ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

குரு பெயர்ச்சி 2020: குருபகவான் தனுசு ராசியிலிருந்து மகரத்துக்கு பெயர்ச்சி.. தமிழகம் முழுவதும் குருஸ்தலங்களில் சிறப்பு பூஜை..

குரு பெயர்ச்சி 2020: குருபகவான் தனுசு ராசியிலிருந்து மகரத்துக்கு பெயர்ச்சி.. தமிழகம் முழுவதும் குருஸ்தலங்களில் சிறப்பு பூஜை..

குருபெயர்ச்சியை முன்னிட்டு நடந்த பூஜை

குருபெயர்ச்சியை முன்னிட்டு நடந்த பூஜை

தனுசு ராசியில் இருக்கும் குருபகவான், இரவு 9.48 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி பிரதான குருஸ்தலமான ஆலங்குடியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நவகிரகங்களின் குருவாக போற்றப்படும், குருபகவான், ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு தங்குகிறார். பிறகு, அடுத்த ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதன்படி இந்த ஆண்டு ஆட்சி வீடான தனுசு ராசியில் இருந்த குருபகவான், இரவு 9.48 மணிக்கு மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அதையொட்டி பிரதான குரு ஸ்தலமான திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகளும், ஹோமங்களும் நடைபெற்றன. அந்த பூஜைகள் இணையத்தில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.

  குருப்பெயர்ச்சியால், ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலனை குருபகவான் அளிப்பார் என கணிக்கப்பட்டுள்ளது. குருபெயர்ச்சியையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு ஸ்தலங்களில் சிறப்பு ஹோமங்களும், பூஜைகளும் நடைபெற்றன.

  தஞ்சாவூர்

  குருப்பெயர்ச்சியை ஒட்டி குருவுக்கு உகந்த தலங்களில் ஒன்றான தஞ்சாவூர் மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு 8 மணி முதல் 10 மணி வரை பக்தர்களுக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் 400 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

  சென்னை

  சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோயிலில் உள்ள குருபகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இக்கோவில், ஆலங்குடி, தென்குடி திட்டை, திருச்செந்தூர் ஆகிய திருக்கோயில்களுக்கு சமமான திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பக்தர்கள் யூட்யூப் மூலமாக சிறப்பு பூஜையை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  ' isDesktop="true" id="370623" youtubeid="_9e6_p8aLrM" category="spiritual">

  புதுச்சேரி

  புதுச்சேரி அருகே மொரட்டாண்டியில் அமைந்துள்ள விஸ்வரூப சனீஸ்வர பகவான் ஆலயத்தில், 1,008 லிட்டர் பால் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து 1,008 கிலோ சுண்டல் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

  மேலு படிக்க...சென்னையில் காதல் தோல்வியடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை... அம்மாவுக்கு உருக்கமான கடிதம்...

  மதுரை

  மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், மீனாட்சி - சொக்கநாதர் ஆலயத்தில் உள்ள மங்கள தட்சணாமூர்த்திக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு ஆராதனை நடைபெற்றது. சாமி தரிசனத்திற்கு, உள்ளூர் பக்தர்கள் மட்டும் குறைவான அளவில் அனுமதிக்கப்பட்டனர். பரிகாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

  இதே போல தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் குருபெயர்ச்சி பூஜை நடத்தப்பட்டது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Gurupeyarchi, Puducherry