Home /News /spiritual /

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 - 22 | பொறுமை தேவை, ஆரோக்கியத்தில் எச்சரிக்கை அவசியம்- கும்பம்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 - 22 | பொறுமை தேவை, ஆரோக்கியத்தில் எச்சரிக்கை அவசியம்- கும்பம்

கும்பம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

கும்பம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

கும்பம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  கும்பம்: தளராத தன்னம்பிக்கையுடன் அயராமல் உழைத்து சாதனையாளர் என்ற பெயரைப் பெறும் கும்ப ராசி அன்பர்களே இந்த குரு பெயர்ச்சியில் எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டுச் செய்வது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். குடும்பம் சார்ந்த விஷயங்களில் பேசும்போது கருத்து தெரிவிக்கும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம். எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை தவறவிடாமல் பொறுமை இருப்பது அவசியமாகிறது. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை அவசியம். வண்டி வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனமாக பயன்படுத்த வேண்டும். தீ ஆயுதம் மின்சாரம் ஆகியவற்றில் போது எச்சரிக்கை அவசியம்.

  வாக்கு கொடுக்கும் போது கவனம் தேவை. பொருளாதாரம் சிறக்கும். சகோதர சகோதரிகளிடம் இணக்கமான சூழ்நிலை நிலவும். மந்தமான விஷயங்களில் ஒரு நல்ல முடிவினை கட்டுவீர்கள். குழந்தைகளுடைய காரியங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த மனக் கருத்துவேறுபாடுகள் நீங்கப் பெறுவீர்கள்.

  திருமணமாகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கைகூடி வரும். அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். உற்றார் உறவினர்கள் உங்கள் உயர்வைக்கண்டு ஆச்சரியப்படுவார்கள். கொக்குக்கு ஒன்றே மதி என்கிற ரீதியில் உங்கள் குறிக்கோளை நோக்கி பயணப்படுவீர்கள். வருமானம் சீராக வந்து கொண்டிருந்தாலும் சில விரயங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதோடு பிள்ளைகளின் நலனுக்காகவும் சிறிது செலவு செய்ய நேரிடும். சமூகத்தில் உங்கள் பெயர் கௌரவம் கூடும். இழப்புகளை ஈடு செய்யும் அளவுக்கு புதிய புதிய வாய்ப்புகளும் தேடி வந்து கொண்டிருக்கும்.

  இல்லத்தில் சிறப்பான வாழ்க்கைச்சூழல் உண்டாகும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று குதூகலமாக காலத்தைக் கழிப்பீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். புது வீடு, வாகனம் ஆகியவைகளை வாங்குவீர்கள். விருப்பத்திற்கு ஏற்றார்போல் வரவு இருக்கும். தொழில் உத்தியோகத்தில் முடிவெடுக்கும்போது ஏற்படலாம். முடிந்தவரை முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தீர ஆலோசித்து எடுப்பது நன்மையை கொடுக்கும். பங்குதாரர்களுடன் சில முரண்பாடுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் மேல் இடத்துடன் அதிகமான பொறுப்புகளை சுமக்க வேண்டியிருக்கும். சக ஊழியர்கள் உடைய ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

  உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப உங்கள் செயல் திட்டங்களை மாற்றி அமைத்து வெற்றி பெறுவீர்கள். அதே சமயம் கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் சரியான வெளிச்சம் உள்ள இடத்திலமர்ந்து படித்து கண்களில் குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.  உத்தியோகஸ்தர்களுக்கு:

  உங்களின் விடா முயற்சியால் உங்கள் பாதைகளில் உள்ள தடங்கல், தாமதங்களை சமாளித்து வெற்றி காண்பீர்கள். உங்கள் உயர் அதிகாரிகளின் கண்டனங்களுக்கு ஆளாகாமல் தப்ப, உங்கள் பணிகளில் கண்ணும் கருத்துமாக இருந்து வர வேண்டும். உங்கள் வசம் உள்ள ஆவணங்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வர வேண்டியதும் அவசியம். சக பணியாளர்களாலும், தொல்லைகள் ஏற்படக்கூடிய நிலை உள்ளதால் அவர்களிடமும் பணிவாகவும் சுமூகமாகவும் நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் சிறு சச்சரவுகள் தோன்றும் போதும், உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு பொறுமையாய் இருப்பது அவசியம். இடமாற்றம், பதவி உயர்வு போன்ற உங்கள் விருப்பங்கள் நிறைவேற வாய்ப்பு உள்ளது.

  வியாபாரிகளுக்கு:

  எதிர்பார்த்த லாபம் இருக்காது. எனவே சிக்கனத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வேலையாட்களிடம் அனுசரனையாக நடந்து கொள்வதன் மூலம் நஷ்டங்களைத் தவிர்த்து பொருளாதார நெருக்கடி வராமல் காக்கலாம். கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு கூட்டாளிகளுடன் மனக் கசப்பு நேர வாய்ப்பிருப்பதால் கவனம் தேவை.

  கலைத்துறையினருக்கு:

  முயற்சி செய்தால் பல புதிய வாய்ப்புகளைப் பெறலாம். உங்களால் நேரடியாக செய்து  முடிக்கக்கூடியவற்றை நீங்களாகவே செய்வது எதிர்கால குழப்பத்திலிருந்து உங்களைக் காப்பாற்றும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உங்கள் பெயருக்குப் பெருமை சேர்க்கும் வகையிலான செயல்களில் ஈடுபடுவீர்கள்.

  மாணவர்களுக்கு:

  ஒருமுறைக்குப் பலமுறை பாடங்களை படிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். விளையாட்டுகளில் கவனத்தைக் குறைத்து, பாடங்களில் கவனத்தைச் செலுத்துவதன் மூலம் படிப்பில் மேன்மை நிலை அடையலாம். நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.

  அரசியல்வாதிகளுக்கு:

  உங்களின் பணிகளில் கவனம் செலுத்துவது நன்மை தரும். மேலிடத்தில் உங்களைப் பற்றி அவதூறு கூறுபவர்கள் உங்களுடனே இருப்பார்கள். எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். தலைமை உங்களைப் புரிந்து கொண்டு உங்களுக்கு பொறுப்பான பதவிகயையும், பொருளாதார உதவியையும் செய்வார்கள்.

  பெண்களுக்கு:

  குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் அவை தானகவே நிவர்த்தியாகிவிடும். கோபத்தைக் குறைப்பதன் மூலம் சிக்கல்கள் தீரும். வேலைக்குப் போகும் பெண்கள் சரியான நேரத்தைக் கடைபிடிப்பது அவசியம். உங்கள் இரகசியங்களை எவரையும் நம்பி வெளிப்படுத்தாமலிருப்பது நன்மை தரும்.

  நட்சதிரப்பலன்கள்:

  அவிட்டம் 3, 4ம் பாதங்கள்:

  இந்த குருப் பெயர்ச்சியில் தொழில் வியாபாரம் ஏற்ற இரக்கமாக இருக்கும். எனினும் நஷ்டம் ஏற்படாது. கவலை வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியும், துன்பமும் மாறி மாறி வரலாம். மாணவமணிகளும்,. கலைஞர்களும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சிலருக்குத் திருமண வாய்ப்புகள் அமையக்கூடும். பெண்களால் சிலர் அனுகூலம் பெறுவர். உடல் நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். தொலை தொடர்பு செய்திகள் இனிமையானதாக இருக்கும்.

  சதயம்:

  இந்த குருப் பெயர்ச்சியில் குடும்பத்தில் ஏற்படும் சிறு மனக்குழப்பங்களை உங்கள் பொறுமையின் மூலம் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காமல் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து, திட்டமிட்டு நிதானமாகச் செயல்படுவதன் மூலம் சங்கடங்கள் குறையும். தெய்வ அனுகூலத்தால் பொருளாதார நிலையில் எவ்வித சங்கடமும் வராது. தேவைகள் இல்லாமல் கடன் பெறுவதை தவிர்க்கவும்.

  பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்:

  இந்த குருப் பெயர்ச்சியில் சிறு சிறு தடைகளுக்குப் பிறகு வெற்றி நிச்சயம் உண்டு. தெய்வ அனுகிரகம் உங்களைக் காக்கும். கடிதப் போக்குவரத்தின் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் தொந்தரவு காணப்பட்டாலும், பேச்சு வார்த்தை மூலம் சரி செய்துவிடலாம். நண்பர்கள் பெருமளவில் உதவியாக இருப்பார்கள்.

  பரிகாரம்: பகவத்கீதை படித்து ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

  அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி;
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Gurupeyarchi 2021

  அடுத்த செய்தி