முகப்பு /செய்தி /ஆன்மிகம் / மீனம் ராசிக்கு குருப்பெயர்ச்சி 2022 - 23 எப்படி இருக்கும்? - ஜோதிடர் காழியூர் நாராயணன்

மீனம் ராசிக்கு குருப்பெயர்ச்சி 2022 - 23 எப்படி இருக்கும்? - ஜோதிடர் காழியூர் நாராயணன்

gurupeyarchi 2022- 2023 kazhiyur narayanan | மீனம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன்

gurupeyarchi 2022- 2023 kazhiyur narayanan | மீனம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன்

gurupeyarchi 2022- 2023 kazhiyur narayanan | மீனம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன்

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :

முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும் மீன ராசி அன்பர்களே! நீங்கள் எந்த பிரச்சினையிலும் சிக்க மாட்டீர்கள். பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வல்லமை படைத்தவர்கள். உங்ளுடைய கண்களுக்கு அபார சக்தி உண்டு. இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடமான கும்ப ராசியில் இருந்தார். அவர் பல்வேறு இடையூறுகளை கொடுத்து இருப்பார். பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு இருக்கும். சிலரது வாழ்க்கையில் துக்ககரமான சம்பவமும் நிகழ்ந்து இருக்கலாம். தற்போது குரு பகவான் உங்கள் ராசிக்கு அடியெடுத்து வைத்துள்ளார். இதுவும் அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது.

ஆனாலும் அவர் 12-ம் இடத்தில் இருந்தது போல கெடு பலன்களை செய்ய மாட்டார். ù ஜ ன் ம ர ô ம ர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும். என்று ஜோதிடத்தில் ஒருவாக்கு உண்டு. அதாவது ராமரின்ஜாதகத்தில்1-ம் இடத்தில் குரு வரும்போது வனவாசம் செல்ல நேரிட்டது என்று கூறுவர். அந்த நிலை உங்களுக்கு வராது. காரணம் ராமரின் ஜாதகம் வேறு உங்களுடைய கிரக நிலை வேறு. அவர் தெய்வ அவதாரம். நாம் மனிதர்கள். குரு1-ம் இடத்தில் இருக்கும் போது கலகம் விரோதம் வரும் என்றும் மந்த நிலை ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவது உண்டு.

ஆனாலும் கவலைபட வேண்டாம். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. குருவின் பார்வைக்கு கோடி நன்மை உண்டு. மேலும் அவர் ஜுன் 20-ந் தேதி முதல் நவம்பர் 16-ந் தேதி வரை வக்கிரம் அடைகிறார். அவர் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலனை தரமாட்டார் மாறாக நன்மையே தருவார்.

குருபகவான் வக்கிரம் அடைந்தாலும், அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மீன ராசிக்குள்ளேயே இருக்கிறார். சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் இருக்கிறார். இது சாகதமான இடம். பல்வேறு நன்மைகளை தருவார். அவரால் பொன், பொருள் கிடைக்கும்.மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம். உங்களுக்கு இது மிகவும் சிறப்பான காலம். உங்கள் வாழ்க்கை செழித்தோங்கும். ஆனால் ஜுன்6-ந் தேதி முதல் அக்டோபர் 25-ந் தேதி வரை சனிபகவான் வக்கிரத்தில் உள்ளார்.

சனிபகவான் வக்கிரம் அடைந்தாலும் அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மகர ராசிக்குள்ளேயே இருக்கிறார். இந்த காலக்கட்டத்தில் சனியின் பலம் சற்று குறையும். சனிபகவான் 29-3-2023 அன்று கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சுமாரான நிலையே. அப்போது 7-ம் இடத்துப் பார்வையால் நற்பலனை தருவார். நிழல் கிரகமான ராகுபகவான் 2-ம் இடமான மேஷத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் இல்லை.

இங்கு அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்சினையையும், தூரதேச பயணத்தையும் ஏற்படுத்துவார். பொருட்களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படும். ராகு சாதமகற்ற இடத்தில் இருந்தாலும் அவரது ராகுவின் பின்னோக்கிய 4-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான மகரத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதனால் பண வரவு கூடும். பொன், பொருள் கிடைக்கும்.

மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது 8-ம் இடமான துலாம் ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் இல்லை. இங்கு கேதுவால் விபத்து பயம், செயல்முடக்கம், உடல்நலக் குறைவு முதலியன வரலாம்

இனி விரிவான பலனை காணலாம்

குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவர் உங்களுக்கு கெடு பலன்கள் அதிகம் செய்ய மாட்டார். காரணம் உங்கள் ராசியான மீனம் அவருக்கு சொந்த வீடு. சொந்த வீட்டில் இருந்து கொண்டு கெடு பலன்களை செய்ய எப்படி மனம் வரும்.அதோடு குருவின் அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளதால் கணவன்- மனைவி இடையே அன்னியோன்ய மான சூழ்நிலை இருக்கும். குரு பார்வையால் உற்சாகம் பிறக்கும்.

நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். பெண்கள் மூலம் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். சனிபகவானால் பொன்,பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். அவர்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். வசதிகள் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் குரு பார்வையால் வேலைப்பளு குறையும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். மேல்அதிகாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வர். சகஊழியர்-களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை.

ஆசிரியர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும் உங்கள் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம்.குருவின் பார்வை பலத்தால் வளர்ச்சி காண்பர். வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவிஉயர்வுக்கு தடையேதும் இல்லை.

மருத்துவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். அதிக உழைப்பை சிந்த வேண்டியது இருக்கும். உழைப்புக்கு ஏற்ற மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். வக்கீல்களுக்கு போட்டியாளர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும். தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

வியாபாரம் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். சிலர் வியாபார விஷயமாக வெளிநாடு சென்று வருவீர்கள். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தைத் தரும். எதிரிகளின் இடையூறுகள் வரலாம். அவர்கள் வகையில் ஒருகண் இருப்பது நல்லது. குருவின் பார்வையால் உங்கள் நிலையில் புதியதோர் மாற்றம் ஏற்படும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அரசிடம் இருந்து வந்த தொல்லை

அடியோடு மறையும். வெளியூர் பயணம் அனுகூலத்தை கொடுக்கும். புதிய வியாபாரத்தை தொடங்கலாம். வேலையின்றி இருப்பவர்கள் தொழில் ஆரம்பிக்கலாம். சற்று முயற்சி எடுத்தால் அரசின் உதவி கிடைக்கும். ராகுவால் பொருட்களை களவு கொடுக்க நேரிடும். சற்று கவனம் தேவை.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்று நல்ல வசதிகளையும் பெற்று வாழ்வீர்கள். பொதுநல சேவகர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். நல்ல அந்தஸ்தில் இருப்பர்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது. மாணவர்களுக்கு மனக்கவலை ஏற்படும். சுறுசுறுப்புஅற்ற நிலை, இருப்பிட மாற்றம் முதலியன ஏற்படலாம். இருப்பினும் குருவின் பார்வையால் ஆசிரியரிடம் நற்பெயரை எடுப்பர்.

ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறலாம்.

விவசாயத்தில் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கா விட்டாலும் உழைப்புக்கு தகுந்த கூலி வரும். மஞ்சள், கொண்டைக்கடலை, பயறு வகைகள் பச்சை காய்கறிகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். அதிக முதலீடு செய்யாமல் குறைந்த முதலீட்டில் பயிர் செய்யுங்கள். பண்ணை தொழில் கால்நடை செல்வம் பெருகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.

பெண்கள் குதூகலமாக இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் குரு பார்வையால் கைகூடும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். பதவி உயர்வு காண்பர். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பணம் கிடைக்கும்.

உடல் நலம் கேதுவால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.

பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள். அப்போது கொண்டைக்கடலை தானம் செய்யலாம். ராகுகேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். மேலும் துர்க்கை வழியாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும். ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யலாம்.

First published:

Tags: Gurupeyarchi