ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

குரு பௌர்ணமி 2022 : சில தனிச்சிறப்புகள்!

குரு பௌர்ணமி 2022 : சில தனிச்சிறப்புகள்!


குரு பௌர்ணமி 2022

குரு பௌர்ணமி 2022

Guru poornima 2022 : ஆன்மீக சாதகர்களுக்கு, குரு பௌர்ணமி நாள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. குருவின் அருளைப் பெறுவதற்கு, குரு பௌர்ணமியான இந்நாள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஆதியோகி ஆதிகுருவாய் மாறி, உலகிற்கு ஆன்மீகத்தை அர்ப்பணித்த நாள் குரு பௌர்ணமி. ஒருவர் முயன்றால், பிரபஞ்சத்தின் ஒவ்வொரு கதவும் திறக்கும் என்பதனை முதன்முதலாய் அவர் நமக்கு நினைவூட்டிய நாள் . குரு பௌர்ணமி வெறுமனே அடையாளமான ஒரு நாள் அல்ல, இது அருளுக்கு உகந்த நாள். ஒருவர் பிற பரிமாணங்களுக்கு ஏற்புடையவராய் இருக்க இயற்கையே உறுதுணையான சூழ்நிலையை இந்நாளில் ஏற்படுத்தித் தருகிறது. புத்தம் புது சாத்தியங்களை விரைவாய் உந்திச் சென்றடைய இந்நாள் ஒர் அற்புதமான வாய்ப்பு என குருபௌர்ணமி குறித்து சத்குரு கூறியவை இக்கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளன. 

7பேர்... 84 வருடங்கள்... ஒரு மனிதரின் கடைக் கண் பார்வைக்காகக் காத்திருந்தனர். ஒரு நாள், அவரின் பார்வை அந்த எழுவரின் மேல் விழுந்தது. அதுவரை அவர்களை ஏறெடுத்தும் பார்க்காத அந்த மனிதர், அதன்பிறகு அவர்களின் மேலிருந்து தனது பார்வையை அகற்ற முடியவில்லை. அந்த அளவிற்கு, தாங்கள் செய்து வந்த சாதனாக்களால் அந்த எழுவரும் தங்கம்போல் ஜொலித்தனர்.

அவர்தான் ஆதியோகி. ஜூலை மாதப் பௌர்ணமி அன்று, யாருக்கும் பெறத் தகுதியில்லை என நினைத்திருந்த தனது ஞானத்தையும் சக்தியையும் தென்திசை நோக்கி அமர்ந்து முதன்முதலாக எழுவருக்கும் வழங்கினார். அதுவரை ஆதி யோகியாக இருந்தவர் அன்றுமுதல் ஆதிகுருவாக மாறினார். தெற்கு நோக்கி அமர்ந்ததால் தட்சிணாமூர்த்தி (தட்சின்-தெற்கு) என்றும் அழைக்கப்படுகிறார். ஆதிகுரு உருவாகிய நாளான இந்த ஜூலை மாதப் பௌர்ணமி, “குரு பௌர்ணமி” என்று கொண்டாடப்படுகிறது.

ஆதிகுருவின் சீடர்களான அந்த எழுவரும் சப்த ரிஷிகளாக, தாங்கள் பெற்ற சக்தியையும் ஞானத்தையும் உலக மக்கள் அனைவருக்கும் வழங்கும் நோக்கில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசை நோக்கிச் சென்றனர். அவர்களில் ஒருவரே நம் தென்னகம் வந்து, ஆன்மீக விதை விதைத்து, அதை ஒரு கலாச்சாரமாகவே மாற்றிய ‘அகஸ்திய முனி’.

' isDesktop="true" id="770777" youtubeid="5lrRb61usMo" category="spiritual">

ஆன்மீக சாதகர்களுக்கு, குரு பௌர்ணமி நாள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. குருவின் அருளைப் பெறுவதற்கு, குரு பௌர்ணமியான இந்நாள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தங்கள் ஆன்மீகப் பயிற்சிகளைத் துவங்கவும் ஏற்கனவே செய்து வருபவர்கள் அதனைத் தீவிரப்படுத்தவும் இது மிக உகந்த நாள்.

First published:

Tags: Guru pooja, Sadhguru