• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • குருப்பெயர்ச்சி 2021 - 22 | மகரம் ராசி பலன்கள் - கணித்தவர் காழியூர் நாராயணன்

குருப்பெயர்ச்சி 2021 - 22 | மகரம் ராசி பலன்கள் - கணித்தவர் காழியூர் நாராயணன்

மகரம்

மகரம்

மகரம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன்.

  • Share this:
    உயர்ந்த ஆடைகளை அணிய விரும்பும் மகர ராசி அன்பர்களே!
    சமுதாயத்தில் நன் மதிப்போடு வாழவே நீங்கள் விரும்புவீர்கள். மனைவியிடம் நல்அன்பை செலுத்துவீர்கள். அவர்களின் நல்ல கருத்துக்களை மனமுவந்து ஏற்றுக்கொள்வீர்கள். பிள்ளைகள் இடத்திலும் அன்பு செலுத்துவீர்கள். இந்த குருபெயர்ச்சி பல முன்னேற்றங்களை தரும். குருபகவான் இதுவரை உங்கள் ராசியில் இருந்து சிற்சில இன்னலை கொடுத்திருப்பார். குறிப்பாக குடும்பத்தில் குழப்பமும், பிரச்சினைகளும் வந்திருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் ஏதேனும் ஒரு பிரச்சினையை
    சந்தித்து கொண்டே இருந்திருப்பர்.

    இந்த நிலையில் தான் குருபகவான் 2-ம் இடமான மகர ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான அம்சம். இதுவரை குருவால் ஏற்பட்டு வந்த இடர்பாடுகள் அனைத்தும் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவிவந்த குழப்பத்திற்கு விடுதலை கிடைக்கும். மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம் .பகைவர்களின் சதி உங்களிடம்
    எடுபடாது.  அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். ஆனால் அவர்
    2022 ஏப்ரல் 14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 3-ம் இடமான மீன
    ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் முயற்சியில் தடை ஏற்படும். அதற்காக கவலைகொள்ள தேவை இல்லை காரணம்.

    குருவின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால்
    உற்சாகம் பிறக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும்.உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. சனிபகவான்உங்கள்ராசியில் இருக்கிறார்.உடல்நலம் பாதிக்கப்படலாம். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். உறவினர்கள் வகையில் வீண் மனக்கசப்பு வரலாம். வெளியூர் வாசம் இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. அதைக் கண்டு அஞ்ச வேண்டாம்.

    காரணம் சனிபகவானின் 3-ம் இடத்துப் பார்வை சிறப்பாக
    அமைந்துள்ளது. இந்த பார்வையால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். தற்போது ராகு உங்கள்ராசிக்கு 5-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார்.
    இது சிறப்பான இடம் அல்ல. அவர் இன்னல்களையும், இடையூறுகளையும் தரலாம். குழப்பத்தை உருவாக்கலாம்.மனதில் ஏனோ இனம்புரியாத வேதனை ஆட்டிப் படைக்கலாம்.21-3-2022 அன்று ராகு 4-ம் இடமான மேஷத்திற்கு வருகிறார். இந்த இடமும் ராகுவுக்கு சாதகமானது அல்ல என்பதால் அலைச்சலையும், சிற்சில பிரச்சினையையும் உருவாக்கலாம்.

    கேது உங்கள் ராசிக்கு 11-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார்.
    இது சிறப்பான இடம் .அவர் நல்ல வளத்தையும்,  உடல் ஆரோக்கியத்தையும் கொடுப்பார். குடும்பத்தில் மேன்மையை கொடுப்பார். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலையும் அவர் கொடுப்பார். மகிழ்ச்சி அதிகரிக்கும். அவர் 21-3-2022அன்று 10-ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். இது சிறப்பானது என்று சொல்லமுடியாது. இங்கு அவர் உடல்
    உபாதைகளை தரலாம். எதிரிகளின் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. பயணத்தின் போது கவனம் தேவை. ஆனால் கேது பிற்பகுதியில் காரிய அனுகூலத்தைப் கொடுப்பார்.

    இனி விரிவான பலனை காணலாம் : பொருளாதார வளத்தில் எந்த குறையும் இருக்காது. நல்ல பணப்புழக்கம் ஏற்படும். உங்கள் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பகைவர்களின்
    தொல்லையில் சிக்கி அலைக்கழிந்தவர்கள் இனி தைரியமாக செயல்படும் ஆற்றல் பெறுவீர்கள். சனிபகவான் சாதகமற்ற இருப்பதால் பெரியோர்களின் ஆலோசனையை அவ்வப்போது கேட்பது நல்லது. குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும்.எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். வசதிகள் பெருகும்.

    உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும் அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். குருவால் ஏற்பட்ட மனக்கவலை ஏற்படும்.சுறுசுறுப்பு அற்ற நிலை, இருப்பிட மாற்றம், வீண்அலைச்சல் முதலியன மறையும். குடும்ப நிலைமை மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே உள்ள பிரச்சினை மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை
    கிடைக்கும். வீட்டில் நிலவிய திருட்டு சம்பவங்கள் மறையும்.

    உத்தியோகத்தில் உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வேலைப்பளு குறையும். மேல்அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். தனியார் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லோன்எளிதில் கிடைக்கும். சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். ஆசிரியர்களுக்கு வேலைப்பளு, வீண் மனக்கவலை மறையும். உங்கள் திறமை பளிச்சிடும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு நீங்கள்
    எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.

    வேலைப்பளு அதிகரிக்கும். மேல்அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. வியாபாரம் சீராக நடைபெறும். உழைப்புக்கு தகுந்த லாபம் இருக்கும். நம்பிக்கையுள்ள நண்பர்கள், பெரியோர்கள் ஆலோசனையுடன் தொழிலில் முன்னேற்றம் காணலாம். வெளியூர் பயணம் சிறப்பை தரும்.பணப்புழக்கம்
    அதிகரிக்கும். அச்சகம், பத்திரிகை, பப்ளிகேசன், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில் நல்ல வளர்ச்சியை அடையும். பகைவர்களின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கினாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள்.

    வீண்விரையம் தடைபடும்.வங்கி கடன் எளிதாக கிடைக்கும். புதியதொழில் ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.நல்ல வருமானத்தை பெறுவர். பெண்கள் வகையில் அனுகூலம் கிட்டும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். தரகு, கமிஷன் தொழிலில் தடையின்றி முன்னேறலாம். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு சிலரிடம் வீண் விரோதம் வர வாய்ப்பு உண்டு.

    எனவே யாரிடமும் எச்சரிக்கையுடன் பேசவும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும். சமுகநல சேவகர்கள் எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் வளர்ச்சி காண்பர். முக்கிய பொறுப்பு கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ் பாராட்டு போன்றவை கிடைக்கும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு புதிய ஒப்பந்தத்திற்காக அதிக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆசிரியரின் ஆலோசனை நல்ல வழியை காட்டும். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.

    குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் பின்தங்கிய நிலைக்கு தள்ளமாட்டீர்கள். விவசாயம் புதிய சொத்து முயற்சியின் பேரில் வாங்கலாம்.கோழி,ஆடு வளர்ப்பில் நல்ல வருமானத்தை பெறுவர். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு.மஞ்சள்,எள், கரும்பு,
    கொள்ளு,துவரை, கொண்டைக்கடலை போன்ற பயிர்களில் சிறப்பான மகசூலை பெறலாம். பெண்கள் உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.

    பணப்புழக்கம் அதிகரிக்கும். பின்னடைவுகள் மறையும்.
    சுபநிகழ்ச்சிகள் கைகூடும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.அவர்களால் பண வரவு இருக்கும். பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுயதொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும்.2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: