Home /News /spiritual /

குருப்பெயர்ச்சி 2021 - 22 | புதிய தொழலில் யோகம், தடைகள் நீங்கும் - மேஷம்

குருப்பெயர்ச்சி 2021 - 22 | புதிய தொழலில் யோகம், தடைகள் நீங்கும் - மேஷம்

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

மேஷம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன்.

  சூரியனை உச்சமாக கொண்ட மேஷ ராசி அன்பர்களே! நீங்கள் எதிலும் மதியை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். செவ்வாயே உங்கள் ஆட்சி நாயகன். எனவே இந்த பூமி மீது உங்களுக்கு அளவற்ற பாசம் இருக்கும். இதுவரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடமான மகர ராசியில்இருந்து பல்வேறு பிரச்சினைகளை தந்துகொண்டிருந்தார். அவர் பொருள் இழப்பையும், வறுமையயும் தந்திருப்பார். சிலர் பதவி இழக்கும் நிலைக்கு ஆளாகி இருப்பர். இந்த நிலையில் இப்போது குருபகவான் 11-ம் இடமான கும்ப ராசிக்கு வந்து உள்ளார். இது மிகவும் சிறப்பான இடம் ஆகும். அவர் பலவிதத்தில் வெற்றியை தந்து
  பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச்செய்வார்.

  மேலும் அவரின் 7 மற்றும் 9-ம் இடத்து பார்வைகள் சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலமும் பல்வேறு நன்மைகள் பெறலாம். ஆனால் அவர் 2022 ஏப்ரல் 14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 12-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் பொருள் நாசம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் நீங்காத வருத்தம் உருவாகும். வீண்அலைச்சல் ஏற்படும். சனிபகவான் 10-ம் இடத்தில் உள்ளார். இதனால் தொழிலில் சிறுசிறு பின்னடைவுகள் ஏற்படலாம். உடல் உபாதைகள் லேசாக நோக செய்யலாம். இதை கண்டு நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம். காரணம் ஜுன்6-ந் தேதி முதல் அக்டோபர்25-ந்தேதி வரை வக்கிரம் அடைகிறார்.

  அவர் வகிக்ரம் அடைந்தாலும் மகர ராசியிலேதான் இருக்கிறார். எந்த கிரகமும் வக்கிரத்தில் சிக்கும் போது அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சாதகமற்ற நிலையில் இருக்கும் சனிபகவான் வக்கிரம் அடைந்தால் உங்களுக்கு கெடுபலன்கள் நடக்காது அல்லவா? இன்னும் சொல்லப்போனால் அவரால் நன்மையே கிடைக்கும். நிழல்கிரகமான ராகு 2-ம் இடமான ரிஷபத்தில் உள்ளார்.இது சிறப்பான இடம் இல்லை. இங்கு அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்சினையையும், தூரதேச பயணத்தையும் ஏற்படுத்துவார். பொருட்களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படும். அதற்காக கவலை கொள்ள தேவை இல்லை காரணம்.ராகுவின் பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான கும்பத்தில் விழுகிறது.

  இது சிறப்பான அம்சமாகும். ராகு 21-3-2022 அன்று உங்கள் ராசிக்கு மாறுகிறார். இதுவும் சுமாரான நிலைதான். இங்கு அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்கள் முயற்சிக்கு பலன் இல்லாமல் போகலாம். கேது 8-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் இல்லை. இங்கு கேதுவால் விபத்து பயம், செயல்முடக்கம், உடல்நலக்குறைவு முதலியன வரலாம். உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம்.அவர் 21-3-2022 அன்று 7-ம் இடத்திற்கு மாறுகிறார். இதுவும் உகந்த இடம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் எட்டாமிடத்தில் இருந்தது போல் கெடு பலன்கள் நடக்காது. 7-ல் கேது இருக்கும் போது மனைவி வகையில் பிரச்சினையையும், மன உலைச்சலையும் தரலாம்.

  வீண்மனவேதனை உருவாகலாம். எதிரிகளால் பிரச்சினை வரலாம். இனி விரிவான பலனை காணலாம் மேற்கண்ட நிலையை பார்க்கும்போது குருவால் நற்பலன்கள் கிடைக்கும். குருபகவானின் பார்வையாலும் முன்னேற்றம் காணலாம். எடுத்த காரியங்கள் தங்கு தடையின்றி நிறைவேறும். பணப் புழக்கம் சற்று அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை கூடும். பொருளாதார வளம் சீராக இருக்கும். ஆனால் 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. எந்த ஒரு காரியத்தையும் சற்று சிரத்தை எடுத்தே முடிக்க வேண்டியது இருக்கும். மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும் வீண்விவாதங்களை தவிர்க்கவும்.

  திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே இருந்து அன்பும் பாசமும் கிடைக்கும். பண வரவு இருக்கும். சொந்தபந்தங்கள் உங்களுக்கு  உதவிகரமாக இருப்பர். சகோதரிகளால் சிறப்பான பலனை பெறுவர். புதிய வீடு கட்டலாம். ஆனால் அதற்காக கடன் வாங்க வேண்டியதிக்கும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு பெரியோர்களின் ஆலோசனையை அவ்வப்போது கேட்பது நல்லது. கணவன்-மனைவி இடையே பொறுமையும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் தேவை.

  உத்தியோகத்தில் சீரான முனனேற்றம் காணலாம். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். சிலர் இழந்த பதவியை மீண்டும் கிடைக்க பெறுவர். சலுகைகள் கிடைப்பதில் எந்த தடையும் ஏற்படாது. கோரிக்கைகள் நிறைவேறும். சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு வேலைப்பளு அதிகரிக்கும். வேலையில் பளு இருந்தாலும் அதற்கான பலன் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். சிலர் எதிர்பாராத வகையில் இடமாற்றம் காண்பர். முதலில் அது பிடிக்காததாக இருந்தாலும் போகப்போக அது உகந்ததாக அமையும். வேலை நிமித்தமாக சிலருக்கு குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரியும் நிலை உருவாகலாம். சம்பள உயர்வு வழக்கம் போல் இருக்கும். வியாபாரம்: வியாபாரத்தில் முன்னேற்றத்துக்கான வழி கிடைக்கும்.

  பணப் புழக்கம் இருக்கும். குரு தொழில் விருத்தியை தருவார். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். புதியதொழில் தொடங்க நினைப்பவர்கள் தங்கள் எண்ணத்தை நிறைவேற்றவும். புதிய தொழில் அனுகூலத்தை கொடுக்கும். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும். அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு லாபம் கிடைக்கும்.

  அதேநேரம் செலவும் அதிகரிக்கும். கஷ்டப்பட்டு முன்னேற வேண்டியது இருக்கும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். வியாபாரம் விஷயமாக வெளியூர் பயணம் சென்று வருவர். யாரிடமும் கவனமுடன் பழகவும். எதிலும் பணத்தை முதலீடு செய்வதைவிட அறிவை பயன்படுத்தி வருவாயை தேடவேண்டும். சிலர் தொழில் நிமித்தமாக இருப்பிடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியது வரலாம். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்காது.

  கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மறையும்.அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர். பொருளாதார வளம் இருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு சிரத்தை எடுத்தால்தான் ஒப்பந்தங்கள் வரும். எதிர்பார்த்த புகழ்,பாராட்டு கிடைக்காமல் போகலாம். அதே நேரம் பணவிஷத்தில் எந்த பின்னடைவும் இருக்காது.

  மாணவர்கள் நல்ல வளர்ச்சி காண்பர். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும். விரும்பிய பாடத்தை பெறலாம். போட்டிகளில் வெற்றி காணலாம்.சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் ஏற்படும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. விவசாயம் விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடை வளர்ப்பில் வருவாய் கிடைக்கும்.கிழங்கு வகைகள், நிலக்கடலை,மற்றும் பழவகைகள், காய்கறி வகைகள் போன்றவை மூலம் அதிக வருமானத்தை காணலாம்.

  2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு புதிய சொத்து முயற்சியின் பேரில் வாங்கலாம். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். முன்னேறத்துடன் காணப்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கணவனின் அன்பு கிடைக்கும்.

  வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. கணவரின் அன்பு கிடைக்கும். வாழ்க்கையில் ஆனந்தம் அதிகரிக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வந்து சேரும். சகோதரிகளால் உதவி கிடைக்கும். உடல்நலம் பூரண குணம் அடைவர்.
  Published by:Vijay R
  First published:

  Tags: Gurupeyarchi 2021

  அடுத்த செய்தி