிம்மத்தில் சஞ்சரிக்கும்போது மாசி மகாமகம் கொண்டாடப்படுகிறது. கும்ப ராசியில் சஞ்சரிக்கும்போது கும்பமேளா கொண்டாடப்படுகிறது.
கிரகங்களில் மிக முக்கிய கிரகங்களில் ஒன்றான வியாழன், அதாவது குரு, தீபாவளிக்கு பிறகு தனது இயக்கத்தை மாற்றவுள்ளார். குரு 29 ஜூலை 2022 அன்று மீன ராசியில் பெயர்ச்சியானார். வக்ர நிலையில் சஞ்சரித்து வரும் அவர், அக்டோபர் 26 அன்று மீன ராசியில் நேர் இயக்கத்துக்கு மாறுவார். அதன் பிறகு குரு பகவான் நவம்பர் 24, 2022 வரை இந்த ராசியில் இருப்பார். குருவின் மாற்றத்தால், சில ராசிக்காரர்களின் தலைவிதி மாறும், அந்த வகையில் அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
ரிஷபம்: மீன ராசியில் குருவின் இயக்கம் நல்ல பலன்களைக் கொண்டு வரும். ரிஷப ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். புதிய வகைகளில் வருமானம் அதிகரிக்கும். வாகனம், சொத்து வாங்கும் யோகம் தற்போது உண்டாகும். உறவுகளில் இனிமை இருக்கும். புதிய நபர்களின் சந்திப்பு அதிகரிக்கும். நினைத்தது நடக்கும்.
மிதுனம்: மீனத்தில் வியாழனின் சஞ்சாரம், இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை கொண்டு வரும். மிதுன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் அனைத்திலும் முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரத்தில் பெரிய சலுகைகள் கிடைக்கும். இந்த நேரத்தில், மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். நாள்பட்ட நோய்களில் இருந்தும் விடுபடலாம்.
கடகம்: குருவின் பாதை மாற்றத்தால் கடக ராசிக்காரர்களுக்கு முழு அதிர்ஷ்டம் கிடைக்கும். தடைபட்ட பணிகள் முடிவடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபடுபவீர்கள். பல இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். மேலும், தொழில் சம்பந்தமான விஷயங்களுக்காக வெளிநாடு செல்லலாம்.
கும்பம்: மீன ராசியில் குருவின் மாற்றம், கும்ப ராசிக்காரர்களின் நிதி நிலையை வலுவாக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.