• HOME
 • »
 • NEWS
 • »
 • spiritual
 • »
 • குருப்பெயர்ச்சி 2021 - 22 | குடும்பத்தில் சந்தோஷம், தொழிலில் சுணக்கம்- மிதுனம்

குருப்பெயர்ச்சி 2021 - 22 | குடும்பத்தில் சந்தோஷம், தொழிலில் சுணக்கம்- மிதுனம்

, மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்கள்

, மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்கள்

மிதுனம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன்.

 • Share this:
  நல்ல பேச்சுவன்மையும் சிறந்த எண்ணமும் கொண்ட மிதுன ராசி அன்பர்களே! நீங்கள் எப்போதும் கலகலப்பாக இருப்பீர்கள். ஆச்சாரங்களை கடை பிடித்து வருவீர்கள். தெய்வ நம்பிக்கை உடைய நீங்கள் செய்யும் தொழிலில் கண்டிப்பும், கண்ணியமும் உடையவர்கள். சொந்த திறமையால் முன்னேற்றம் அடைய நினைப்பவர்கள். இதுவரை குருபகவான் உங்கள்
  ராசிக்கு 8-ம் இடத்தில் இருந்து வந்தார். இது சிறப்பான நிலை அல்ல என்று சொல்வதைவிட கொடூரமான நிலை என்றே சொல்லலாம். 8-ல் குரு இருக்கும் போது பல்வேறு இன்னல்களை தந்திருப்பார்.

  குறிப்பாக மனவேதனைஅதிகமாக உங்களை வாட்டியிருக்கும். பொருளாதாரத்தில் திடீர்சரிவுகள் ஏற்பட்டிருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனுகூலமாக இருந்திருக்க மாட்டார்கள். வீண்விரோதம் உருவாகியிருக்கலாம். இந்த நிலையில் குருபகவான் 9-ம் இடமான கும்ப ராசிக்கு செல்கிறார்.இது மிகச்சிறப்பான இடம். இதுவரை அவரால் பட்ட இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். இவை அனைத்தும் குருவால் கிடைக்கும் நற்பலன்கள். இது தவிர குருவின் 9-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக இருக்கும்.

  இதன் மூலமும் நற்பலன்கள் டைக்கும். குருபகவான் 2022 ஏப்ரல்14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 10-ம் இடமான மீனராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம்இல்லை. அப்போது குரு பொருள் நஷ்டத்தையும், மனசஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். சனிபகவான் தற்போது 8-ம் இடமான மகர ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் அல்ல. அஷ்டமத்தில் சனியால் எப்படி நன்மை தர முடியும்? இங்கு அவர் உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். அக்கம்பக்கத்தினர்கள் வகையில் மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர்செல்லும் நிலை உருவாகும்.

  இவையெல்லாம் அஷ்டமத்து சனியின் பொதுவான பலன்தான். ஆனால் இந்த கெடுபலன்கள் அப்படியே நடக்கும் என்று கவலைகொள்ள வேண்டாம். காரணம் ஜுன்6-ந் தேதி முதல் அக்டோபர்25-ந் தேதி வரை சனிபகவான் வகிக்ரத்தில் உள்ளார். இந்த காலக்கட்டத்தில் சனியின் பலம் சற்று குறையும். அவரால் கெடுபலன்கள் நடக்காது. நிழல் கிரகமான ராகு தற்போது உங்கள் ராசிக்கு 12-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இது சுமாரான நிலைதான். இங்கு அவரால் நற்பலனை தரஇயலாது. பொருள் விரயத்தையும், தூரதேச பயணத்தையும் கொடுப்பார்.21-3-2022அன்று அவர் இடம் மாறி 11-ம் இடமான மேஷத்திற்கு செல்கிறார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும்.

  பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். கேது 6-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இது உங்களுக்கு உகந்த இடம். அங்கு அவர் நற்பலனை தருவார். மேலும் பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். அவர் 21-3-2022 அன்று 5-ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம் இல்லை. இந்த இடத்தில் அவர் அரசு வகையில் சிற்சில பிரச்சினையை தரலாம். மேலும் திருட்டு பயமும் ஏற்படலாம். இனி விரிவான பலனை காணலாம் கேதுவால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். காரிய அனுகூலம் ஏற்படும்.

  குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். மதிப்பு,மரியாதை சிறப்பாக இருக்கும். உற்சாகம் பிறக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மனைவி வகையில் இருந்து வந்த ஊடல் மறையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு சிற்சில சிரமங்களை பொறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் வளமான வாழ்வை காணலாம். செலவுகள் அதிகமாக இருக்கும். சிக்கனம் தேவை.கணவன்-மனைவி ஒருவருக் கொருவர் விட்டு கொடுத்து போக வேண்டும். சிலரது வீடுகளில் பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு.

  அக்கம் பக்கத்தினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். உறவினர் வகையில் வீண்பகை உருவாகலாம். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். விருப்பமான இடமாற்றத்தை முயற்சி செய்து பெற்று விடவும். தனியார்துறையில் வேலைபார்ப்பவர்கள் வேலைபளு குறையும். தடைகள், திருப்தியின்மை போன்றவை மறையும். சகபெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய பதவி தேடிவரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். சம்பளஉயர்வு வரும்.

  எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்கு இந்தகாலம் உன்னதமாக இருக்கும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். சிலர் அதிக செலவை சந்திக்க வேண்டியதிருக்கும். வியாபாரம் வளர்ச்சி இருக்கும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். லாபம் அதிகரிக்கும். பண வரவுக்கு பஞ்சம் இருக்காது. குருவால் வங்கிகடன் எளிதாக கிடைக்கும். அரசு வகையில் அனுகூலம் காணப்படுகிறது. பெண்களை பங்குதாரராக கொண்ட வணிகம் சிறப்படையும்.

  பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். சிலர் வணிகம் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் நல்ல வளத்தைக் காணலாம். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு புதிய முதலீடு விஷயத்தில் அதிக கவனம் தேவை. நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். கலைஞர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். புதிய ஒப்பந்தங்கள்  கிடைக்கும்.

  அரசியல்வாதிகள்,பொதுநல சேவகர்கள் முன்னேற்றம் காணலாம். புதிய பதவி தேடி வரும். மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.காலர்ஷிப் போன்றவை கிடைக்கும். ஆசிரியர்களின் உதவி பயன்உள்ளதாக அமையும். விவசாயத்தில் பாசிபயறு நெல், கொள்ளு,துவரை, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். கோழி,ஆடு வளர்ப்பில் நல்ல வருமானத்தை பெறுவர். பசு மற்றும் கால்நடைகள் வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

  புதிய சொத்து வாங்கு வதற்கான அனுகூலம் உண்டு. வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிப்பர். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். திருமணம் ஆகாமல் நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். கணவன்மனைவி இடையே அன்பு பெருகும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.  மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.

  புத்தாடை, அணிகலன்கள் வாங்கி குவிப்பர். பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் வரும். அண்டை வீட்டார்கள் உதவிகரமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும்.பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
  உடல் ஆரோக்கியம் மேம்படும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vijay R
  First published: