குரு பகவான் 13-04-2022 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனால் குரு பகவானின் பார்வை பாக்கிய - லாப - ராசி ஸ்தானங்களின் மீது விழுகிறது. இந்த பெயர்ச்சியால் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வேளை தவறி சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும் படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.
குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக பேசுவது நல்லது. உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. வாகன சுகம் ஏற்படும். வாகனத்தை ஓட்டும் போது கவனம் தேவை. பிள்ளைகள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். அவர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.
தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த சச்சரவுகள் நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவை கிடைக்கும்.
பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியும். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும்.
அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.
விசாகம் 4ம் பாதம்:
இந்த பெயர்ச்சியால் உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.
அனுஷம்:
இந்த பெயர்ச்சியால் தொழிலில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.
கேட்டை:
இந்த பெயர்ச்சியால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.
பரிகாரம்: வேல்மாறல் வகுப்பு பாராயணம் செய்து முருகனை வழிபடுவது காரிய தடைகளை நீக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.
அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய், வெள்ளி
மேலும் படிக்க...
1. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022: மேஷம் ராசியினருக்கு பணவரத்து கூடும்...
2. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | ரிஷபம் ராசியினருக்கு வாகன யோகம் உண்டாகும்...
3. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | மிதுனம் ராசியினருக்கு பல வகையான யோகங்கள் ஏற்படும்...
4. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | கடகம் ராசியினருக்கு தெளிவான சிந்தனை தோன்றும்...
5. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | சிம்மம் ராசியினருக்கு குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்...
6. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | கன்னி ராசியினர் வழக்கு விவகாரங்களில் வெற்றி காண்பீர்கள்...
7. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | துலாம் ராசியினருக்கு வருமானம் அதிகரிக்கும்...
8. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | விருச்சிகம் ராசியினருக்கு உடல் ஆரோக்கியம் அடையும்...
9. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | தனுசு ராசியினருக்கு காரியத் தடைகள் நீங்கும்...
10. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | மகரம் ராசியினருக்கு எடுத்த முயற்சிகள் கை கூடும்...
11. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | கும்பம் ராசியினருக்கு வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும்...
12. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | மீனம் ராசியினர் புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gurupeyarchi