Home /News /spiritual /

குருப்பெயர்ச்சி 2022: மேஷம் ராசியினருக்கான பொது பலன்கள்

குருப்பெயர்ச்சி 2022: மேஷம் ராசியினருக்கான பொது பலன்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம் ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம் ராசி

Gurupeyarchi 2022 Mesham Rasi Palan | மேஷம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

    குரு பகவான் 13-04-2022 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனால் குரு பகவானின் பார்வை சுக - ரண ருண ரோக  - அஷ்டம  ஸ்தானங்களின் மீது விழுகிறது. இந்த பெயர்ச்சியால் பணவரத்து கூடும். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும்.  வீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும்.  உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது.

    குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள்  இருக்கும்.குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன்  வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது.  கணவன், மனைவிக்கிடையே  பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும். தம்பதிகளுக்குள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை  கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை.

    தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல்  ஏற்படலாம். வியாபார  விரிவாக்கம் தொடர்பான  பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.

    பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும்.

    மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்

    கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அலட்சிய போக்கை கைவிடுவது நல்லது.

    அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக அமையும். பண வரவு திருப்தி தரும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு வந்து சேரும். சிலர் மேலிடத்தின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவர்.

    அஸ்வினி:

    இந்த பெயர்ச்சியால் குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

    பரணி:

    இந்த பெயர்ச்சியால் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும்.  எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

    கார்த்திகை 1ம் பாதம்:

    இந்த பெயர்ச்சியால் வீண் செலவுகள் உண்டாகும்.  எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.

    பரிகாரம்:  துர்க்கை அம்மனை அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லாபிரச்சனைகளையும் தீர்க்கும். காரிய  தடை அகலும்.

    அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள், செவ்வாய்

    மேலும் படிக்க... 

    1. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022: மேஷம் ராசியினருக்கு பணவரத்து கூடும்...

    2. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | ரிஷபம் ராசியினருக்கு வாகன யோகம்  உண்டாகும்...

    3. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | மிதுனம் ராசியினருக்கு பல வகையான யோகங்கள் ஏற்படும்...

    4. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | கடகம் ராசியினருக்கு தெளிவான சிந்தனை தோன்றும்...

    5. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | சிம்மம் ராசியினருக்கு குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்...

    6. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | கன்னி ராசியினர் வழக்கு விவகாரங்களில் வெற்றி காண்பீர்கள்...

    7. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | துலாம் ராசியினருக்கு வருமானம் அதிகரிக்கும்...

    8. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | விருச்சிகம் ராசியினருக்கு உடல் ஆரோக்கியம் அடையும்...

    9. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | தனுசு ராசியினருக்கு காரியத் தடைகள் நீங்கும்...

    10. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | மகரம் ராசியினருக்கு எடுத்த முயற்சிகள் கை கூடும்...

    11. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | கும்பம் ராசியினருக்கு வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும்...

    12. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | மீனம் ராசியினர் புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Gurupeyarchi

    அடுத்த செய்தி