• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • குருப்பெயர்ச்சி 2021 - 22 | கன்னி ராசி பலன்கள் - கணித்தவர் காழியூர் நாராயணன்

குருப்பெயர்ச்சி 2021 - 22 | கன்னி ராசி பலன்கள் - கணித்தவர் காழியூர் நாராயணன்

கன்னி குருப்பெயர்ச்சி பலன்கள்,

கன்னி குருப்பெயர்ச்சி பலன்கள்,

கன்னி ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன்.

  • Share this:
    மென்மையான அணுகுமுறையைகொண்ட கன்னி ராசி அன்பர்களே! உங்களது பண்பும்,நீதியும் நேர்மையும் எல்லோரையும் மிக எளிதில் கவரும். பொதுவாக நல்ல செல்வாக்கும், செல்வமும் படைத்தவர்களாக இருப்பீர்கள். மென்மையான பேச்சும், நல்ல குணநலமும் கொண்டவர்கள் நீங்கள்.உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சுமாரான நிலைதான். இதுவரை குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்தார். அவரால் குடும்பம் மேம்பட்டிருக்கலாம். நல்ல பணப்புழக்கத்தை தந்திருப்பார்.

    திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைத்திருப்பார். பிள்ளைகளால் பெருமை கிடைத்திருக்கும். பெண்களால் எண்ணற்ற முன்னேற்றத்தை அடைந்திருப்பீர்கள். இந்த நிலையில் இப்போது குரு பெயர்ச்சி நடக்கிறது. குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து 6-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. 5-ம் இடத்தில் இருந்தது போன்ற நன்மைகளை அவரால் கொடுக்க முடியாது.

    அதேநேரம் மிகவும் பிற்போக்கான பலனையும் அவர் தரமாட்டார்.பொதுவாக 6-ம் இடத்தில் இருக்கும் குரு உடல்நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார் என்பது ஜோதிடவாக்கு. ஆனாலும் அதற்காக கவலை கொள்ளவேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும்
    அவரது9-ம் இடத்துபார்வை மிகவும் சாதகமாக காணப்படுகிறது. குருவின் பார்வை மூலம் எந்த இடையூறுகளையும் தடுத்து நிறுத்தலாம்.குருபகவான் 2022 ஏப்ரல் 14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 7-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார்.இது சிறப்பான இடம். அவர் மகிழ்ச்சியை அதிகரித்து சுபநிகழ்ச்சியை தருவார்.

    செல்வாக்கு மேம்படும்.பணப்புழக்கம் அதிகரிக்கும்.
    தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும்.
    உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வை தருவார். தற்போது சனிபகவான் 5-ம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. சனிபகவான் குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகளை தருவார் குழப்பத்தை உருவாக்கலாம். மனதில்
    ஏனோ இனம் புரியாத வேதனை குடிகொள்ளலாம். அவர் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளன.

    இதனால் நன்மைகள் கிடைக்கும். ராகு தற்போது 9-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார்.இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. காரியத்தில் சிற்சில தடைகளை உருவாக்கலாம். எதிரிகளின் இடையூறு தலைதூக்கும்.பிறருக்குகட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். அவர் 21-3-2022 அன்று 8-ம் இடமான மேஷத்திற்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவர் உறவினர்கள் வகையில் சிற்சில பிரச்சினைகளை உருவாக்கலாம். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும்.

    உங்கள் முயற்சிகளில் தடைகளையும் உருவாக்கலாம். ஆனால் உங்கள் திறமையில் இருந்த பின்தங்கிய நிலை இருக்காது. கேது தற்போது 3-ம் இடமான விருச்சிக ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம். அங்கு அவர் இறை அருளையும், பொருள் உதவியையும் கொடுப்பார். மேலும் உடல் உபாதைகளை குணமாக்குவார். 21-3-2022 அன்று கேது 2-ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம் அல்ல. இனி அவரால் நன்மை தர இயலாது. அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது.

    அரசின் வகையில் சிக்கல் வரலாம். இனி விரிவான பலனை காணலாம் தெய்வ அனுகூலம் கிடைக்கும் என்பதால் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், சிறப்பாகவும் அமையும். எதையும் வெற்றிகரமாக முடித்து காரிய அனுகூலத்தை காணலாம். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஆன்மிக ஆன்றோர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும். குரு சாதகமற்ற இடத்தில்
    இருப்பதால் அக்கம் பக்கத்தினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம்.
    சற்று ஒதுங்கி இருக்கவும். மன உளச்சல், உறவினர் வகையில் வீண்பகை உருவாகலாம்.

    கணவன்-மனைவி இடையே சிற்சில மனக்கசப்புகள் வரலாம். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு வீட்டில் ஒற்றுமை ஏற்படும். உறவினர்கள் உங்களை நாடி வருவர். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். வீட்டுக்கு தேவையான சகல வசதிகள் கிடைக்கும். புதியவீடு வாங்கலாம். அல்லது தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபோகலாம். வண்டி வாகனங்கள் வாங்கலாம்.

    உத்தியோகம்:  போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். அரசு ஊழியர்கள்முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு அலைச்சல் இருக்கும். சிற்சில தடைகளை மீறித்தான் அனுகூலம் பிறக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். வேலையில் வெறுப்பு வரலாம்.

    மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.சிலருக்கு எதிர்பாராத வகையில் மாற்றம் ஏற்படலாம். வழக்கமாக கிடைக்க வேண்டிய பதவிஉயர்வு, சம்பளஉயர்வுக்கு தடையேதும் இல்லை.2022ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.ஆசிரியர்களுக்கு குருஉயர்வை தருவார். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர்.

    வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். அரசின் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு வெளியூர் பயணம் ஏற்படலாம். நமக்கு ஏது எதிரிஎன்று அசட்டையாக இருந்து விடாதீர்கள். மறைமுக பகைவர்களால் அவ்வப்போது இடையூறுகள் வரலாம். எனவே அவர்கள் பக்கம் ஒரு கண் இருப்பது நல்லது.

    பணவிரயம் ஆகலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை
    ஒப்படைக்க வேண்டாம். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு அச்சகம்,
    பத்திரிகை, பப்ளிகேசன், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில் நல்ல வளர்ச்சியை அடையும். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.நல்ல வருமானத்தை பெறுவர். தரகு,கமிஷன் தொழில் விருத்தி அடையும்.
    அரசியல்வாதிகள், பொதுநல தொண்டர்கள் எதிர்பார்த்த பதவி
    கிடைக்கும்.கலைஞர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்காது.

    கவுரவத்தை இழக்காவண்ணம் இருப்பர்.2022ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு வசதியுடன் வாழ்வர் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் .புகழ்,பாராட்டு வரும். மாணவர்களுக்கு 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு வெற்றி கிட்டும். மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். கெட்ட சகவாசத்திற்கு விடைகொடுப்பர். குருவால் சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் ஏற்படும்.

    விவசாயிகள் சிறப்பு காண்பர். நெல், கோதுமை, பழவகைகள், கடலை போன்ற பயிர்களில் அதிக வருமானத்தைக் காணலாம். ஆடு, கோழி, பசு,கால்நடை வகையில் நல்ல வருமானத்தை பெறுவர்.2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு புதியசொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். பெண்கள் சிற்சில விஷயங்களில் விட்டுகொடுத்து போகவும். பெரியோர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது. பெண் காவலர்கள்
    உன்னத பலனை எதிர்பார்க்கலாம். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.

    2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சகோதரர்கள் மிக உறுதுணையாக
    இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: