thaகுரு பகவான் 13-04-2022 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனால் குரு பகவானின் பார்வை அஷ்டம - தொழில் - அயன சயன போக ஸ்தானங்களின் மீது விழுகிறது. இந்த பெயர்ச்சியால் பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியங்களில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். வாய்க்கு ருசியான இனிப்பு மற்றும் உணவு கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் கீழ் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம் உண்டாகலாம். நிதானமாக அவர்களிடம் பேசுவது நன்மை தரும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. நீண்ட நாட்களாக இருந்து வந்த சொந்த வேலை முடியும். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்பார்கள்.
மாணவர்களுக்கு கவனம் சிதற விடாமல் பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளின் போது கவனம் தேவை. நண்பர்களுடன் நிதானமாக பழகுவதும் நன்மை
கலைத்துறையினருக்கு சிறப்பான மாதமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். சமூக சேவையில் உள்ளோர்க்கு சமூக அந்தஸ்து உயரும்.
அரசியல் துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. காரிய வெற்றி கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். தடை பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
மூலம்:
இந்த பெயர்ச்சியால் சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தி தரும்.
பூராடம்:
இந்த பெயர்ச்சியால் திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள்.
உத்திராடம் 1ம் பாதம்:
இந்த பெயர்ச்சியால் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும்.
பரிகாரம்: வியாழக்கிழமையில் மஞ்சள் நிற மலர் சாற்றி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது கடன் பிரச்சனையை தீர்க்கும். செல்வம் சேரும்.
அதிர்ஷ்டகிழமைகள்: வியாழன், சனி
மேலும் படிக்க...
1. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022: மேஷம் ராசியினருக்கு பணவரத்து கூடும்...
2. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | ரிஷபம் ராசியினருக்கு வாகன யோகம் உண்டாகும்...
3. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | மிதுனம் ராசியினருக்கு பல வகையான யோகங்கள் ஏற்படும்...
4. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | கடகம் ராசியினருக்கு தெளிவான சிந்தனை தோன்றும்...
5. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | சிம்மம் ராசியினருக்கு குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்...
6. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | கன்னி ராசியினர் வழக்கு விவகாரங்களில் வெற்றி காண்பீர்கள்...
7. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | துலாம் ராசியினருக்கு வருமானம் அதிகரிக்கும்...
8. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | விருச்சிகம் ராசியினருக்கு உடல் ஆரோக்கியம் அடையும்...
9. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | தனுசு ராசியினருக்கு காரியத் தடைகள் நீங்கும்...
10. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | மகரம் ராசியினருக்கு எடுத்த முயற்சிகள் கை கூடும்...
11. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | கும்பம் ராசியினருக்கு வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும்...
12. குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 | மீனம் ராசியினர் புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gurupeyarchi