குரு பகவான் 13-04-2022 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். இதனால் குரு பகவானின் பார்வை பஞ்சம - களத்திர - பாக்கிய ஸ்தானங்களின் மீது விழுகிறது. இந்த பெயர்ச்சியால் சின்ன விஷயத்துக் கூட கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம்.
குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றும். கவனம் தேவை. வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தடைபட்டு வந்த திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
தொழில், வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக முக்கியஸ்தர் ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். அலுவலகத்தில் அனுசரித்து செல்வது நல்லது. முக்கியமாக மேலதிகாரிகளிடம் சொன்ன வாக்கைக் காப்பாற்றவும்.
பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் போது கவனம் தேவை.
மாணவர்களுக்கு பாடங்களை படிக்கும் போது மனதை ஒரு முகப்படுத்தி படிப்பது நல்லது. கவனம் சிதற விடாமல் இருப்பது வெற்றிக்கு உதவும். சக மாணவர்களிடம் பழகும் போது கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும்.
அரசியல் துறையினருக்கு விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.
பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த பெயர்ச்சியால் பிரிந்து வாழ்ந்த தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள். அரசு ஊழியர்களின் வேலைப் பளு குறையும். ஒருசிலர் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பதவி உயர்வும், விரும்பிய இடத்துக்கு மாறுதலும் வந்துசேரும். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும். பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் கை கூடி வரும்.
உத்திரட்டாதி:
இந்த பெயர்ச்சியால் தொட்ட காரியம் அனைத்திலும் நன்மைகளைப் பெறுவீர்கள். நல்ல வருவாயையும் அடைவீர்கள். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தம்பதிகளிடையே இணக்கம் கூடும். தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்து, புதிய பங்குதாரர்களையும் பெறுவார்கள்.
ரேவதி:
இந்த பெயர்ச்சியால் வீண் சச்சரவுகள் வர வாய்ப்புண்டு. குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் வீட்டின் நிலையை அறிந்து நடப்பார்கள். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. தாய்மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும். உழைப்பதற்குண்டான வாய்ப்புகள் நிறைய கிடைக்கும்.
பரிகாரம்: குருவிற்கு வியாழக்கிழமையில் கொண்ட கடலை நிவேதனம் செய்து வணங்குவதும் வருமானத்தை உயர்த்தும். மன அமைதி கிடைக்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.