• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • குருப்பெயர்ச்சி 2021 - 22 | கடகம் ராசி பலன்கள் - கணித்தவர் காழியூர் நாராயணன்

குருப்பெயர்ச்சி 2021 - 22 | கடகம் ராசி பலன்கள் - கணித்தவர் காழியூர் நாராயணன்

குருப்பெயர்ச்சி

குருப்பெயர்ச்சி

கடகம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன்.

  • Share this:
    சாமர்த்தியமாக பேசும் வல்லமை படைத்த கடக ராசி அன்பர்களே!குழந்தைகளிடம் நீங்கள் காட்டும் அன்பு அபரீதமானதாக இருக்கும். தாய் தந்தையரிடமும் நல்ல அன்பு கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சிறப்பாக அமையும். இதுவரை குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருந்தார். உங்கள் செல்வாக்கு உயர்ந்திருக்கும். நினைத்ததை நிறைவேற்றி இருப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரித்திருக்கும். தேவைகள் பூர்த்தியாகி இருக்கும். பொருளாதார வளம் மேம்பட்டிருக்கும்.வீடு மனை வாங்கி இருப்பீர்கள்.அல்லது வசதியான வீட்டிற்கு குடிபுகுந்து இருப்பீர்கள். சிலர் வாகனம் வாங்கி இருக்கலாம்.

    இந்த நிலையில் இப்போதுகுரு 8-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல.8-ம் இடத்தில் இருக்கும் குருபகவான் பொதுவாக மனவேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண்விரோதத்தை உருவாக்குவார். பல்வேறு தொல்லைகளை கொடுப்பார் என்பது பொதுவான ஜோதிட வாக்கு. ஆனால் இதனை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது. அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும்.எனவே குரு சாதகமற்ற நிலையில் இருக்கிறாரே என்று நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். அவர் 2022 ஏப்ரல் 14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 9-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார்.

    இது சிறப்பான இடம். அப்போது குருவால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.  உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.பின்னடைவுகள் மறையும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தற்போது சனிபகவான் 7-ம் இடமான மகர ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் அல்ல.

    பொதுவாக இந்த இடத்தில் இருக்கும் போது சனி குடும்பத்தில் பல்வேறு பிரச்சினையை உருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும். தீயோர் சேர்க்கையால் அவதியுறலாம் என்பது பொதுவான பலன்கள். இதைக் கண்டு அஞ்ச வேண்டாம். சனிபகவான் ஜுன்6-ந் தேதி முதல் அக்டோபர்25-ந் தேதி வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலங்களில் வக்கிரம் அடைந்தாலும் மகர ராசியில்தான் இருக்கிறார். பொதுவாக சனிபகவானால் நன்மைதர இயலாது. ஆனால் வக்கிரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சனிபகவான் வக்ரத்தில் சிக்கும் போது கெடுபலன்களை தரமாட்டார் மாறக நன்மையே தர ஆயத்தமாவார்.

    தற்போது ராகு 11-ம் இடமான ரிஷபத்திதில் இருக்கிறார். இங்கு அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். ராகு 21-3-2022 அன்று ராகு உங்கள் ராசிக்கு 10-ம் இடமான மேஷத்திற்கு செல்வது சிறப்பான இடம் இல்லை. அவரால் சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறுகள் வரலாம். அவர் பொருள் இழப்பையும், சிறுசிறு உடல் உபாதைகளையும் கொடுப்பார்.

    கேது தற்போது 5-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் இல்லை. இந்த இடத்தில் அவர் அரசு வகையில் சிற்சில பிரச்சினையை தரலாம். மேலும் திருட்டு பயமும் ஏற்படலாம். உடல் நலப் பாதிப்பையும், பிள்ளைகளால் பிரச்சினையையும் தரலாம். அவர் 21-3-2022 அன்று 4-ம் இடமான துலாம்ராசிக்கு வருகிறார். அவரால் சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். உடல்நலம் பாதிப்பு வரலாம். வயிறு பிரச்சினை வரும். ஆனால் பிற்பகுதியில் எந்த பிரச்சினையையும் முறியடிக்கும் வல்லமையை பெறலாம்.

    இனி விரிவான பலனை காணலாம் :  குருவின் பார்வை மற்றும் ராகுவால் எடுத்த எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிக்கலாம்.ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பீர்கள்.
    மதிப்பு,மரியாதை சிறப்பாக இருக்கும்.பெண்களால் அனுகூலம் கிடைக்கும். வசதிகள் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். உறவினர்கள் வகைகளில் அன்னியோனியம் நிலவும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். உத்தியோகத்தில் வேலைபளு இருந்தாலும் அதற்கான பலன் கிடைக்கும். வழக்கமான சம்பளஉயர்வு, சலுகைகள் கிடைப்பதில் எந்த தடையும் ஏற்படாது. அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். 2022ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும்.

    பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும். ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்க பெறுவர். வேலையின்றி இருக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியகள் ஆகியோருக்கு இந்த காலம் உன்னதமாக இருக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு தடைகள், திருப்தியின்மை போன்றவை மறையும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். வியாபாரம் அரசிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைப்பது அரிது.

    அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பொருட்களை களவு கொடுக்க நேரிடும். சிறுசிறு தடைகள் வரலாம். வாடிக்கையாளரை அதிக முயர்ச்சி எடுத்து தக்கவைக்க வேண்டியது இருக்கும் மேலும் பணவிஷயத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு சிறப்படையும். நஷ்டம் இருக்காது. கணினித்தொழில், பத்திரிகை, இரும்பு, அச்சு தொடர்பான தொழில்களும், தரகு, பழைய பொருட்களை வாங்கிவிற்பது போன்ற தொழில்களும் சிறந்து விளங்கும்.

    வயதால் மூத்த பெண்கள் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவுவார்கள். அதன் மூலம் வளர்ச்சியை அடையலாம். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்கலாம். ஆனால் அதற்கு பணமுதலீட்டைவிட அறிவை பயன்படுத்தி ஆரம்பிக்க வேண்டும். கலைஞர்கள் சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு காரியத்தடை, பொருள்நஷ்டம், அவப்பெயர், போட்டிகள் முதலியன மறையும். உங்கள் முன்னேற்றத்துக்கு பெண்கள் மிகவும் உறுதுனையாக இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

    அரசியல்வாதிகள் முன்னேற்றம் காணலாம். பதவியும்,பணமும் கிடைக்கும். பொது மக்களிடத்தில் நல்ல செல்வாக்கும், பாராட்டும் கிடைக்கும்.சமூகநல சேவகர்களுக்கு சாதகமான காற்று வீசும். புதிய பதவி கிடைக்கப் பெறுவர். மக்களிடையே நற்பெயர் கிடைக்கும். வசதியுடன் வாழ்வர். மகிழ்ச்சியுடன் காணப்படுவர். மாணவர்கள் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டியது இருக்கும். இருப்பினும் குருவின் பார்வை பலமாக இருப்பதால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்காமல் போகாது. 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு சிறப்பைக் காணலாம்.காலர்ஷிப் போன்றவை கிடைக்கும். தேர்வுகளில் வெற்றி கிட்டும். கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்.வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு பெறலாம்.

    விவசாயிகள் நல்ல வளத்தை காணலாம். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு பாசிபயறு நெல், உளுந்து, துவரை, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். புதிய சொத்து வாங்கலாம். கோழி,ஆடு வளர்ப்பில் நல்ல வருமானத்தை பெறுவர். வழக்குவிவகாரங்கள் சாதகமாக இருக்கும். பண்கள் முக்கிய காரியங்களை குடும் பù பரி யோர்களின் ஆலோசனையின் பேரில் நிறைவேற்றவும். வேலைப்பளு இருக்கும்.

    வேலையில் கவனம் தேவை. 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு திருமணம் கைகூடும். கணவரின் அன்பு கிடைக்கும். குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். பிள்ளைகளால் பெருமை காணாலாம். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பணஉதவி கிடைக்கும். மேலும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் பணப்புழக்கம் இருக்கும்.அண்டை வீட்டார்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். உடல் நலம் சிறப்பாக இருக்கும்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: