• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 - 22 | பதவி உயர்வு, வீண் விரையம் - கன்னி

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 - 22 | பதவி உயர்வு, வீண் விரையம் - கன்னி

கன்னி குருப்பெயர்ச்சி பலன்கள்,

கன்னி குருப்பெயர்ச்சி பலன்கள்,

கன்னி ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    கன்னி: பெருந்தன்மையும் மற்றவர்களுக்கு இயன்ற அளவிலெல்லாம் உதவ வேண்டும் என்ற பேருள்ளம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே! இந்த குரு பெயர்ச்சியில் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வாக்கு வன்மை ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பணம் சார்ந்த பிரச்சனைகள் ஒரு முடிவிற்கு வந்து சேரும். குடும்பத்தில் இருக்கக்கூடிய குழப்பங்கள் சிக்கல்கள் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு ஏற்படும். பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நல்லபடியாக நடக்கும். மங்கள காரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கப் பெறுவீர்கள்.

    உங்களுடைய பேச்சுக்கு மற்றவர்கள் கட்டுப்படுவார்கள். மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீடு மனை சார்ந்த விஷயங்களில் சிறிய சுணக்க நிலை ஏற்படலாம். முடிந்தவரை எந்த ஒரு விஷயத்திலும் திட்டமிட்டுச் செய்வது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். தாயார் தாய்வழி உறவினருடன் பேசும்போதும் கருத்துக்களை தெரிவிக்கும் போதும் கவனம் அவசியம்.  குழந்தைகளுடைய காரியங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் அவசியம். முக்கியமாக வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படலாம். உங்கள் உடம்பிற்கு செரிமானமாகாத உணவுகளை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். எதிர்பார்த்த இடத்தில் கடன் உதவி கிடைக்க பெறுவீர்கள்.

    வண்டி வாகனம் பயன்படுத்தும் போது மிகவும் ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும். தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய உத்தியோகத்தினை விட்டுவிட்டு புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். அந்த முயற்சியும் வெற்றி பெறும். சுப விரயச் செலவுகள் இந்த குரு பெயர்ச்சியினால் உங்களுக்கு ஏற்படும். புண்ணிய யாத்திரைகள் புண்ணிய நதிகளில் நீராடுதல் கும்பாபிஷேகம் போன்ற வைபவங்களில் கலந்து கொள்ளுதல் ஏற்படும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணம் எதிர்பார்த்த அளவுக்கு வந்து கொண்டிருக்கும். உங்களின் முயற்சிகளைச் செம்மைப்படுத்தி காரியங்களை ஆற்றி வெற்றி பெறுவீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் ஈடுபடுவீர்கள். உங்களின் அசாத்திய துணிச்சலால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள்.

    மறக்க முடியாத விதத்தில் அரசு வழியில் சில சலுகைகள் கிடைக்கும். முக்கியமானவர்களுடன் பேசும்போது உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உண்டாகும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள் மேலும் உங்களிடம் மற்றவர்கள் சொன்ன ரகசியங்களையும் காப்பாற்றுவீர்கள். இதனால் நண்பர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். அதே நேரம், இந்த காலகட்டத்தில் உங்களிடம் பணம் பெற்றவர்கள் நன்றி பாராட்டுவது குறைவாகவே இருக்கும்.



    உத்தியோகஸ்தர்களுக்கு:

    உங்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற சற்று அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் சுமூகமாக பழகுவீர்கள். எதிர்பாராத இடமாற்றம் உண்டு. பதவி உயர்வு சிறு தாமதத்திற்குப் பிறகு கிடைக்கும். பொருளாதார நிலை முன்னேறும். உங்கள் பணிகளில் தைரியமாகவும், பொறுமையாகவும் செயல்பட்டு நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்கள் மேல் எவ்வித புகாரும் எழாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

    வியாபாரிகளுக்கு:

    வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். வாடிக்கையாளர்களின் தேவைக்காக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியில் உள்ள கடன் தொகைகள் வசூலாகும். கொள்முதலில் கவனம் தேவை. ஒன்றுக்கு இரண்டு முறை விசாரித்து கொள்முதலில் ஈடுபடவும். தரமான பொருட்களைப் பெறுவதில் அக்கறை காட்டுவது சிறந்தது. உங்களின் செயல்கள் சராசரியான வெற்றியைக் கொடுக்கும். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக கடையை அழகு படுத்துவீர்கள். சீரான வருமானத்தால் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். கூட்டாளிகளிடம் எச்சரிக்கைத் தேவை.

    கலைத்துறையினருக்கு:

    பல முயற்சிக்குப் பிறகு புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சக கலைஞர்களின் போட்டி உங்கள் வாய்ப்புகளுக்கு சவாலாக இருக்கும். எனினும் உங்கள் முயற்சியால் உங்களுக்கே வெற்றி கிடைக்கும். சில வாய்ப்புகள் உங்கள் பெயரை பிரபலப்படுத்தும். நிலுவையில் இருந்த பணம் வசூலாகும். கவலை வேண்டாம். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    மாணவர்களுக்கு:

    படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. சிறு உடல் உபாதைகள் வரலாம். கவனமுடன் இருந்தால் அதைத் தவிர்க்கலாம். யோகா போன்ற பயிற்சிகளின் மூலம் ஞாபகத் திறனை பெருக்கிக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் முயற்சிகள் சில தடங்கல்களுக்குப் பிறகு நிறைவேறும்.

    அரசியல்வாதிகளுக்கு:

    இந்த குருப் பெயர்ச்சியில் உங்களுக்கு தேவையற்ற வீண் சோதனைகள் வரலாம். உங்களைப் பாராட்டியவர்களே இப்போது தரக்குறைவாக பேசலாம். மாற்று முகாம்களை சேர்ந்தவர்கள் உங்களை நாடி வருவார்கள். எந்த சூழ்நிலையிலும் மன உறுதியை விட்டுக் கொடுக்காமல் இருப்பது சிறந்தது. எதிர்பார்த்த பதவி கிடைக்கும். அதன் மூலம் பெருமையும் கிட்டும். எடுத்த பணிகளை குறைவின்றிச் செய்து வாருங்கள்.

    பெண்களுக்கு:

    அவ்வப்பொது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உங்கள் விஷயத்தில் மூன்றாவது நபர் தலையீடு இருக்காமல் பார்த்துக் கொள்ளவும். உடல் சூழ்நிலை காரணமாக அதிக செலவு செய்ய நேரலாம். சுப நிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். புதியதாக வாகன சேர்க்கை இருக்கும். சொந்த மனையில் குடியேறும் நீண்ட நாட்கள் கனவு நிறைவேறும்.

    நட்சதிரப்பலன்கள்

    உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள்:

    இந்த குருப் பெயர்ச்சியில் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மனத்தில் இருந்து வந்த தேவையற்ற வீண் குழப்பங்கள் அகலும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போதும் நெருப்பினைப் பிரயோகப்படுத்தும் போதும் கவனம் அவசியம். தொழில் வியாபாரத்தில் நல்ல மாறுதல்களை உணர்வீர்கள். வெளிநாடு பயணம் செல்லலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.

    ஹஸ்தம்:

    இந்த குருப் பெயர்ச்சியில் எதிர்பார்க்காத பணி இட மாற்றம் ஏற்படும். எந்த விஷயத்திலும் ஈடுபடும் போதும் நேர்மறை எண்ணங்களோடு ஈடுபடுவது நல்லது. கூடுமானவரை சோம்பேறிதனத்தை விடுவது நன்மை தரும். பொருளாதார நிலை மேலோங்கும். அரசு வழியில் அனுகூலம் கிடைக்கும். பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

    சித்திரை 1, 2ம் பாதங்கள்:

    இந்த குருப் பெயர்ச்சியில் குடும்ப நிம்மதியில் சில குழப்பங்கள் வரலாம். பிள்ளைகள் வழியில் சில கவலைகள் நேரலாம். பொருளாதார நிலை மேலோங்கும். நெருக்கடி நிலையிலிருந்து வெளியில் வருவீர்கள். தேவையற்ற விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கியிருப்பது நன்மை தரும். நண்பர்கள் உறவினர்கள் அனுசரனையாக இருப்பார்கள். வியாபாரிகள் அதிக அள்வில் முதலீடு செய்யும் முன் யோசித்து செய்யவும். தள்ள்ப் போய் கொண்டிருந்த திருமணம் கைகூடும். அரசு வழியில் அனுகூலம் கிடைக்கும்.

    பரிகாரம்: வாராகி தேவியை சேவிப்பது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்சனைகள் தீரும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன்;

     

    +

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: