குரு பகவான் 13-04-2022 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனால் குரு பகவானின் பார்வை களத்திர - பாக்கிய - லாப ஸ்தானங்களின் மீது விழுகிறது. இந்த பெயர்ச்சியால் எடுத்த முயற்சிகள் கை கூடும். வரவுக்கேற்ற செலவு ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோ தைரியம் கூடும். செய்யாத தவறுக்கு மற்றவர்களால் குற்றம் சாட்டப்படலாம். எனவே கவனம் தேவை. கண்நோய், பித்தம், வாதம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டு நீங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். திடீர் கோபம் உண்டாகும்.
குடும்பச் செலவுகள் கூடும். கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை. பிள்ளைகள் தங்களை அனுசரித்து செல்வார்கள்.
தொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் வசதி கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும். மேலிடத்தின் கனிவான பார்வை விழும்.
பெண்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.
மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும். மேல்படிப்புக்கு திட்டமிடுவீர்கள்.
கலைத்துறையினருக்கு எதிர்ப்பார்த்தபடி வரவுகள் இருக்கும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் வந்து சேரும். மருத்துவ செலவுகள் குறையும்.
அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த பெயர்ச்சியால் எதிர்பார்த்த லாபம் கிடைக்க பெறுவீர்கள். கடன் பிரச்சனை தீரும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
திருவோணம்:
இந்த பெயர்ச்சியால் கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மைதரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் 1,2 பாதங்கள்:
இந்த பெயர்ச்சியால் எதிர்பார்த்த பணவரவுகள் வந்துசேரும். வியாபாரிகள் சிலர் வெளிநாட்டில் கிளைகள் தொடங்குவார்கள். குலதெய்வத்தை வணங்குவதில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பு உயரும்.
பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபடுவது கஷ்டங்களை போக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.
அதிர்ஷ்டகிழமைகள்: ஞாயிறு, சனி
மேலும் படிக்க...
1. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022: மேஷம் ராசியினருக்கு பணவரத்து கூடும்...
2. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | ரிஷபம் ராசியினருக்கு வாகன யோகம் உண்டாகும்...
3. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | மிதுனம் ராசியினருக்கு பல வகையான யோகங்கள் ஏற்படும்...
4. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | கடகம் ராசியினருக்கு தெளிவான சிந்தனை தோன்றும்...
5. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | சிம்மம் ராசியினருக்கு குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்...
6. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | கன்னி ராசியினர் வழக்கு விவகாரங்களில் வெற்றி காண்பீர்கள்...
7. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | துலாம் ராசியினருக்கு வருமானம் அதிகரிக்கும்...
8. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | விருச்சிகம் ராசியினருக்கு உடல் ஆரோக்கியம் அடையும்...
9. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | தனுசு ராசியினருக்கு காரியத் தடைகள் நீங்கும்...
10. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | மகரம் ராசியினருக்கு எடுத்த முயற்சிகள் கை கூடும்...
11. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | கும்பம் ராசியினருக்கு வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும்...
12. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | மீனம் ராசியினர் புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gurupeyarchi