• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 - 22 | குடும்பத்தில் சந்தோஷம் - தொழிலில் சுணக்கம்- மிதுனம்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 - 22 | குடும்பத்தில் சந்தோஷம் - தொழிலில் சுணக்கம்- மிதுனம்

, மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்கள்

, மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்கள்

மிதுனம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மிதுனம் (மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்) : பொதுவாக மிகவும் சாதுவான தோற்றத்தைக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே வாழ்க்கையின் மிக முக்கியமான மாற்றமாக இந்த குரு பெயர்சியானது உங்களுக்கு இருக்கிறது. ஆக பெரிய மாற்றம் என்றே சொல்லலாம். இந்த குரு பெயர்ச்சியில் மிகவும் நல்ல பலன்களை பெறுகிறீர்கள். தடையாக இருந்த -  முடங்கிக்கிடந்த அனைத்து காரியங்களும் நிச்சயமான முறையில் மீண்டும் உயிர்பெறும்.

    குடும்பத்தில் நல்ல மாற்றங்கள் வந்து சேரும். உங்களுடைய நடவடிக்கைகளிலேயே நல்ல மாற்றங்கள் இருக்கும். எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் உங்களுக்கு உருவாகும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் குழப்பங்கள் அனைத்தும் நீங்கப் பெறுவீர்கள். சகோதர சகோதரிகளுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் அகலும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீடு மனை சம்பந்தமான காரியங்களில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். புதிய வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைச்செல்வம் நிச்சயமான முறையில் கிடைக்கும். அது சம்பந்தமான மருத்துவ சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது.

    புதிய உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். அதேவேளையில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நன்மையை கொடுக்கும். பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். புதிய வண்டி வாகன சேர்க்கை உங்களுக்கு ஏற்படும். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கப் பெறுவீர்கள். வரவேண்டிய பரம்பரை சொத்துக்கள் உங்களுக்கு வந்து சேரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தர்ம சிந்தனை அதிகரிக்கும்.

    புண்ணிய ஷேத்திரங்கள் புண்ணிய நதிகளில் நீராடுதல் போன்றவற்றை செய்வீர்கள். பணவரவும் திருப்திகரமான நிலையிலேயே இருக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் ஆழ்ந்த நுண்ணறிவை அனைவரும் பாராட்டுவார்கள். உங்கள் அதிகாரமும், பதவியும் உங்களைப் பலப்படுத்தும். உங்கள் மதிப்பு மரியாதையும் உயரும். செய்தொழிலில் புதிய மாற்றங்களைப் புகுத்துவீர்கள். புதிய கடன்களும் கிடைக்கும். சிந்தனையில் தெளிவும் செயலில் வீர்யமும் பெற்று உங்களது செயல்களை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். மனதில் காரணமில்லாமல் குடிகொண்டிருந்த குழப்பங்களும் மறையும். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் உங்களை அனுசரித்து நடந்து கொள்வார்கள்.



    உத்தியோகஸ்தர்களுக்கு 

    உங்கள் பணிகளில் கவனக் குறைவு கூடாது.  சக பணியாளர்கள் உங்கள் மீது புகார் எழுப்பத் தயாராயிருப்பார்கள்.  மறைமுக வருமானங்களில் அதிக எச்சரிக்கை தேவை.  நீங்கள் எதிர்பார்த்த்படி சிலருக்கு இடமாற்றங்கள் கிடைக்கக் கூடுமாயினும் உங்களுக்குத் திருப்திதர முடியாதபடி கடுமையான வேலைப் பளு நிறைந்ததாக இருக்கக் கூடும்.  உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறக்கூடிய வகையிலும்,  புகார் எழ வாய்ப்பில்லாத நிலையிலும் உங்கள் பணிகளில் மிகுந்த அக்கறையுடன் இருந்து வருவது அவசியம்.  சக பணியாளர்களிடம் பணிவாகவும் சுமூகமாகவும் பழகி வருவதன் மூலம் பெரும்பாலான சங்கடங்களைத் தவிர்க்கலாம்.  உடல் நலத்திலும் கவனம் செலுத்துவது அவசியம். குடும்பத்தை விட்டு பிரிந்து வெளிநாடு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

    வியாபாரிகளுக்கு 

    உங்கள் எதிரிகள் உங்களுக்குப் போட்டியாகக் கடுமையாக இயங்கக் கூடும் என்பதால் உங்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நீங்கள் புதுமையாக ஏதேனும் சலுகைகளை அறிவித்து அவர்களை உங்கள் பக்கமே தக்க வைத்துக் கொள்வதன் மூலம் வியாபாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படாமல் குறைந்தபட்ச லாபத்துடன் நடைபெற்று வர வழிவகுக்கலாம்.  வேலையாள்களின் நடாவடிக்கைகளைக் கண்காணித்து வருவதன் மூலம் விரையங்களைத் தவிர்க்கலாம்.  வாடிக்கையாளர்களிடம் அதிக அளவில் கடன் நிலுவை இல்லாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்.

    கலைத்துறையினருக்கு 

    புதிய வாய்ப்புகள் அமைவதற்குரிய நிலை சாதகமாக இல்லை என்றாலும் கடுமையாக உங்கள் முயற்சிகளைத் தொடர்வது அவசியம்.  உங்கள் வசதிகளில் பெரும்குறை ஏற்படாமல் பார்த்துக்  கொள்ளும் அளவில் சில வாய்ப்புகளை பெறக்கூடும்.  எல்லாரிடமும் இனிமையாகப் பேசி பழகுங்கள்.  இசை, நடனக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள் போன்ற பிரிவினர் கூடுதல் வாய்ப்புகளைப் பெறக்கூடும்.  வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளும் போது மிகுந்த நிதானமாகவும், சிக்கனமாகவும் நடந்து கொள்வது அவசியம்.  புதிய வாய்ப்புகள் கிட்டும். அதன் மூலம் நற்பெயர் கிட்டும்.

    மாணவர்களுக்கு 

    விளையாட்டை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.சிலர் படிப்பை நிறுத்தி விட்டு உத்தியோக வாய்ப்புகளைப் பெறவும் முயலக் கூடும்.  விளையாடும் போதும் வாகனங்களிலும் கவனம் தேவை. முயற்சிக்கேற்றவாறு மதிப்பெண்களைப் பெறுவர். பெற்றோர்களின் ஆதரவும் நண்பர்களின் உதவியும் கிடைக்கும். ஆன்மிகத்திலும் விளையாட்டிலும் நேர்த்தியாக ஈடுபடுவீர்கள். படிப்பிற்காக போதிய பயிற்சிகளைத் தவறாமல் செய்வீர்கள். வண்டி வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் அவசியம்.

    அரசியல்வாதிகள்:

    எதிலும் எப்போதும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய பெயர்ச்சியாக அமைகிறது. சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைத்தாலும் எதிரிகளின் கை ஓங்கியே காணப்படும். கட்சியில்  உங்கள் மீது கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்படலாம். வாயைக் கொடுத்து விவகாரத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம். அதே நேரம் பயணங்களில் வெற்றியடைவீர்கள். மேல்மட்டத்தில் இருப்பவர்களுடன் சிறிது நல்லிணக்கம் அவசியம்.

    பெண்களுக்கு :

    எதிலும் பொறுமையும், நிதானமும் தேவை. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும்.  உடல் நலத்தில் அக்கறை தேவை.  கருவுற்ற பெண்களுக்கு கவனம் தேவை. கோபத்தைக் குறைத்துக் கொள்வதும் நன்மைகளுக்கு வழிவகுக்கும். யாரிடமும் தேவையில்லாத பேச்சுகளை பேச வேண்டாம்.

    நட்சத்திரப் பலன்கள்:

    மிருகசீரிஷம் 3,4 ஆம் பாதங்கள்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் எளிதில் முடியாமல் தாமதம் ஆகக் கூடும் என்பதற்காக நீங்கள் அவசரப் படாதீர்கள். இறைவழிபாடு, தியானம்  போன்றவற்றில் மனத்தைச் செலுத்துவது நல்லது. சிலர் விருதுகள், பாராட்டுகள் போன்றவற்றை பெற வாய்ப்புண்டு.பக்குவமாகச் சமாளிப்பது அவசியம்.  உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள்.பூர்வீக  சொத்து தொடர்பான வழக்குகள் இருப்பவர்கள் சாதகமான தீர்ப்பைப் பெறுவது சாத்தியமாகும்.

    திருவாதிரை:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் தொழில் , வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் குறைந்த பட்ச ஆதாயத்தைப் பெறக்கூடும்.  நஷ்டம் பற்றிக் கவலைப்படாதீர்கள்.  அதற்கு வாய்ப்பு இல்லை.  உறவினரின் ஒத்துழைப்பை எல்லாம் பெருமளவில் எதிர்பார்ப்பதற்கில்லை.  பணம் கொடுக்கல், வாங்கலில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பிறமொழி பேசும் ஒருவரால் நன்மை உண்டாகும். தொழில் முயற்சிகளில் கவனம் தேவை.

    புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்:

    குருப் பெயர்ச்சியின் மூலமாக உத்தியோகஸ்தர்களில் சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.  வேலை தேடிக் கொண்டிருந்தவர்களில் சிலருக்கு இப்போது நல்லதொரு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.  பெரும்பாலானவர்களுக்கு இனம் புரியாத தேவையற்ற மனக்கலக்கம் ஏற்பட்டு நிவர்த்தியாகும். வீட்டில் சுபநிகழ்ச்சி தள்ளிப்போகலாம். கடன் கிடைக்குமாயினும் வாங்காமலேயே சமாளிப்பது  பிற்காலத்திற்கு உதவியாக அமையும். ஜாமீன் கையெழுத்துபோட்டு கடன் வாங்கித் தர முயற்சிக்காதீர்கள்.

    பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசியை அர்ப்பணித்து 6 முறை வலம் வரவும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: புதன், வெள்ளி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: