குரு பெயர்ச்சி 2021: குரு பெயர்ச்சியின் இறுதி நிலையில் இந்த ராசியினர் பலவித பலன்களை பெறுவர்..

குரு பெயர்ச்சி

குரு ஒரு ராசியில் 12 மாதங்கள் பயணம் செய்வார். சில நேரங்களில் அதிசாரமாகவும், பின்னர் வக்ரகதியிலும் பயணம் செய்வார். குருவின் சஞ்சாரம், பார்வையால் சிலருக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். திருமணம் சுபகாரியம் நடைபெறும், நல்ல வேலை கிடைக்கும், சிலருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.

  • Share this:
    அதிசாரமாக மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சென்ற குரு தற்போது வக்ர கதியில் மீண்டும் தன் பழைய நிலையான மகரத்திற்குத்  வரும் செப்டம்பர் 14ம் தேதி திரும்ப உள்ளார். குரு பகவான் கடந்த 2020 நவம்பர் 15ம் தேதி தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆனார். அதன் பின்னர் 2021 ஏப்ரல் 6ம் தேதி குரு பகவான் தனது அதிசார பெயர்ச்சியால் கும்ப ராசிக்கு பெயர்ச்சியானார். அதன் பின்னர் குரு மீண்டும் மகரத்திற்கு திரும்புவதற்காக வக்ர கதி பெயர்ச்சியை 2021 ஜூன் 20 அன்று தொடங்கினார்.

    இந்நிலையில் திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவான் நிகழும் மங்களகரமான பிலவ ஆண்டு ஆவணி மாதம் 29ஆம் தேதி செவ்வாய்கிழமை செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி பகல் 02.22 மணியளவில் மகர ராசிக்கு திரும்புகிறார். அக்டோபர் 18ம் தேதி மீண்டும் இயல்பான வேகத்தில் கும்பத்தை நோக்கிச் செல்வார். கும்ப ராசிக்கு முறையாக குரு 2021 நவம்பர் 13ம் தேதி பெயர்ச்சி ஆவார்.

    மகர ராசியில் நேர்கதியில் பயணம் செய்யும் குருபகவான் கார்த்திகை 4ஆம் தேதி நவம்பர் 20ஆம் தேதி சனிக்கிழமை இரவு 11.31 மணியளவில் நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார். சில மாதங்கள் கும்ப ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் பங்குனி மாதம் 29ஆம் தேதி ஏப்ரல் 12ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு மீன ராசியில் அதிசாரமாக பயணம் செய்யப் போகிறார்.

    குரு பகவான் மூன்று ராசிகளில் பயணம் செய்வதால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான யோகங்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    மேலும் படிக்க... குரு பெயர்ச்சி 2021: இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம்தான் 

    ரிஷபம்

    குரு ரிஷப ராசிக்கு 9ம் இடத்தில் அமர்ந்திருப்பது அதிர்ஷ்ட குரு, பாக்கிய குரு என்பார்கள். இதனால் சுப காரியங்கள் கை கூடும். குழந்தை பாக்கியம், சொத்து வாங்குதல் போன்ற பல பல அதிர்ஷ்டங்கள் உருவாகும். இதுவரை இருந்த மன கவலை, பிரச்சினைகள் மெல்ல குறையும். நிதி நிலைமை சிறப்பானதாக இருக்கும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம், லாபம் ஏற்படும்.

    கடகம்

    ராசிக்கு 7ம் இடமான மனைவி, தொழில், கூட்டாளி ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பது மிக சிறப்பானதாகும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபமும், ஒத்துழைப்பும் ஏற்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான அந்நியோன்னியம் அதிகரிக்கும். உங்களின் தொழில் போட்டிகள் குறையும். திருமண சுப காரியங்கள் நடக்கும். குழந்தை பேற்றுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதோடு சனியின் அமைப்பும் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும்.

    மேலும் படிக்க... அதிசார குரு பெயர்ச்சி காலம் எவ்வளவு? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்..

    கன்னி

    கன்னி ராசிக்கு 5ம் இடமான பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் குரு திரும்புவதால் உங்களுக்கு சொத்துக்கள் வாங்கவும், சொத்து தொடர்பான பிரச்னைகள் நீங்கி நன்மை ஏற்படும். நீங்கள் செய்த முதலீடுகளிலிருந்து லாபம் எதிர்பார்க்கலாம். சாதகமற்ற நிலையில் இருந்த உங்கள் தொழில், வியாபாரம், வேலை நம்பிக்கை தரக்கூடியதாக, யோகமாக மாறும்.

    மீனம்

    மீன ராசிக்கு 11ம் இடத்தில் குரு அமர்ந்திருக்கிறார். பலவகையில் ராஜ யோக பலனைத் தரக்கூடியதாக இருக்கும். உங்களின் ஆரோக்கியம் சிறக்கும். குடும்பத்தில் இருந்த மன கசப்புகள் நீங்கி நிம்மதி ஏற்படும். என்ன தான் குரு 11ல் நீச குருவாக இருந்தாலும் உங்களுக்கு லாபத்தைத் தருவதாக இருக்கும். மன நிம்மதி அதிகரிப்பதோடு, திருமணம், புத்திர பாக்கியம் போன்ற சுப காரியங்கள் எதிர்பார்க்கலாம்.

    மேலும் படிக்க... Pithori Amavasya 2021: பித்தோரி அமாவாசை என்றால் என்ன? அதன் சிறப்புகள் என்னென்ன?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: