• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 - 22 | முயற்சிகளில் வெற்றி, சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும் - மீனம்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 - 22 | முயற்சிகளில் வெற்றி, சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும் - மீனம்

மீனம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மீனம்: எப்போதும் இன்முகத்துடனும், இனிய பேச்சுடனும் இருக்கும் மீன ராசி அன்பர்களே இந்த குரு பெயர்ச்சியை பொருத்தவரை உழைக்கும் திறன் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல விதமான வேலைகளை செவ்வனே செய்து முடிப்பீர்கள். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும். குடும்பம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கப் பெறுவீர்கள்.

    சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். நல்ல உறக்கம் காணப்படும். நான்காம் இடத்தை குருபகவான் பார்ப்பதால் வீடு மனை நிச்சயமான முறையில் வாய்க்கும் போக்கு காணப்படும். மனதில் இருந்து வந்த இனம்புரியாத கவலை, சஞ்சலம் நீங்கப் பெறுவீர்கள். நின்று போயிருந்த வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிக்கல்களுக்கு தீர்வு கான நல்ல சூழல் உருவாகி இருக்கிறது.

    பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீண்ட நாட்களாக வராமல் இருந்து வந்த கடன்தொகை வசூலாகும். எதிரிகளுடைய போக்கினை கண்டறிந்து உங்களுடைய திட்டங்களை நீங்கள் வகுத்துக் கொள்வீர்கள். வண்டி வாகனங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கப் பெறுவீர்கள். தொழில் உத்தியோகத்தில் அதிகமான சுமைகளை சுமக்க வேண்டி இருக்கலாம். உங்கள் உடைய வேலைகளையும் நீங்கள் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படலாம். அதுபோன்ற நேரங்களில் முடிந்தவரை படிப்பது நன்மையை கொடுக்கும். உங்கள்  காரியங்களில் கூடுதல் அக்கறை காட்டுவீர்கள்.

    சந்தேகத்துக்கு இடமான விஷயங்களை ஒன்றுக்கு இரண்டு முறை செயல்படுத்துவீர்கள். செய்தொழிலை விரிவு படுத்த சிறிது கடன் வாங்கவும் நேரலாம். உங்கள் பேச்சைத் திரித்து புரிந்துக் கொள்ள வாய்ப்புள்ளதால், வெளியில் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேசவும். நெடுநாளாக  விற்பனை ஆகாமல் இருந்த சொத்துக்கள் சிறிய தாமதத்துக்குப் பிறகே விற்பனையாகும்.

    உடலாரோக்கியத்திலும் சிறு சிறு தொல்லைகள் வந்தாலும், மருத்துவச் சிகிச்சையால் அனைத்தும் சரியாகிவிடும்.  சில நேரங்களில் ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்க வாய்ப்பு இருப்பதால் அவசியமற்ற பொருட்களை வாங்க வேண்டாம். வழக்குகளிலும் தீர்ப்பு வர தாமதமாகும். தேவையற்ற வாய்தாக்களும் உங்களை வருத்தமடையவே செய்யும். வாழ்க்கையில் நல்லது எது கெட்டது எது என்பதை அறிந்து கொள்வீர்கள். மற்றபடி சகோதர  சகோதரிகளிடம் உள்ளன்போடு பழகி அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆரவாரமில்லாமல் சமூகத்திற்கு நன்மை தரும் நல்ல காரியங்களைச் செய்யும் காலகட்டமாக இது  அமைகிறது.



    உத்தியோகஸ்தர்களுக்கு:

    உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத வருமானம் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வேலை நிமித்தமாக வெளியூர்களில் தங்கியிருந்தவர்கள் குடும்பத்துடன் சேரும் வாய்ப்பு கிடைக்கும். புத்திரப் பேறு, வண்டி, வாகனம் வாங்குதல் போன்ற சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடைபெறும். பணப்புழக்கம் தேவைக்கு அதிகமாகவே இருக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். பணிகளில் அக்கறையுடனும், கவனமுடனும் செயல்படுவது அவசியம்.

    வியாபாரிகளுக்கு:

    வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். போடியாளர்களால் உங்கள் வாடிக்கையாளர்களைத் தங்கள் வசம் ஈர்க்க முடியாது. அதேபோல் நீங்களும் வாடிக்கையாளர்களைத் திருப்தி படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான கொள்முதல் செய்யும் போது கவனமுடன் இருப்பது அவசியம். கடன் தொகையை நிலுவையில் விடுவது சிரமத்தை ஏற்படுத்தும். கவனம் தேவை.

    கலைத்துறையினருக்கு:

    புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். வண்டி, வாகன வசதிகள் அமையக்கூடும். விருதுகளும், பாராட்டுகளும் கிடைக்கப்பெறுவீர்கள். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். நேரத்திற்கு வேலைகளை முடித்துக்கொடுத்து நற்பெயர் எடுப்பீர்கள். சக கலைஞர்களிடம் பகைமை ஏற்படுத்துவதைத் தவரிக்கவும்.

    மாணவர்களுக்கு:

    படிப்பில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். அதன்மூலம் நன்மதிப்பைப் பெறுவீர்கள். பெற்றோர் ஆசிரியர் மட்டுமின்றி  அனைவரும் பாராட்டும் அளவிற்கு நீங்கள் நடந்து கொள்வீர்கள். சிலருக்கு வேலை வாய்ப்பும் படிக்கும் போதே அமையும். உயர்கல்விக்காக சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.

    அரசியல்வாதிகளுக்கு:

    பலரும் பொறாமைப்படும் அளவிற்கு உங்கள் வளர்ச்சி இருக்கும். மேலிடத்திலிருந்து முழு ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள். உங்கள் சொல்லுக்கு தனிப்பட்ட மரியாதை கிடைக்கும். பொருளாதார நிலையிலும் திருப்திகரமான முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி அவர்களை மகிழ்ச்சியடைய வைப்பீர்கள். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் உங்களில் பணிகளில் கவனம் செலுத்துவது அவசியம்.

    பெண்களுக்கு:

    குடும்பத்தில் குதூகலம் நிரம்பிக் காணப்படும். குடும்பத்தினரின் அன்பையும், நன்மதிப்பையும் குறைவரப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். வேலைக்குப் போகும் பெண்கள் ஊதிய உயர்வு கிடைக்கப்பெறுவீர்கள். சிலருக்கு திடீர் திருமண வாய்ப்பும் கிடைக்கப் பெறும். புத்திரப்பேறும் கிடைக்கப் பெறுவீர்கள். மறைமுக சேமிப்புகள் தக்க நேரத்தில் உதவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.

    நட்சதிரப்பலன்கள்:

    பூரட்டாதி 4-ம் பாதம்:

    இந்த குருப் பெயர்ச்சியில் உத்தியோகஸ்தர்கள் விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் தடையின்றி நடந்து முடியும். மருத்துவச் செலவுகள் குறைந்துவிடும். உறவினர் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும். நண்பர்களின் ஒத்துழைப்பு நல்ல முறையில் இருக்கும். மனைவி வழியில் அனுகூலமான செய்திகள் வந்து சேரும். பூர்வீகச் சொத்து வகையில் சிலர் எதிர்பாராத தனலாபத்தைப் பெறுவீர்கள்.

    உத்திரட்டாதி:

    இந்த குருப் பெயர்ச்சியில் சிறு தடங்கலுக்குப் பின் காரிய வெற்றி கிடைக்கும். நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் ஏற்பட்டாலும் அவை தானாகவே தீர்ந்து விடும். கோபத்தைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வது நல்லது. உடல் நலத்தில் பெரிய பாதிப்புகள் இருக்காது. எனினும் கவனம் தேவை.

    ரேவதி:

    இந்த குருப் பெயர்ச்சியில் நன்மையும் தீமையும் கலந்த பலன்களாகவே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனம் செலுத்துவது அவசியம். நீண்டநாட்களாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உறவினர் வருகை, சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்ற மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பணவரவில் தடை இருக்காது.

    பரிகாரம்: சஷ்டி தோறும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்யவது நன்மை.

    அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வெள்ளி;

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: