• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 - 22 | பணவரவு, சொத்துகளில் பிரச்சனை - சிம்மம்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 - 22 | பணவரவு, சொத்துகளில் பிரச்சனை - சிம்மம்

சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்கள்

சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்கள்

சிம்மம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்) : எதிர்ப்புகள், இன்னல்கள் எதுவாயினும் தாங்கிக் கொண்டு செயல்படக்கூடிய மன உறுதியும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே இந்த குரு பெயர்ச்சியால் வாழ்வில் நல்ல மாற்றங்கள் வந்து விட்டது. சுணக்கமான காரியங்கள் அனைத்தும் மீண்டும் வேகம் பெறும். எண்ணியதெல்லாம் தொட்டதெல்லாம் துலங்கும். மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். மங்கல காரியங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் மறையும். சகோதர சகோதரிகளால் நன்மைகள் ஏற்படும்.

    தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் மூலமாக மற்றவர்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். வீடு மனை சம்பந்தமான காரியங்களில் சில சுணக்கம் நிலை ஏற்படலாம். எதையும் திட்டமிட்டுச் செய்வது அனுகூலத்தை கொடுக்கும்.  குழந்தைகளுடைய உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது நன்மையை கொடுக்கும். அதே வேளையில் உங்களுடைய உடல் நிலையில் நல்ல ஆரோக்கியம் மேம்பாடு ஏற்படும். கடன்கள் குறையும். மனம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். வாழ்க்கைத் துணையுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி பெறுவீர்கள். நெருங்கிய நண்பர்களால் அனுகூலங்கள் பெறுவீர்கள்.

    பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும். புண்ணிய யாத்திரைகள் செல்ல முடியும். தொழில் உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் வந்து சேரும். லாபம் அதிகமாகும். தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான காரியங்களில் ஈடுபடுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். ஏற்றுமதி சம்பந்தமான தொழில் மிகச் சிறப்பாக நடைபெறும். பலபேருக்கு உங்களால் வேலை கொடுக்க முடியும். எடுத்த காரியங்களைத் தைரியமாகச் செய்து முடிப்பீர்கள். மேலும் உங்கள் எண்ணங்களை தைரியமாக வெளிப்படுத்துவீர்கள். அவசியமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்புகளை உயர்த்திக் கொள்வீர்கள். தன்னம்பிக்கையுடன் காரியமாற்றுவீர்கள். சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்கிற பழமொழிக்கேற்ப அனைவரிடமும் பக்குவமாகப் பேசிப் பழகி உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும். மற்றபடி புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும்.

    உங்கள் நிர்வாக ஆற்றல் அதிகரிக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பு தானாகவே கிடைக்கும். சுறுசுறுப்புடன் இயங்குவீர்கள். சிலருக்கு வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்று வசிக்கும் யோகமும் உண்டாகும். உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியம் சூழும். அதேநேரம் எல்லாம் சரியாக நடந்து விடும் என்று நினைத்துக்கொண்டு அலட்சியமாக இருந்தால் தோல்வியைச் சந்திப்பீர்கள்.

    உத்தியோகஸ்தர்களுக்கு:

    உயர் அதிகாரிகளின் ஆதரவோடு, எதிர் ப்பார்த்த இடமாற்றம் , பதவி உயர்வு போன்ற நற்பலன்களை எளிதில் பெற்று மகிழ்வீர்கள். மனநிறைவு பெறும் வகையில் மறைமுக வருமானங்கள் பெருகும். சிலர் விருப்ப ஓய்வின் மூல உத்தியோகத்திலிருந்துவிலகி தொழிலிலோ, வியாபாரத்திலோ ஈடுபட முனையக்கூடும் குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவிவரும். வேலை நிமித்தமாக வெளியூர் பயணங்கள் ஏற்படக்கூடும். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோரும் சம்பள உயர்வுகள் போன்ற சலுகைகள் பெற்று மகிழ்ச்சியடைக்கூடும். சிலர் வேலையில் இருந்து கொண்டே தொழில் ஒன்றைத் தொடங்கி உபரி வருமானத்துக்கு வகை செய்து கொள்வீர்கள். சொந்த வீடு இல்லாமல் இதுவரை இருந்த சிலர் சொந்த வீடு அரசு குடியிருப்பு போன்ற ஏதேனும் வசதிகளைப் பெற்று மகிழக்கூடும்.



    வியாபாரிகளுக்கு:

    உங்களுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு தொடர்ந்துநல்லமுறையில் இருந்து வரும். நீங்கள் தரமான பொருள்களை விநியோகம் செய்து வருவதன் காரணமாக புதிய வாடிக்கையாளர்களும் உங்களை நாடி வருவார்கள். நீங்கள் வியாபார ஸ்தலத்தை விரிவுபடுத்தவும், வேறு புதிய இடத்திற்கு மாற்றவும் அல்லது கிளைகளைத் திறக்கவும் முயற்சி செய்து வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்து அதிக அளவில் இருப்பு வைக்காமல் இருந்தால், உங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பேயில்லாமல், முழுமன நிறைவு கிட்டும் வகையில் திருப்திகரமான ஆதாயம் கிடைத்து வருவதில் தடையே இராது கணிசமான லாபமும் அதிக் கையிருப்பும் இருப்பதன் மூலம் மனைவியின் பெயரில் சொந்த வீடு வாங்கும் அமைப்புண்டு.

    கலைத்துறையினருக்கு:

    வாய்ப்புகளைத் தேடி நீங்கள் பலரைச் சந்திக்கச் சென்ற நிலை மாறி வாய்ப்பு தரும் நோக்கில் பல முன்னனி நிறுவனங்கள் தாமே உங்களைத் தேடி வந்து வாய்ப்பு கொடுக்கும் நிலை உண்டு. உங்கள் திறமைகள் முழுவதையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் அபிமானத்தையும் ஆதரவையும் பெருவாரியாகப் பெறுவாரியாகப் பெறுவீர்கள். உங்கள் பெருமையும் , புகழும் நாடெங்கும் நன்கு பரவும்.உங்கள் அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்ளும் நிலை உண்டு. இதுவரை பகைமை காட்டி வந்த சில கலைஞர்களும் கூட உங்களைத்தேடி வருவார்கள். நீண்ட தூர வெளிநாட்டுப் பயணங்கள் சிலருக்கு அமையக்கூடும்.

    மாணவர்களுக்கு:

    கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று , ஆசிரியர்களின் பராட்டுகளைப் பெறுவீர்கள். கல்விச் சலுகைகள் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு. விளையாட்டு, போட்டிகள் போன்றவற்றிலும் பரிசுகளைப் பெற்று மகிழ்வீர்கள்.அயல் நாட்டுப் பயண வாய்ப்புகளும், உயர் படிப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடும். படிப்பு முடிவடைவதற்கு  முன்னரே  சிலருக்கு வேலை வாய்ப்பு முன்வரக்கூடும்.

    அரசியல்வாதிகளுக்கு:

    உங்கள் தன்னலமற்ற தொண்டுக்குப் பாரட்டுகள் குவியும். தலைமையின் நன்மதிப்பையும்  தொண்டர்களின்பெரும் ஆதரவையும் பெற்றுள்ள  உங்கள் செல்வாக்கும்  சொல்வாக்கும்  உங்களூக்குத்தனி மரியாதையைப் பெற்றுத் தரும்.பொருப்பான பதவிகள் சில  உங்கத்தேடிவரும்  உங்கள் பொருளாதார நிலையும் நல்ல முறையில் வளர்ச்சியடையும். வங்கிக்கணக்கில் சேமிப்பு பெருகும்.வீடு,மனை, வண்டி,வாகன வசதிகளைக்  குறைவறப்பெற்றுக் களிப்பில் திளைப்பீர்கள்.

    பெண்களுக்கு:

    வீட்டுக்குத் தேவையான நவ நாகரிகப் பொருள்களை வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சிதரும் நிகழ்ச்சிகள் நடைபெற இடமுண்டு. குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் நிம்மதிக்காகவும் பெருமளவில் பாடுபடும் உங்கள் மீது அனைவருமே அன்பு செலுத்த முன்வருவார்கள். குடும்ப பிரச்சனைகள் வெளியில் தெரியாமல் எதையுமே பக்குவமாக சமாளிப்பீர்கள். ஆடை,ஆபரணச் சேர்க்கை,உறவினர்  வருகை எல்லமே உங்கள் மகிழ்ச்சியைப் பெருக்கும் வகையில் அமையும். சிலர் மனம்போல மாங்கல்யம்  அமையப் பெருவீர்கள்.  உங்கள் பிறந்தவீட்டு வகையிலான உங்கள் கனவருக்குப் பெரிதும் துனையாயிருக்கும்

    நட்சதிரப்பலன்கள்

    மகம்:

    உங்கள் மனதில் பல்லாண்டுகாலமாகத் திட்டுமிட்டு  வந்தவை யாவும்  இப்போது நடைபெறக் காண்பீர்கள். பெரும்பாலும் வீடு,மனைகளாகத்தான் அவை இருக்கும். ஏற்கனவே சொந்தவீட்டில்தான் இருக்கக்கூடுமாயினும் இப்போது மனைவியின் பெயரில் மேலும் ஒரு வீட்டை வாங்கக்கூடிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் காண்பீர்கள்.குடும்பத்தில் எந்த வகையிலும் குதூகலத்திற்குக் குறைவிராது. எதிர்பாராத தனவரவுகள் சிலருக்கு உண்டு.  உங்கள் திட்டங்களில் ஒன்றிரண்டு வெற்றி பெறத் தவறுமாயினும்,வெற்றி பெரும்வரை சளைக்காமல் அதற்கெனப்போராடி  இறுதியில்  வெற்றியைப் பெற்று மகிழ்வீர்கள்.  உடல்நிலை சீராக இருந்துவரும். அக்கம்பக்கத்தாரிடம் அளவுடன் பேசி நிறுத்திக்கொள்வது நல்லது.  அரசியல்வாதிகளின் பெருமை பன் மடங்காக பெருகும்.

    பூரம்:

    குருப் பெயர்ச்சியில் தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள் என்பதால் பணப் புழக்கத்தில் மிகத் திருப்திகரமான நிலை காணப்படும். குடும்பத்தில் அனைவரின் தேவைகளையும் நிறைவேற்றி மகிழ்வித்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை மிகச்சிறப்பாக நடத்தி வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவீர்கள். பிரிந்து சென்ற உறவினர் திரும்பி வந்து சேருவார்கள். மற்றவர்களுக்கு பெருமளவில் உதவியும் செய்வீர்கள். மாணவமணிகள் எல்லா வகையிலும் சிறப்பான முன்னேற்றத்தைப் பெற்று மகிழ முடியும். மற்றவர்களும் இதற்கு உறுதுணையாக இருந்து ஊக்குவிப்பார்கள். பயணங்களின் போது மட்டும் கவனம் தேவை.

    உத்திரம் 1 ம் பாதம்:

    குருப் பெயர்ச்சியில் உத்தியோகஸ்தர்கள் அலுவலக விஷயங்களில் பெரும் நற்பலன்களை எதிர்பார்க்கலாம் என்றாலும் பணப்புழக்கம் உள்ள பணிகளில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். அரசு வழியில் சில அனுகூலங்களை எதிர்பார்க்கலாம். தேவையில்லாமல் கடன் வாங்குவதைத் தவிர்த்து விடுவது நல்லது. வியாபாரத்தில் பெரும் முன்னேற்றம் உண்டாக இட முண்டு என்பதால் அதைக் கொண்டு விரிவுபடுத்தினால் போதுமானது. கடன் வாங்கி அகலக்கால் வைக்காதீர்கள். கடிதப் போக்குவரத்து நன்மை தரும். வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள், வேகத்தைக் குறைத்து நிதானமாகச் செல்வதே விவேகமாகும்.

    பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வரவும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய்; தேய்பிறை: ஞாயிறு, வியாழன்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: