முகப்பு /செய்தி /ஆன்மிகம் / குருப்பெயர்ச்சி 2022: கும்பம் ராசியினருக்கான பொது பலன்கள்

குருப்பெயர்ச்சி 2022: கும்பம் ராசியினருக்கான பொது பலன்கள்

குருப்பெயர்ச்சி 2022: கும்பம் ராசி

குருப்பெயர்ச்சி 2022: கும்பம் ராசி

Gurupeyarchi 2022 kumbam Rasi Palan | கும்பம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

குரு பகவான் 13-04-2022 அன்று ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனால் குரு பகவானின் பார்வை ரண ருண ரோக  - அஷ்டம  - தொழில்  ஸ்தானங்களின் மீது விழுகிறது. இந்த மாதம் வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக  பொழுதை கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும். செலவு செய்யும் முன் தகுந்த ஆலோசனைகள் அவசியமாகிறது.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை  எப்பாடு பட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். தந்தை வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்புகள் நீங்கி உற்சாகமான காணப்படுவீர்கள். கணவன்,  மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர்  வருகையாலும் செலவு உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில்  அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். எனவே கவனம் தேவை.

பெண்களுக்கு முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில்  சாதகமான பலன்  கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம்  செலுத்தி படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். சகமாணவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

கலைத்துறையினருக்கு கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

அரசியல் துறையினருக்கு எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது.

அவிட்டம் 3, 4 பாதங்கள்:

இந்த பெயர்ச்சியால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகன சேர்க்கை ஏற்படும். சகோதரர்கள் மத்தியில் ஒற்றுமை கூடும். சொத்துப் பிரச்சினையில் நல்ல முடிவு வரும். வழக்குகள் சாதகமாகும். திருமணம் நடத்துவதில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் நீங்கும்.

சதயம்:

இந்த பெயர்ச்சியால் வேலைசெய்யும் பிள்ளைகள் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்வார்கள். நீண்டகாலமாக இருந்துவந்த சொத்துப் பிரச்சினைகள் நல்ல தீர்வுக்கு வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் வந்துசேரும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். எதிர்பார்த்த அரசு வேலை கிடைக்கும்.

பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்:

இந்த பெயர்ச்சியால் புதிய வீடுகட்டும் எண்ணம் நிறைவேறும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்தபடி வருமானம் கிடைக்கும். குடும்பத்தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும்.  பிள்ளைகள் பெற்றோர்களால் பாராட்டப்படுவார்கள்.

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனை வணங்கி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி  வழிபடுவது துன்பங்களை போக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டகிழமைகள்: வெள்ளி, சனி

மேலும் படிக்க... 

1. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022: மேஷம் ராசியினருக்கு பணவரத்து கூடும்...

2. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | ரிஷபம் ராசியினருக்கு வாகன யோகம்  உண்டாகும்...

3. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | மிதுனம் ராசியினருக்கு பல வகையான யோகங்கள் ஏற்படும்...

4. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | கடகம் ராசியினருக்கு தெளிவான சிந்தனை தோன்றும்...

5. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | சிம்மம் ராசியினருக்கு குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்...

6. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | கன்னி ராசியினர் வழக்கு விவகாரங்களில் வெற்றி காண்பீர்கள்...

7. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | துலாம் ராசியினருக்கு வருமானம் அதிகரிக்கும்...

8. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | விருச்சிகம் ராசியினருக்கு உடல் ஆரோக்கியம் அடையும்...

9. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | தனுசு ராசியினருக்கு காரியத் தடைகள் நீங்கும்...

10. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | மகரம் ராசியினருக்கு எடுத்த முயற்சிகள் கை கூடும்...

11. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | கும்பம் ராசியினருக்கு வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும்...

12. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | மீனம் ராசியினர் புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்...

First published:

Tags: Gurupeyarchi