வக்ர நிவர்த்தியை அடைந்த குரு... அதிர்ஷ்டத்தை அள்ள போகும் ராசிகள்...

குரு

வருடத்திற்கு ஒரு முறை குரு பகவான் பெயர்ச்சி நடைபெற்றாலும் இடையில் அதிசாரமாகவும், வக்ரமாகவும் மற்ற ராசிகளுக்கும் குரு பகவான் பயணிப்பது உண்டு. அந்த வகையில் ஜூன் 20ஆம் தேதி முதல் கும்பத்தில் வக்கிர சஞ்சாரத்தில் துவங்கிய குரு பகவான் வரும் நேற்று வக்ர நிவர்த்தி பெற கும்பத்திலிருந்து மகரத்திற்கு சென்றார்.. மீண்டும் நவம்பர் 13ஆம் தேதி அதிகாலை கும்பத்திற்கு சென்று விடுவார். குருவின் இந்த மாற்றத்தினால் அதிர்ஷ்டம் அடைய போகும் ராசியினர் யார் யார் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம் வாங்க...

 • Share this:
  குரு ஒரு ராசியில் 12 மாதங்கள் பயணம் செய்வார். சில நேரங்களில் அதிசாரமாகவும், பின்னர் வக்ரகதியிலும் பயணம் செய்வார். குருவின் சஞ்சாரம், பார்வையால் சிலருக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். திருமணம் சுபகாரியம் நடைபெறும், நல்ல வேலை கிடைக்கும், சிலருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.

  அதிசாரமாக மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சென்ற குரு தற்போது வக்ர கதியில் மீண்டும் தன் பழைய நிலையான மகரத்திற்குத் செப்டம்பர் 14ஆம் தேதியான நேற்று திரும்பினார். குரு பகவான் கடந்த 2020 நவம்பர் 15ம் தேதி தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆனார். அதன் பின்னர் 2021 ஏப்ரல் 6ம் தேதி  தனது அதிசார பெயர்ச்சியால் கும்ப ராசிக்கு பெயர்ச்சியானார். அதன் பின்னர் குரு மீண்டும் மகரத்திற்கு திரும்புவதற்காக வக்ர கதி பெயர்ச்சியை 2021 ஜூன் 20 அன்று தொடங்கினார். இந்நிலையில் அக்டோபர் 18ம் தேதி மீண்டும் இயல்பான வேகத்தில் கும்பத்தை நோக்கிச் செல்வார். கும்ப ராசிக்கு முறையாக குரு 2021 நவம்பர் 13ம் தேதி பெயர்ச்சி ஆவார்.

  மகர ராசியில் நேர்கதியில் பயணம் செய்யும் குருபகவான் கார்த்திகை 4ஆம் தேதி நவம்பர் 20ஆம் தேதி சனிக்கிழமை இரவு 11.31 மணியளவில் நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார். சில மாதங்கள் கும்ப ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் பங்குனி மாதம் 29ஆம் தேதி ஏப்ரல் 12ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு மீன ராசியில் அதிசாரமாக பயணம் செய்யப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது...

  அதிசார குருபெயர்ச்சி என்றால் என்ன?

  பொதுவாக நவகிரகங்களில் சூரியன் மற்றும் சந்திரனை தவிர மற்ற அனைத்து கிரகங்களும் அவ்வப்போது அதிசார வக்ர நிலையினால் முன்னும், பின்னும் செல்ல வேண்டிய நிலை உண்டாகும். அந்த வகையில் தன்னைவிட அதிக ஈர்ப்பு விசை கொண்ட செவ்வாயை கடந்து செல்லும் போது ஈர்ப்பு விசையில் இருந்து காத்துக்கொள்ள குருபகவான் சாதாரணமாக நகரும் வேகத்தை விட 6 மடங்கு தனது வேகத்தை அதிகரித்து நகர தொடங்குவார் இதனை தான் அதிசார குரு பெயர்ச்சி என்று சொல்லப்படுகிறது.

  வக்ர நிலை குரு பெயர்ச்சி என்றால் என்ன?

  வக்கிர நிலை என்பது ஜோதிடத்தில் ஒரு கிரகம் பின்னோக்கி செல்வதை குறிக்கிறது. பொதுவாக கிரகங்கள் பின்னோக்கி செல்வதில்லை. ஆனால் பின்னோக்கி செல்வதனாலேயே வக்கிர நிலை ஏற்படுகிறது. எல்லா கிரகங்களும் அதனதன் பாதையில் முன்னோக்கி தான் சென்று கொண்டிருக்கின்றன. இருப்பினும் வக்கிர நிலையை நாம் அறிவியல் படி பார்க்கும் போது, நாம் தினமும் சூரியன் உதயமாகவும், மறைவதைப் பார்க்கிறோம். ஆனால் உண்மை என்னவென்றால் சூரியன் ஒரே இடத்தில் இருக்கிறது. ஆனால் பூமி தான் முன்னோக்கிச் சுழன்று கொண்டே இருப்பதால் தான் சூரிய உதயம், மறைவு நிகழ்கிறது.

  இப்படி வக்கிர கதி நிலை அடையும் போது ஒரு கிரகம் தான் கொடுக்க வேண்டிய பலனுக்கு அப்படியே எதிராக கொடுக்க நேரிடும். அதாவது சுப கிரகம் நன்மை செய்வதற்குப் பதிலாக கெடு பலன் கொடுப்பது அல்லது எந்த பலனும் தராமல் போதல் நிகழ்வும், அசுப கிரகம் நல்ல பலன்கள் தரக் கூடிய நிலை கூட இருக்கும்.

  இதில் ராகு - கேது நிழல் கிரகங்களுக்கு மட்டும் வக்ர கதியைத் தவிர நேர்கதியே கிடையாது. அதே சமயம் சூரியன் மற்றும் சந்திர கிரகங்களுக்கு வக்ர கதி கிடையாது.

  வக்ர நிவர்த்தியான குரு தரும் பலன்கள்

  தற்போது குரு வக்ர கதியில் மீண்டும் மகர ராசிக்கே நேற்று செப்டம்பர் 14ஆம் தேதி திரும்பியுள்ளார். கும்ப ராசிக்கு முறையாக குரு 2021 நவம்பர் 13ம் தேதி பெயர்ச்சி ஆவார். ஜோதிடத்தில் குரு அதிர்ஷ்டத்திற்கான கிரகம் என்பார்கள். நல்ல அதிர்ஷ்டம், ஆரோக்கியம் மற்றும் நிறைந்த செல்வம் ஆகியவற்றை நிறைவாகத் தர வல்லவர். ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் குரு வலுவாக இருப்பின் அந்த நபருக்கு எந்த ஒரு கடின நிலையில் குருவின் அற்புத பலனால் நிலையான பலன்களைத் தான் பெறுவார்கள்.

  மகரத்தில் சனி பகவானுடன், செப்டம்பர் 14ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை குரு பகவானுடன் பலவீனமான நிலையில் இருப்பதால், இந்த குரு பெரியளவில் நேர்மறையான பலன் தர இயலாத இடத்தில் அமர்ந்துள்ளார்.

  செல்வ யோகத்தை அள்ளி தரும் கஜலட்சுமி விரதம்!

  அதிர்ஷ்டம் அள்ள போகும் ராசிகள்

  குரு பகவான் தன் நேரடி சுப பார்வைகள் 5, 7, 9 ஆகிய இடங்களுக்கு அற்புத பலனைத் தரக்கூடிய பார்வையால் பார்ப்பார். அதோடு 2, 11 ஆகிய இடங்களை தனது சூட்சம பார்வையால் நற்பலனை வழங்குவார். அதே சமயம் குரு தான் அமர்ந்திருக்கும் 1 (ஜென்ம ராசி), 3,4,6,8,10,12 ஆகிய இடங்களுக்குக் குறைவான நன்மை அல்லது அதிக பாதிப்புக்களைத் தருவார் எனலாம்.

  அந்த வகையில் குருவின் சுப பார்வையால் பல அடைய போகும் ராயினர், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகள் அற்புத பலனை அடுத்த இரண்டு மாதங்களுக்கு பெறுவர்...

  மேலும் படிக்க... குரு பெயர்ச்சி 2021: குரு பெயர்ச்சியின் இறுதி நிலையில் இந்த ராசியினர் பலவித பலன்களை பெறுவர்..

  பரிகாரம் இல்லாத தோஷங்கள் என்னென்ன?

  திருப்பதியில் பெருமாளை இப்படிதான் வணங்க வேண்டுமாம்!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vaijayanthi S
  First published: