Home /News /spiritual /

குரு பெயர்ச்சி 2021: பொருளாதாரம், வானிலை, அரசியல் குறித்த பொதுபலன்கள்!

குரு பெயர்ச்சி 2021: பொருளாதாரம், வானிலை, அரசியல் குறித்த பொதுபலன்கள்!

குரு பகவான்

குரு பகவான்

வரவிருக்கும் குருபெயர்ச்சியால் நடக்கபோகும் பொதுபலன்கள் என்னென்ன என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

  நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார். இவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.

  மேலும் வரவிருக்கும் குருபெயர்ச்சியால் நடக்கபோகும் பொதுபலன்கள் என்னென்ன என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

  குரு பெயர்ச்சியின் பொது பலன்கள் 2021-2022

  நாடு மற்றும் பொருளாதாரம்:

  கும்ப வீட்டிற்கு குரு மாறுவதால் ரியல் எஸ்டேட் நிலைமை சீரடையும். அதிக அளவில் விரையங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமை எழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும்.  விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும். நல்ல மழையும் பசுமையும் உண்டாகும். விவசாயம் கால்நடை வளர்ச்சி பெறும்.

  இதர துறைகளிலும் நாடு வளர்ச்சி பாதயை நோக்கி முன்னேறும். குருவிற்கு விருச்சிகம் நட்பு வீடு. நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில் முன்னேற்றும். சமூக சீர்கேட்டாளார்கள் அழிக்கப்படுவர். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். குரு சாரத்தில் மாறுவதால் மங்கள காரியங்கள் மிக அதிக அளவில் நடைபெறும். மக்களிடம் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும்.

  பொன் பொருள் விலை மிகவும் அதிகரிக்கும். அரசாங்கத்திற்கு எதிராக கடத்தல்கள் அதிகரிக்கும். அரசாங்கம் அவற்றை பரிமுதல்களும் செய்யலாம். எதிரிகள் தொல்லை, அண்டை நாடு, பகை நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் கட்டுப்படுத்தப்படும். வாகனங்கள் வாங்குவோரது  எண்ணிக்கை உயரும்.  அதே நேரத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பது  அவசியம்.

  வானிலை:

  இடி மின்னல் அதிகம். இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும். தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம். மலைவாசஸ்தலங்களில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும். அடிக்கடி முக்கிய கடல்களில் நீர்மட்டங்களில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் முக்கிய துறைமுகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம்.

  ஆன்மீகம் மற்றும் கோவில்கள்:

  புராதன ஆலயங்கள் மற்றும் கட்டிடங்களில் சேதமும் நஷ்டமும் உண்டாகும். அதே வேலையில் புராதன ஆலயங்களுக்கு அரசாங்கம் கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும். மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும். ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். முக்கிய தேவாலயங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் சமாதானம் ஏற்படும். புண்ணிய க்ஷேத்திரங்களில் விபத்துகள் ஏற்படலாம். வெள்ளிகிழமைகளில் நல்ல காரியங்களை ஆரம்பிப்பதும் செய்வதும் நன்மையைத் தரும்.

  பொது:

  பல முக்கிய வழக்குகளுக்கு இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும். பொது மக்களிடையே வீண் கோபம் உண்டாகும். ஒருவருக்கொருவர் சுமுகமான பேச்சு இல்லாமல் வேகத்துடன் பேசிக் கொள்வார்கள். சுபநிகழ்ச்சிகள் எதிர்பார்த்த அளவு தாராளமாக இருக்கும். குரு இல்லறத்தின் காரக கிரகமான சுக்கிரன் வீட்டில் இருப்பதால் குழந்தை பிறப்பு அதிகமாகும்.

  ஆரோக்கியம்:

  நோய்கள் மருந்து உட்கொள்வதன் மூலம் சரியாகும். அதேபோன்று கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் பெரிய பாதிப்பை தராது.

  குடும்பம்:

  கணவன், மனைவிக்கிடையே சண்டை சச்சரவு தோன்றினாலும் அவை கட்டுப்படுத்தப்படும். சண்டை சமாதானத்தில் முடியும். விவாகரத்துக்கள் குறையும். காதல் திருமணங்கள் அதிகரிக்கும். காதல் பிரச்சனைகளும் தலை தூக்கும்.

  அரசியல்:

  அரசியலில் திடீர் மாற்றங்கள்  உண்டாகலாம். புதிய நபர்களுக்கு அரசியலில் வரவேற்பு இருக்கும். அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களுக்கு நன்மை செய்பவையாக இருந்தாலும் ஒருசாரார் அதனை குறை கூறுவார்கள். அரசியல்வாதிகள் விமர்சனத்துக்கு உள்ளாவார்கள்.

  கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  மேலும் படிக்க... குரு பகவானின் வியாழக்கிழமை விரதமும் பலன்களும்

  குரு பெயர்ச்சி 2021 | ராஜயோகத்தை பெறபோகும் ராசிகாரர்கள் யார் தெரியுமா?

  குரு பெயர்ச்சி 2021: குரு பெயர்ச்சியின் இறுதி நிலையில் இந்த ராசியினர் பலவித பலன்களை பெறுவர்..

  குரு பெயர்ச்சி 2021 : இந்த ராசிகாரருக்கு இனி ராஜயோகம் தான்!           

  குரு பெயர்ச்சி பலன்கள் 2021: 12 ராசிகளுக்கான பொது பலன்கள்

  அதிசார குரு பெயர்ச்சி காலம் எவ்வளவு? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்..

  குரு, சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் 2021 - கும்ப ராசியினருக்கு எப்படி இருக்கும் தெரியுமா?
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Gurupeyarchi

  அடுத்த செய்தி