• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • குருப்பெயர்ச்சி 2021 - 22 | கும்பம் ராசி பலன்கள் - கணித்தவர் காழியூர் நாராயணன்

குருப்பெயர்ச்சி 2021 - 22 | கும்பம் ராசி பலன்கள் - கணித்தவர் காழியூர் நாராயணன்

கும்பம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன்.

  • Share this:
    மதிப்பும், மரியாதையோடு வாழ விரும்பும் கும்ப ராசி அன்பர்களே!
    பிறரின் சிறுகுறைகளை கூடநீங்கள் பொறுக்க மாட்டீர்கள். பிறர் உங்களை பெருமையாக பேசவே விரும்புவீர்கள். பிறர் உதவியை நாடாமல் முன்னேற நினைப்பவர்கள். பெண்களின் அன்பை எளிதில் பெற்று விடுவீர்கள். குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் இருந்தார். அவர் பல்வேறு இடையூறுகளை கொடுத்து இருப்பார். பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு இருக்கும்.சிலரது வாழ்க்கையில் துக்ககரமான சம்பவமும் நிகழ்ந்து இருக்கலாம்.

    தற்போது குருபகவான் உங்கள் ராசிக்கு அடியெடுத்து வைத்துள்ளார். இதுவும் அவ்வளவு சிறப்பான இடம் என்று
    சொல்ல முடியாது. ஆனாலும் அவர் 12-ம் இடத்தில் இருந்தது போல
    கெடு பலன்களை செய்யமாட்டார். குரு1-ம் இடத்தில் இருக்கும் போது
    கலகம் விரோதம் வரும் என்றும் மந்தநிலை ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவது உண்டு. ஆனாலும் கவலைபட வேண்டாம். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. மேலும் அதிகநாட்கள் அவர் இங்கு இருக்க மாட்டார்.

    2022 ஏப்ரல் 14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 2-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். அவரால் உங்களது ஆற்றல் மேம்படும். இதுவரை இருந்த மந்தநிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம்.பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது.அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். சனிபகவான் தற்போது 12-ம் இடமான மகர ராசியில் இருக்கிறார். அவரால் பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும்.

    எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம் என்பது ஜோதிட வாக்கு. இதனால் நீங்கள் அஞ்ச வேண்டாம். காரணம் சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும்சனியின் 7-ம் இடத்துப்பார்வை கடகத்தில் விழுகிறது. இது சிறப்பான இடம். மகர ராசியில் இருக்கும் சனிபகவான் ஜுன்6-ந் தேதி முதல் அக்டோபர் 25-ந் தேதி வரை வக்கிரம் அடைகிறார். அவர் வக்கிரம் அடைந்தாலும் மகர ராசிக்குள்ளேயே இருக்கிறார். இந்த காலத்தில் அவர்
    கெடுபலன்களை தரமாட்டார்.

    ராகு 4-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இந்த இடம் ராகுவுக்கு
    சாதகமானது அல்ல என்பதால் அலைச்சலையும், சிற்சில பிரச்சினையையும் உருவாக்கலாம்.அவர் 21-3-2022 அன்று இடம் பெயர்ந்து 3-ம் இடமான மேஷத்திற்கு வந்து பல்வேறு நன்மைகளை தரஉள்ளார். குறிப்பாக காரியஅனுகூலத்தையும், நற்சுகத்தையும், பொருளாதாரவளத்தையும் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில்விருத்தியையும் கொடுப்பார். கேது 10-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இது சிறப்பானது என்று சொல்ல முடியாது. இங்கு அவர் உடல் உபாதைகளை தரலாம்.

    எதிரிகளின் தொல்லை ஏற்படும்.சிலரதுவீட்டில் பொருட்கள்களவு போக வாய்ப்பு உண்டு. பயணத்தின் போது கவனம் தேவை. அவர் 21-3-2022 அன்று 9-ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். அதுவும் சிறப்பான இடம் அல்லதான்.ஆனால் அவரால் இருந்து வந்த உடல் உபாதைகள் குணம் அடையும். அதேநேரம் கேதுவால் பொருள் இழப்பையும், காரிய தோல்வியையும் காணலாம். அவரால் பொருள் நஷ்டம் வரலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.

    இனி விரிவான பலனை காணலாம் : முக்கிய கிரகங்கள் எதுவுமே சாதகமான நிலையில் இல்லை. குழப்பம் நிலவும். மனக்கவலை ஏற்படும். கணவன்- மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதியவீடு, மனை வாங்க அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டியதிருக்கும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. கவனம் தேவை.2022ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தடைபட்டு வந்த
    திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.

    தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். சகோதரிகளால் பொருள் சேரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். உத்தியோகம் குருவின் பார்வையால் முன்னேற்றத்தை காணலாம். சகபெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். இருப்பினும் வேலைப் பளு இருக்கும். வேலையில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம்
    ஏற்படும்.

    அரசு வேலையில் இருப் பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு வேலைப்பளு குறையும். உங்கள் திறமை பளிச்சிடும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். சிலர் பக்கத் தொழில் செய்து வருவாயை அதிகரிக்க செய்வர். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். பின்தங்கிய நிலை இனி இருக்காது. பதவி உயர்வு கிடைக்கும்.

    வியாபாரிகள் குருவின் பார்வையால் வருமானம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் சாதக பலனை கொடுக்கும். லாபம் கிடைக்க அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள்.மறைமுக பகைவர்களால் அவ்வப்போது இடையூறுகள் வரலாம்.புதிய தொழில் தொடங்க அதிக பணம் போடவேண்டாம். பண  முதலீட்டைவிட அறிவு மூதலீட்டை போட்டு தொழில் ஆரம்பிக்க வேண்டும். பொருள்விரயம், பணமாயம் போன்றவை நிகழலாம். குடும்ப பிரச்சினையை
    மறந்து தொழில் செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் காணலாம்.

    2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு இடையூறை முறியடிப்பீர்கள். குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். கலைஞர்களுக்கு குருவின் பார்வையால் புகழ் பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.

    2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும். மற்றும் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். சமூகநல சேவகர்களுக்கு மதிப்பு, மரியாதை கூடும். விருது போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் சிறப்பான நிலையில் காணப்படுவர். முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் மனதில் தளர்ச்சி ஏற்படும். குருவின் பார்வையால் ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு சிறப்பான பலனை பெறுவர். நல்ல மதிப்பெண் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறலாம். காலர்ஷிப் போன்றவை
    கிடைக்கும்.

    விவசாயிகளுக்கு ப ôசி பயறு , ம ôனாவ ôரி பயி ர்கள் , துவû ர ,
    கொண்டைக்கடலை, சோளம், மஞ்சள், பழவகைகள் நல்ல மகசூலை
    கொடுக்கும். பசுவின் மூலம் வருவாய் பெறலாம். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். 2022 மார்ச் 21-ந் தேதிக்கு பிறகு புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.

    பெண்கள் குடும்பத்தில் உங்களின் அனுகுமுறை கண்டிப்பாக தேவைபடும். வீண் செலவு ஏற்படலாம் கவனமாக இருப்பது புத்திசாலித்தனம். குருவின்பார்வையால் சுபநிகழ்ச்சியை தருவார். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சாதகமான காற்று வீசும். வேலையில் ஆர்வம் பிறக்கும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு குரு,ராகுவால் குதூகலமான பலனை கொடுபார். கணவரின் அன்பு கிடைக்கும். உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும்.

    பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சியை காண்பீர்கள். சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். உடல் நலம் சுமாராக இருக்கும். கேதுவால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: