• HOME
 • »
 • NEWS
 • »
 • spiritual
 • »
 • குரு பெயர்ச்சி 2021: இந்த ராசிகாரர்கள் குரு கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டுமாம்...

குரு பெயர்ச்சி 2021: இந்த ராசிகாரர்கள் குரு கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டுமாம்...

குரு பகவான்

குரு பகவான்

குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இதனால் ரிஷபம், கடகம், கன்னி,விருச்சிகம், கும்பம் மீனம் ராசிக்காரர்கள் குருபரிகார ஆலயங்களுக்கு சென்று பரிகாரம் செய்தால் பாதிப்பு குறையும் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது..

 • Share this:
  ஒரு ஆண்டுக்கு ஒரு முறை குரு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவார் என்பது ஜோதிட விளக்கம். அதன் நடுவே குரு அதிசாரமாக தான் இருக்கும் ராசிக்கு அடுத்த ராசிக்கு சென்று, பின்னர் வக்ர பெயர்ச்சியாக மீண்டும் தன் பழைய நிலை அடைவது வழக்கம். இங்கு குரு பகவான் கும்ப ராசியில் அமர்ந்திருப்பதன் அடிப்படையில் குரு நல்ல அதிர்ஷ்ட பார்வை பலனைப் பெறப்போகும் 6 ராசிகள் யார்? பரிகாரங்கள் செய்ய வேண்டிய ராசியினர் யார்? அவர்களுக்கான பலன் எப்படி இருக்கும் என்பதை பாற்றி தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

  அதிர்ஷ்ட பார்வை பலனைப் பெறப்போகும் ராசிகள்

  மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம் ஆகிய இந்த 6 ராசிகாரர்களும் நற்பலன்களை அடைவார்கள். நன்மை அடையும் ராசிகள் உள்ள ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் அருள் பூரணமாக இருந்தால், அவருக்குப் பெரும் பதவிகள் கிட்டும். குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். அதை வியாழ நோக்கம் என்கின்றனர். குரு பகவான் கோச்சாரத்தில் சுற்றி வரும் போது அவர் ஒரு ராசியை 5, 7, 9 ஆம் பார்வையாகப் பார்க்கும் நிலையை வியாழ நோக்கம் என்கின்றனர். குரு பார்க்க கோடி நன்மை.

  மனிதர்களை நல்வழிப்படுத்துவதில் குரு பகவானுக்கு நிகர் யாரும் இல்லை. அத்தனை சக்தி வாய்ந்தது குருவின் பார்வை. இவர் அமரும் வீட்டை விட பார்க்கும் வீட்டிற்குத்தான் யோகம் அதிகம். இந்த குரு பெயர்ச்சி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நிகழப்போகிறது. குரு அமருவதைப் பொறுத்தும் பார்வையைப் பொறுத்தும் இந்த 6 ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களை அடையப்போகிறார்கள்.

  பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகாரர்கள்

  ரிஷபம், கடகம், கன்னி,விருச்சிகம், கும்பம், மீனம் ஆகிய இந்த 6 ராசிக்காரர்கள் குருபரிகார ஆலயங்களுக்கு சென்று பரிகாரம் செய்தால் பாதிப்பு குறையும். தடைகள் நீங்கி புத்திரப்பேறு கிட்டுவது நிச்சயம். குருதிசை, குருபுத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள் குரு பரிகாரத்தலங்களில் தரிசனம் செய்யலாம். மேலும் வியாழக்கிழமை விரதம் கடைபிடித்தால், குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறலாம்.  சுப கிரகம் குருபகவான் பிரம்மனின் மானச புத்திரர்களின் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதாவுக்கும் பிறந்த ஏழாவது குழந்தை. அறிவிலே மேம்பட்டவர். தேவர்களின் குரு. இந்திரனுக்கு அமைச்சர். குரு பகவானை பிரகஸ்பதி என அழைப்பர். பிரகஸ்பதி என்றால் ஞானத் தலைவன் என்று பொருள். அமைச்சர், ஆசான், வியாழன் என இவருக்கு பல பெயர்கள் உண்டு. நவக்கிரகங்களில் பிரதானமான இவர் சுபக் கிரகர். சாத்வீகம் கொண்டவர். மஞ்சள் நிறமானவர் என்பதால், இவரை பொன்னன் என்றும் அழைக்கப்படுகிறார். தயாள குணம் கொண்டவர்.

  1.பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் சென்னை அருகில் பாடியில் வலிதாயநாதர் கோயில் குருபகவான் வழிபட்ட தலமாகும். இங்கு குருபகவான் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம். இது குருபகவானுக்கு சிறந்த பரிகார தலமாகும்.

  2. ராஜகுருவின் தரிசனம் தஞ்சை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம். தஞ்சாவூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மங்காம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவனும் இறைவியும் அருள்புரிந்து வருகின்றனர். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். குரு பகவானை வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

  குரு பெயர்ச்சி 2021 தொழில், குரு பெயர்ச்சி 2021 சிறப்பு பலன்கள், குரு பெயர்ச்சி 2021 உத்தியோகம், Retrograde Jupiter Enters Capricorn 2021, Jupiter Transit More Benefits, jupiter transit 2021 job, jupiter transit 2021 career, Jupiter Retrograde In Capricorn 2021, jupiter retrograde 2021 effects, Guru Vakra Nivarthi 2021, guru peyarchi palan 2021, Guru Peyarchi Palan 2020 - 21, Guru Peyarchi Job, Guru Peyarchi Career Benefits, Guru Peyarchi Career, guru peyarchi 2021 briefs benefits
  குரு பெயர்ச்சி


  3.தட்சிணாமூர்த்தி திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குரு பரிகார ஸ்தலமாகும். இத்தலம் பஞ்ச ஆரண்யத் தலங்களில் ஒன்றாகும். ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் பிரகாரத்தின் இடது புறம் தட்சிணாமூர்த்தியாக இங்கு குரு பகவான் அருள் புரிகிறார். தமது சீடர்களுக்கு 24 அட்சரங்கள் உள்ள மந்திரத்தை உபதேசித்தார் என்பதால், இவரை 24 முறை வலம் வந்து, 24 தீபங்கள் ஏற்றி வழிபடுகிறார்கள். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை சமர்பித்து முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து இந்தக் குரு பகவானை வழிபடுவது சிறப்பு.

  4.காசிக்கு நிகரான தலம் மயிலாடுதுறையில் கோயில் கொண்டுள்ள மயூரநாதரை குரு பகவான் வழிபட்டதாக ஐதீகம். இங்கு தட்சிணாமூர்த்தியாக அருள் பொழியும் குரு பகவானை வழிபட குரு தோஷங்கள் நிவர்த்தியாகும். காசிக்கு நிகரான ஆறு தலங்களில் மயிலாடுதுறையும் ஒன்று.

  5.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள பட்டமங்கலம் ஆலயங்களில் குருவிற்கு பரிகார பூஜைகள் செய்து வழிபடலாம். பட்டமங்கலத்தில் கிழக்கு நோக்கிய அனுக்கிரஹ தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். குரு பெயர்ச்சி நிகழப்போகும் இந்த நேரத்தில் நேரில் சென்று குரு பகவானை தரிசனம் செய்யலாம்.

  குரு


  6. திருக்குருகூர் - ஆழ்வார் திருநகரி நவதிருப்பதிகளுள் ஒன்றான ஆழ்வார்திருநகரி குரு ஸ்தலமாகும். இந்த ஸ்தலம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது. இந்த ஸ்தலத்தில் பாயும் தாமிரபரணி பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. நம்மாழ்வார் அவதரித்த பெருமை இந்த ஸ்தலத்திற்கு உண்டு. நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார்.

  7.திருச்செந்தூர் குரு, தட்சிணாமூர்த்தி குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில், இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் ஆகும். இங்குள்ள மேதா தெட்சிணாமூர்த்தியும் விசேஷமானவர். வலது கையில் சிவபெருமானுக்குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது.

  8.தாமிரபரணிக் கரையில் உள்ள நவ கைலாயங்களுள் ஒன்றான முறப்பநாடு தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ளது. இங்கே கைலாச நாதர் குருவின் அம்சமாக அமர்ந்துள்ளார். தாமிரபரணியில் நீராடி குருபகவானை வணங்க தோஷங்கள் நீங்கும். பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகமாகும். வியாழக்கிழமைகளில் சென்று பூஜை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

  மேலும் படிக்க... குரு பகவானின் வியாழக்கிழமை விரதமும் பலன்களும்

  குரு பெயர்ச்சி 2021 | ராஜயோகத்தை பெறபோகும் ராசிகாரர்கள் யார் தெரியுமா?

  குரு பெயர்ச்சி 2021: குரு பெயர்ச்சியின் இறுதி நிலையில் இந்த ராசியினர் பலவித பலன்களை பெறுவர்..

  குரு பெயர்ச்சி 2021 : இந்த ராசிகாரருக்கு இனி ராஜயோகம் தான்!           

  குரு பெயர்ச்சி பலன்கள் 2021: 12 ராசிகளுக்கான பொது பலன்கள்

  அதிசார குரு பெயர்ச்சி காலம் எவ்வளவு? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்..

  குரு, சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் 2021 - கும்ப ராசியினருக்கு எப்படி இருக்கும் தெரியுமா?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: