• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • குருப்பெயர்ச்சி 2021 - 22 | துலாம் ராசி பலன்கள் - காழியூர் நாராயணன்

குருப்பெயர்ச்சி 2021 - 22 | துலாம் ராசி பலன்கள் - காழியூர் நாராயணன்

துலாம்

துலாம்

துலாம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன்.

  • Share this:
    சிறந்த நண்பர்களையும், நல்ல உறவினர்களையும் கொண்ட துலாம் ராசி நண்பர்களே! நீதி நேர்மையுடன் நீங்கள் நடக்க விரும்புவீர்கள். மனதில் சரி என்று பட்டதை மறைக்காமல் வெளியிடும் மனப்பக்குவம் கொண்டவர்கள். உங்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிகசிறப்பாக அமையும். இது வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருந்து பல்வேறு இன்னலை தந்திருப்பார்.அவர் குடும்பத்தில் பல பிரச்சினைகளை உருவாக்கி இருப்பார். உறவினர்களிடையே வீண்விரோதம் வந்திருக்கும்.

    கணவன்-மனைவி இடையே பிணக்குகள் ஏற்பட்டு இருக்கும்.தூரத்து உறவினர் வகையில் விரும்பதகாத சம்பவங்களும் நடந்து இருக்கலாம். இந்தநிலையில் இப்போது குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்துக்கு செல்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்திவைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில்
    வளம் காணலாம்.

    மேலும் அவரது 5,7-ம் இடத்துப்பார்வைகள் சாதகமாக அமையும். இதனால் மேலும் நன்மைகள் அதிகரிக்கும். ஆனால் அவர் 2022 ஏப்ரல் 14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 6-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை.அவரால் உடல்நலம் பாதிக்கப்படும். மனதில் தளர்ச்சி ஏற்படும். சனிபகவான் 4-ம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. சனிபகவான் வீண்விரோதத்தை கொடுப்பார். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். இதைக்கண்டு அஞ்ச வேண்டாம். சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலம் நன்மை
    கிடைக்கும்.

    மேலும் சனிபகவான் ஜுன்6-ந் தேதி முதல் அக்டோபர் 25-ந் தேதி வரை வக்கிரம் அடைகிறார். வக்கிர காலத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. சாதகமற்ற கிரகம் செயல்பட முடியாமல் போவது உங்களுக்கு சாதகம்தானே. ராகு தற்போது 8-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவர் உறவினர்கள் வகையில் சிற்சில பிரச்சினைகளை உருவாக்கலாம். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். உங்கள் முயற்சிகளில் தடைகளையும் உருவாக்கலாம்.

    21-3-2022 அன்று ராகு 7-ம் இடமான மேஷத்திற்கு வருகிறார். இதுவும்
    சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. இங்கு அவரால் இடப்பெயர்ச்சியையும், அவப்பெயரையும் சந்திக்க நேரலாம். சிலர் கெட்டவர்களோடு சேரும் சூழ்நிலை உருவாகும். யாரிடமும் கவனமாக பழகவேண்டும். தற்போது கேது 2-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவரால் நன்மை தர இயலாது.

    அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. அரசின் வகையில் சிக்கல் வரலாம். 21-3-2022 அன்று கேது உங்கள் ராசிக்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் பழைய கெடுபலன்கள் இனி இருக்காது. அவர் சிறுசிறு தடையையும், உடல் உபாதையையும் தரலாம். இனி விரிவான பலனை காணலாம் சாதகமான நிலை உருவாகும். காரிய அனுகூலம் ஏற்படும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தம்பதியினரிடையே அன்பு பெருகும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்கள் மூலம் பண உதவி கிடைக்கும்.

    வீட்டுக்கு தேவையான சகல வசதிகள் கிடைக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதிய வீடு வாங்கலாம். அல்லது தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபோகலாம். வண்டி வாகனங்கள் வாங்கலாம். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டில் ஒற்றுமை ஏற்படும். உறவினர்கள் உங்களை நாடி வருவர். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு அலைச்சல் இருக்கும்.வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. இல்லை யென்றால் வீண்மனஉளைச்சலுக்கு ஆளாவீர்கள்.

    உத்தியோகம் குரு உயர்வை தருவார். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். முக்கிய கோரிக்கைகளை வைக்கலாம். கோரிக்கைகள் நிறைவேறும். சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவர்.

    2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். அரசுஊழியர்கள் வேலையில் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். உங்கள் பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். அச்சகம், பத்திரிகை, பப்ளிகேசன், கட்டுமான ஆலோசகர் போன்ற
    தொழில் நல்ல வளர்ச்சியை அடையும்.பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.

    2022ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள். வாடிக்கையாளரை அதிக முயர்ச்சி எடுத்து தக்கவைக்க வேண்டியது இருக்கும். புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். எதையும் ஒன்றுக்கு 10 முறை சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. இருப்பினும் சனியின் 3-ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்திருப்பதால் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படமாட்டீர்கள். நம்பிக்கையுள்ள நண்பர்கள்,

    பெரியோர்கள் ஆலோசனையுடன் தொழிலில் முன்னேற்றம் காணலாம். அரசுவகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எது எப்படியானாலும் குருவின் 9-ம் இடத்துப் பார்வை பலத்தால் அவை அனைத்தையும் முறிடிக்கும் வல்லமை கிடைக்கும். கலைஞர்கள்: வசதியுடன் வாழ்வர் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ், பாராட்டு வரும். அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். பதவியும், பணமும் கிடைக்கும்.2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு எதிலும் விடா முயற்சி வேண்டும்.

    பொதுநலசேவகர்கள், அரசியல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும்.மாணவர்கள் வெற்றி பெறுவர். விரும்பிய பாடங்களை பெறுவர். ஆசிரியர்களின் அறிவுரை பயன் உள்ளதாக இருக்கும். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. ஜாதகத்தில் நல்ல தசை, புத்தி நடந்தால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

    விவசாயிகள்: மஞ்சள், தக்காளி, பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும்.பால்பண்ணை தொழில், ஆடு,கோழி, பசு, கால்நடை வகையில் நல்ல வருமானத்தை பெறுவர்.2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டும். அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். பெண்கள் குடும்பத்தில் சிறப்பு பெறுவர். குதூகலம் அதிகரிக்கும்
    நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவரின் அன்பு கிடைக்கும். உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும்.

    பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும்.வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தில் உங்களின் அனுகுமுறை கண்டிப்பாக தேவைபடும். வீண்செலவு ஏற்படலாம் கவனமாக இருப்பது புத்திசாலித்தனம். தோழிகளால் உதவி கிடைக்கும். உடல் நலம்
    சிறுசிறு உபாதைகள் வரலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: