Home /News /spiritual /

குருப்பெயர்ச்சி 2021 - 22 | மனவேதனை, வீண்விரோதம் விலகும் - ரிஷபம்

குருப்பெயர்ச்சி 2021 - 22 | மனவேதனை, வீண்விரோதம் விலகும் - ரிஷபம்

ரிஷபம் குருப்பெயர்ச்சி பலன்கள்

ரிஷபம் குருப்பெயர்ச்சி பலன்கள்

ரிஷபம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன்.

  மிகவும் அமைதியாக காணப்படும் ரிஷப ராசி அன்பர்களே! உங்களின் வசீகர தன்மை பிறரை எளிதில் கவரும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் வல்லமை படைத்தவர்கள். பார்க்க சாதுவாக இருந்தாலும் தன்னம்பிக்கையும், பிறர்பால் அன்பும் கொண்டவர்கள்.இதுவரை குருபகவான் 9-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருந்தார். குறிப்பாக எடுத்த காரியத்தில் பல்வேறு வெற்றிகளை தந்திருப்பார். இப்போது குருபகவான் 10-ம் இடத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார்.இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. முன்பு போல் அவரால் நல்ல பலன்களை அள்ளிதர முடியாது. பொதுவாக 10-ம் இடத்தில் இருக்கும் குருபகவான் பொருள் நஷ்டத்தையும், மனசஞ்சலத்தையும் ஏற்படுத்துவார்.

  குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப்பார்வை மிக சிறப்பாக இருக்கிறது. அதன்மூலம் எந்த இடையூறையும் உடைத் தெறிந்து முன்னேற்றம் காணலாம்.மேலும் அவர் 2022 ஏப்ரல் 14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 11-ம் இடமான மீனராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். அப்போது அவரால் பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். சனிபகவான் தற்போது 9-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவரால் உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம், எதிரிகளால் பிரச்சினை வரலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வையால் நன்மை கிடைக்கும்.

  மேலும் ஜுன்6-ந் தேதி முதல் அக்டோபர் 25-ந் தேதி வரை வக்கிரம் அடைகிறார். அவர் வகிக்ரம் அடைந்தாலும் மகர ராசியிலேதான் இருக்கிறார். சனிபகவான் வக்கிரம் அடைவதால் உங்களுக்கு கெடுபலன்கள் நடக்காது. ராகு உங்கள் ராசியில் இருக்கிறார்.இது சிறப்பான இடம் இல்லை. இங்கு அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்கள் முயற்சிக்கு பலன் இல்லாமல் போகலாம். ஆனால் ராகுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 3-இடமான கடகத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்.

  இதன்மூலம் அவர் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தருவார். அவர் 21-3-2022 அன்று உங்கள் ராசிக்கு 12-ம் இடமான மேஷத்திற்கு செல்கிறார். இதுவும் சுமாரான நிலைதான். இங்கு அவரால் நற்பலனை தரஇயலாது. பொருள் விரயத்தையும், தூரதேச பயணத்தையும் கொடுப்பார். கேது தற்போது 7-ம் இடத்தில் இருப்பதால் மனைவி வகையில் பிரச்சினையையும், அலைச்சலையும் தரலாம்.வீண்மனவேதனை உருவாகலாம். எதிரிகளால் பிரச்சினை வரலாம். 21-3-2022அன்று அவர் 6-ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். அங்கு அவர் நற்பலனை தருவார். பின்தங்கிய நிலை அடியோடு மறையும்.

  மேலும் பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். இனி விரிவான பலனை காணலாம் மேற்கண்ட நிலையை பார்க்கும் போது குரு,சனி பார்வைகள் சிறப்பாக அமைந்துள்ளன. எனவே இந்த பெயர்ச்சி உற்சாகமகா அமையும். உங்கள் முயற்சியில் தடைகள் வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். மனதில் இருந்த உளைச்சல் மறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். தடைகள் பல குறுக்கிட்டாலும் உங்களின் தீவிர முயற்சியால் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

  செலவு அதிகரிக்கும். கணவன்-மனைவி ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகையிலும் அவ்வளவு அனுகூலம் காணப்படவில்லை. சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர்.2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். பொருளாதார வளத்தை அதிகரிக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம்.

  வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. வேலைப்பளு அதிகமாக இருக்கும். மேல்அதிகாரிகளிடம் சற்று அனுசரித்து போகவும் அதிகமாக போராடியே கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள்.உங்கள் வேலையை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. சிலருக்கு வேலையில் வெறுப்பு வரும். சிலர் வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணம் தோன்றும். குருவின் பார்வை பக்கபலமாக இருப்பதால் எந்த விபரீதவிளைவும் ஏற்பட்டுவிடாது. 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு குருவால் உத்தியோகம் சிறப்படையும். தடைகள், திருப்தியின்மை போன்றவை மறையும். புதிய பதவி கிடைக்கும். உத்தியோகத்தில் மதிப்பு
  அதிகரிக்கும்.

  பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சகஊழியர்கள் உறுதுணையாக இருப்பர். வியாபாரம் வளர்முகமாக இருக்கும். பண விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். இருப்பினும் குரு பார்வையால் எடுத்த எல்லாக் காரியங்களையும் சிறப்பாக செய்து முடிக்கலாம். செலவுகள் வந்தாலும் அதை ஈடுகட்டும் அளவுக்கு வருமானம் இருக்கத்தான் செய்யும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.சிலர் வியாபாரத்தை விரிவுப்படுத்துவர்.

  வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதியதொழில் தொடங்கலாம். சேமிப்பு பணத்தை நிரந்தர சேமிப்பு கணக்கில் போடுவது சிறப்பு. நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும். பங்குவர்த்தகம் நல்ல லாபத்தை தரும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.மேலும் சனிபகவானின் 10-ம் இடத்துப்பார்வையால் இடையூறுகள் அடியோடு மறையும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும்.

  வக்கீல்கள் தொழிலில் சிறந்து விளங்குவர். எழுத்தாளர்கள் நல்ல புகழை காண வாய்ப்புண்டு. கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்திற்காக அதிக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனைக் காணலாம். பொதுமக்களிடையே நற்பெயர் கிடைக்கும். மாணவர்கள்:அசட்டையாக இருந்து விட வேண்டாம். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு முன்னேற்ற நிலையில் காணப்படுவர். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம்.

  வழக்கு விவகாரங்கள் சுமாராகத்தான் இருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். சமரசபேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பது நல்லது. 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு மஞ்சள் மொச்சை, கடலை, நெல் போன்ற தானியங்கள் நல்ல மகசூலை கொடுக்கும். மானாவாரி பயிர்களில் நல்ல வருமானம் காணலாம். பசுவளர்ப்பு மூலம் நல்ல வருமானத்தை காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். பெண்கள் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. சிற்சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. ஆடம்பர பொருள் வாங்குவதை தவிர்க்கவும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். உங்ளால்

  குடும்பம் சிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு குறையும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் முயற்சி செய்தால் வேலை கிடைக்க வாய்ப்யு இருக்கிறது சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். உடல் நலம் கேதுவால் சிற்சில பாதிப்புகள் வந்தாலும் நொடிப்பொழுதில்
  மறைந்துவிடும்.
  Published by:Vijay R
  First published:

  Tags: Gurupeyarchi 2021

  அடுத்த செய்தி