ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

ரிஷப ராசி : குருப்பெயர்ச்சி பலன்கள் 2020

ரிஷப ராசி : குருப்பெயர்ச்சி பலன்கள் 2020

ரிஷபம்

ரிஷபம்

குரு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்கிறார். குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கபடி இந்த ஆண்டு 15-11-2020 அன்று (ஞயிற்று கிழமை) இரவு 11-48 மணிக்கு மகர ராசிக்கு மாறுகிறார். இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் ஒவ்வொரு ராசி வாரியாக விரிவாக கணித்து கொடுக்கப்பட்டு உள்ளது. கணித்தவர்: காழியூர் நாராயணன்

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 4 minute read
 • Last Updated :

  மிகவும் அமைதியாக காணப்படும் ரிஷபராசி அன்பர்களே..

  உங்களின் வசீகர தன்மை பிறரை எளிதில் கவரும். எடுத்தகாரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் வல்லமை படைத்தவர்கள். பார்க்க சாதுவாக இருந்தாலும் தன்னம்பிக்கையும், பிறர்பால் அன்பும் கொண்டவர்கள். இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளை தரும் வகையில் அமையும். இதுவரை குருபகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் இருந்து வந்தார். இதுசிறப்பானநிலை அல்ல என்று சொல்வதை விட கொடூரமான நிலை என்றே சொல்லலாம்.  8-ல் குரு இருக்கும் போது பல்வேறு இன்னல்களை தந்திருப்பார். குறிப்பாக மனவேதனை அதிகமாக உங்களை வாட்டியிருக்கும். பொருளாதாரத்தில் திடீர்சரிவுகள் ஏற்பட்டிருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனுகூலமாக இருந்திருக்கமாட்டார்கள். வீண் விரோதம் உருவாகியிருக்கலாம்.

  இந்தநிலையில் குருபகவான் 9-ம் இடமான மகரராசிக்கு செல்கிறார். இதுமிகச்சிறப்பான இடம். இதுவரை அவரால்பட்ட இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்தகாரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.

  பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள்பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. இவை அனைத்தும் குருவால் கிடைக்கும் நற்பலன்கள்.

  இது தவிர குருவின் 9-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக இருக்கும். இதன் மூலமும் நற்பலன்கள் கிடைக்கும். ஆனால் அவர் 2021 ஏப்ரல்4-ந் தேதி முதல் 2021 செப்டம்பர் 14-ந்தேதி வரை அதிசாரம் பெற்று கும்பராசியில் இருக்கிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. இந்தகாலகட்டத்தில் முன்புபோல் அவரால் நல்லபலன்களை அள்ளிதர முடியாது.

  குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப் பார்வை மிகச்சிறப்பாக இருக்கிறது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம். பிறகு 2021 நவம்பர் 13-ந்தேதி அன்று முழுபெயர்ச்சி அடைந்து 10-ம் இடமானகும் ரிஷபராசிக்கு மாறுகிறார். குரு பொருள் நஷ்டத்தையும், மனசஞ்சலத்தையும் ஏற்படுத்துவார்.

  ஆனால் அவரது 5-ம் இடத்துபார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது. அதன்பிறகு 2022 ஏப்ரல் 14-ந்தேதிஅன்று பெயர்ச்சிஅடைந்து 11-ம் இடமான மீனராசிக்கு மாறுகிறார். இதுசிறப்பான இடம். அவரால் பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். மற்ற கிரகங்களின் நிலை சனி பகவான் தற்போது 8-ம்இடத்தில் இருக்கிறார். இதுசிறப்பான இடம் அல்ல. அவர் உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்கவார்.

  உறவினர்கள் வகையில் மனக்கசப்பும், கருத்துவேறுபாடும் ஏற்படும். இந்தநிலையில் சனிபகவான் 2020 டிசம்பர் 26-ந்தேதிஅன்று 9-ம் இடமான மகரராசிக்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் இதற்கு முன்புபோல் கெடுபலனை தரமாட்டார். பொதுவாக சனி 9-ம் இடத்தில் இருக்கும் போது, எதிரிகளின் இடையூறு தலைதூக்கும், பிறருக்கு கட்டுப்பட்டு போகும்நிலை உருவாகும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டு உள்ளது.

  சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். அவர்தான் இருக்கும் இடத்தில் இருந்து 3, 7, 10-ம் இடங்களை பார்ப்பார்.

  அந்த மூன்று பார்வைகளும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. அதன்மூலம் அவர் பொருளாதார வளத்தையும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் கொடுப்பார். உங்கள் ஆற்றல் மேம்படும். பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும்,  ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். ராகு உங்கள் ராசியில் இருக்கிறார். இது சுமாரானநிலைதான். இங்கு அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்கள் முயற்சிக்கு பலன் இல்லாமல் போகலாம். ராகுக்கு நேர்எதிரே இருக்கும் கேது 7-ம் இடத்தில் இருக்கிறார். அவர் மனைவி வகையில் பிரச்சினையை தரலாம். அலைச்சல் ஏற்படும். வீண் மனவேதனை உருவாகலாம். எதிரிகளால்பிரச்சினை வரலாம்.

  உடல் நலம் சுமாராகவே இருக்கும். இரண்டு கிரகங்களுமே சாதகமற்ற இடத்தில் இருக்கிறார்கள் என்று கவலை கொள்ள தேவை இல்லை. காரணம் ராகுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 3-இடமான கடகத்தில் விழுகிறது. இதுசிறப்பான அம்சமாகும்.

  இனி விரிவான பலனை காணலாம். பொருளாதார வளம்  மேம்படும்.  தடைகளை எளிதில்முறியடித்து எடுத்தகாரியத்தில் வெற்றி காண்பீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சியும்,  ஆனந்தமும் உருவாகும்.

  வீட்டுக்கு தேவையான சகல வசதிகளும் கிடைக்க பெறுவர். சிலர் புதிய வீடு வாங்குவர் அல்லது வசதியான வீட்டிற்கு குடிபுகலாம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் பெறுவர். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம்.  2021 ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021 செப்டம்பர் 14-ந்தேதி வரை கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போகவும். உறவினர் வகையிலும் அவ்வளவு அனுகூலம் காணப்படவில்லை. சிலர் மன உழைச்சலுட ன் காணப்படுவர். தடைகள் பல குறுக்கிட்டாலும் உங்களின் தீவிர முயற்சியால் எடுத்தகாரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும்.

  அதற்காக கவலை கொள்ளவேண்டாம். குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது.  உத்தியோகம்: சிறப்பான முன்னேற்றம் காணலாம். சம்பள உயர்வு வரும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கபெறலாம்.

  ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்கப் பெறுவர். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. 2021 ஏப்ரல் 4-ந்தேதி முதல் 2021 செப்டம்பர் 14-ந்  தேதிவரை வேலையில். பொறுமையும், நிதானமும் தேவை. வேலைப்பளு அதிகமாகவே இருக்கும்.       மேல் அதிகாரிகளிடம் சற்று அனுசரித்து போகவும். யாரையும் எளிதில் நம்பிவிடாதீர்கள். சிலருக்கு வேலையில் வெறுப்புவரும்.

  சிலர் வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணம் தோன்றும். குருவின் பார்வை பக்கபலமாக இருப்பதால் எந்த விபரீதவிளைவும் ஏற்பட்டு விடாது. வியாபாரம்: குருவால் நல்ல லாபத்தை பெறலாம். பணப் புழக்கம் அதிகரிக்கும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.  2021 ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021 செப்டம்பர் 14-ந் தேதிவரை பகைவர்களின் தொல்லைகள் இருக்கும். பண விஷயத்தில் எப்போதும்                    கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும்.

  பொதுநலம்: அரசியல்வாதிகள், பொதுநலசேவகர்கள் எதிர்பார்த்த பலனை பெறமுடியாது. பிரதிபலனை எதிர்பராமல் உழைக்கவேண்டியதிருக்கும். கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மறையும்.

  புதிய ஒப்பந்தம் தாராளமாக வரும். சமூகநல-சேவகர்கள் நற்பெயரும், புகழும் கிடைக்கப் பெறுவர். 2021 ஏப்ரல் 4-ந்தேதி முதல் 2021 செப்டம்பர் 14-ந்தேதிவரை கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்திற்காக அதிக முயற்சி எடுக்கவேண்டியது இருக்கும்.

  மாணவர்கள்:

  வெற்றிகிடைக்கும். விரும்பிய பாடம் கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு பெறலாம். 2021 ஏப்ரல் 4-ந்தேதி முதல் 2021 செப்டம்பர் 14-ந்தேதி வரை அசட்டையாக இருந்துவிடவேண்டாம். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும்.

  விவசாயம்: அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கால்நடை வளர்ப்பவர்கள் நல்லபலனை காணலாம். மஞ்சள்,மொச்சை, கடலை, நெல் போன்ற தானியங்கள் நல்ல மகசூலை கொடுக்கும்.

  2021 ஏப்ரல் 4-ந்தேதி முதல் 202 1செப்டம்பர் 14-ந்தேதி வரை அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். வழக்கு விவகாரங்கள் சுமாராகத்தான் இருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்கவேண்டாம். சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்பது நல்லது.

  பெண்கள்:மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். விருந்துவிழா என சென்றுவருவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 2021ஏப்ரல் 4-ந்தேதி முதல் 2021 செப்டம்பர் 14-ந தேதி வரை சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. சிற் சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து போவது நல்லது.

  அண்டை வீட்டாரிடம் வளவளபேச்சு வேண்டாம். அக்கம் பக்காத்தாரிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம். ஆடம்பரபொருள் வாங்குவதை தவிர்க்கவும். உடல்நலத்தை பொறுத்த வரை சிறப்படையும். கேதுவால் சிற்சில பாதிப்புகள் வந்தாலும் நொடிப்பொழுதில் மறைந்துவிடும்.

  பரிகாரம்:

  ராகு கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை அம்மனை வணங்கி வாருங்கள். பவுர்ணமிநாளில் வீ ட்டில் விளக்கு ஏற்றி சித்திரபுத்திர நைனாரை வணங்கி ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 14-ந்தேதிவரை வியாழக்கிழமைதட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

  கணித்தவர்: காழியூர் நாராயணன்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Gurupeyarchi, Rasi Palan