• HOME
 • »
 • NEWS
 • »
 • spiritual
 • »
 • குருப்பெயர்ச்சி 2021 - 22 | சிம்மம் ராசி பலன்கள் - கணித்தவர் காழியூர் நாராயணன்

குருப்பெயர்ச்சி 2021 - 22 | சிம்மம் ராசி பலன்கள் - கணித்தவர் காழியூர் நாராயணன்

சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்கள்

சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்கள்

சிம்மம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன்.

 • Share this:
  பெரிய மனிதர்களின் நட்பும், சுகவாசமும் பெற்று விளங்கும் சிம்ம ராசி அன்பர்களே! நீங்கள் சூரியனைப் போல பிரகாசத்துடன் காணப்படுவீர்கள். மற்றவர்களிடமிருந்து தனித்துவத்தை பெற்றிருப்பீர்கள். உங்களின் செயல்பாடுகள் உங்களை முன்னிலைப்படுத்தும் இப்படிப்பட்ட குணநலன்களை கொண்ட உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சிறப்பாக அமையும். குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருந்தார்.அவர் மனநிம்மதியை இழக்க செய்திருப்பார். உங்கள் நிலையில் இருந்து தடுமாறத்தை உண்டுபண்ணியிருப்பார். பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும். வீண்பகையும், விரோதமும் உருவாகியிருக்கும். பல்வேறு தொல்லைகளை அனுபவித்து இருப்பீர்கள். இப்போது குருபகவான்6-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்திற்கு செல்வது மிகவும் உயர்வான நிலை.

  மேலும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. குரு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுபநிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வை தருவார்.குருபகவான் 2022 ஏப்ரல் 14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 8-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அப்போது குரு மனவேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார்.

  வீண் விரோதத்தை உருவாக்குவார். நிழல் கிரகமான ராகு தற்போது உங்கள் ராசிக்கு 10-ம் இடமான ரிஷபத்தில் இருப்பது சிறப்பான இடம் இல்லை. அவரால் சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறுகள் வரலாம். அவர் 21-3-2022 அன்று 9-ம் இடமான மேஷத்திற்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது.ஆனால் பலாபலன்கள் மாறுபடும். உங்கள் திறமையில் இருந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. அவரால் காரியத்தில் சிற்சில தடைகளை உருவாக்கலாம். எதிரிகளின் இடையூறு தலைதூக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். கேது தற்போது 4-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார்.

  இந்த இடத்தில் இருக்கும் போது அவரால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். உடல் நலம் பாதிப்பு வரலாம். வயிறு பிரச்சினை வரும். ஆனால் எந்த பிரச்சினையையும் முறியடிக்கும் வல்லமையை பெறலாம். அவர் 21-3-2022 அன்று 3-ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம். அங்கு அவர் நற்பலனை தருவார். அவர் இறை அருளையும், பொருள் உதவியையும் கொடுப்பார். மேலும் உடல் உபாதைகளை குணமாக்குவார்.

  மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வசதி இருக்கும். புதிய வீடுமனை வாகனம் வாங்கலாம். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.அதுவும் நல்ல வரனாக அமையும். கணவன்மனைவி இடையே அன்பு இருக்கும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு வீண் விவாதங்களை தவிர்க்கவும். அனாவசிய செலவைத் தவிர்க்க வேண்டும்.

  குருபகவான் சிற்சில இன்னலை கொடுப்பார். குறிப்பாக குடும்பத்தில் குழப்பமும், பிரச்சினைகளும் வரலாம். கணவன்-மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர்கள் வகையில் மனக்கிலேசம் வரலாம். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம். இருப்பினும் குருவின் 9-ம் இடத்துப் பார்வையால் அண்டைவீட்டார்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.

  உத்தியோகம் சிறப்பான பலனை பெறலாம். குருவின் பலத்தால் மேன்மை காண்பர். சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். முக்கிய கோரிக்கைகளை வைக்கலாம்.கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் சேருவர்.  சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம்.

  வேலையின்றி இருக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. வக்கீல்கள் எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படலாம். வியாபாரிகள் போட்டியாளர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள்.உங்கள் ஆற்றல் மேம்படும். வியாபாரத்தை பெருக்கி கொள்ளலாம். பணப் புழக்கம் அதிகரிக்கும். போதிய லாபம் கிடைக்கும்.

  எதிர்பாராத வகையில் பணம் சிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொண்டாலும் அது அனுகூலமான பலனைத்தரும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.தங்கம்,வெள்ளி,வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். சிலர் வியாபாரத்தை விரிவுப்படுத்துவர். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். பத்திரிகை தொழில், தானிய வியாபாரம், தங்கம், மற்றும் உலோக வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

  வங்கிகடன் எளிதாக கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். தரகு,கமிஷன் தொழில் சிறப்பாக நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.கூட்டாளிகள் வகையில் இருந்து வந்த இடையூறு, அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு முதலியன மறையும்.
  2022 மார்ச் 21-ந் தேதிக்கு பிறகு கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். லாபம் சிறப்பா இருக்கும்.கலைஞர்களுக்கு அவப்பெயர், போட்டிகள் முதலியன மறையும். புதிய ஒப்பந்தங்கள் பெறுவர். புகழ்,பாராட்டு கிடைக்கும்.

  அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்க பெறலாம். மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். மதிப்பெண்கள் அதிகரிக்க தொடங்கும். போட்டிகளில் வெற்றி காணலாம். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும்.காலர்ஷிப் போன்றவை கிடைக்கும். செப்டம்பர் 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு தீவிர முயற்சி எடுத்தால்தான் முன்னேற்றம் காண்பர். சிலர் தகாத சேர்க்கையால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். எனவே அந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

  விவசாயத்தில் பாசிபயறு,நெல், எள், உளுந்து, கொண்டைக்கடலை, மஞ்சள், பழவகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல மகசூலைத் தரும். கால்நடை பசுவளர்ப்பு போன்ற வற்றில் வருவாய் கிட்டும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சிலருக்கு சாதகமான தீர்ப்பு வந்து கை விட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பெண்கள் திருப்திகரமாக வாழலாம். பிரச்சினைகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தினரிடம் நன்மதிப்பு பெறுவர். திருப்திகரமாக வாழலாம்.

  தோழிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.

  வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும் வியாபாரம் செய்யும் பெண்கள் அதிக லாபத்தை பெறுவர்.  2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு குடும்பத் தேவைக்காக அதிகமாக பாடுபட வேண்டிய திருக்கும். பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும் . பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். உடல்நலம் மேம்படும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vijay R
  First published: