ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

குரு பெயர்ச்சி 2021: இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம்தான் 

குரு பெயர்ச்சி 2021: இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம்தான் 

குருபகவான்

குருபகவான்

நவ கிரகங்களில் குரு பகவான் மிக முக்கியமானவர். குரு பார்வை கோடி நன்மை என்பர். குருவின் சஞ்சாரம், பார்வையால் சிலருக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். திருமணம் சுபகாரியம் நடைபெறும், நல்ல வேலை கிடைக்கும், சிலருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.  குரு தான் இருக்கும் இடத்தை விட, 2,5,7,9,11 ஆகிய இடங்களை பார்க்கும் போது மிக நல்ல பலன்களைத் தருவார். குருவின் பார்வைப் பெற்று அற்புத பலன்களைப் பெற உள்ள ராசிகளை இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ரிஷப ராசிக்கு 9ம் இடத்தில் குரு அமர்ந்திருப்பது அதிர்ஷ்ட குரு, பாக்கிய குரு என்பார்கள். இதனால் சுப காரியங்கள் கை கூடும். குழந்தை பாக்கியம், சொத்து வாங்குதல் போன்ற அதிர்ஷ்டங்கள் உருவாகும். இதுவரை இருந்த மன கவலை, பிரச்சினைகள் மெல்ல குறையும். நிதி நிலைமை சிறப்பானதாக இருக்கும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம், லாபம் ஏற்படும்.

  கடக ராசிக்கு 7ம் இடமான மனைவி, தொழில், கூட்டாளி ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பது மிக சிறப்பானதாகும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபமும், ஒத்துழைப்பும் ஏற்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான அன்பும், அந்நியோன்னியம் அதிகரிக்கும். உங்களின் தொழில் போட்டிகள் குறையும்.திருமண சுப காரியங்கள் நடக்கும். குழந்தை பேற்றுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதோடு சனியின் அமைப்பும் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும்.

  கன்னி ராசிக்கு 5ம் இடமான பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் குரு திரும்புவதால் உங்களுக்கு சொத்துக்கள் வாங்கவும், சொத்து தொடர்பான பிரச்னைகள் நீங்கி நன்மை ஏற்படும். நீங்கள் செய்த முதலீடுகளிலிருந்து லாபம் எதிர்பார்க்கலாம். சாதகமற்ற நிலையில் இருந்த உங்கள் தொழில், வியாபாரம், வேலை நம்பிக்கை தரக்கூடியதாக, யோகமாக மாறும்.

  தனுசு ராசிக்கு 2ம் இடமான குடும்ப, தன ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பது அற்புத பலனைத் தரும். ஏழரை சனி நடந்தாலும், உங்களுக்கு அதன் வீரியத்தைக் குறைக்கவும், உங்களின் சங்கடங்கள் தீருவதற்கான அற்புத அமைப்பாக இருக்கும். சனி, கேது, குரு ஆகிய முக்கிய கிரகங்களின் சாதக அமைப்பு சிறப்பான முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக இருக்கும். ராகுவால் கஷ்டங்களை அனுபவித்து வரும் நீங்கள் சற்று ஆறுதல் அடையக்கூடிய அமைப்பாக இருக்கும். குரு அருள் யோக பலனை அள்ளித்தரும்.

  மீன ராசிக்கு 11ம் இடத்தில் குரு அமர்ந்திருக்கிறார். பலவகையில் ராஜ யோக பலனைத் தரக்கூடியதாக இருக்கும். உங்களின் ஆரோக்கியம் சிறக்கும். குடும்பத்தில் இருந்த மன கசப்புகள் நீங்கி நிம்மதி ஏற்படும். என்ன தான் குரு 11ல் நீச குருவாக இருந்தாலும் உங்களுக்கு லாபத்தைத் தருவதாக இருக்கும். மன நிம்மதி அதிகரிப்பதோடு, திருமணம், புத்திர பாக்கியம் போன்ற சுப காரியங்கள் எதிர்பார்க்கலாம்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Gurupeyarchi, Gurupeyarchi 2021, Rasi Palan