ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சிம்மராசி : குருப்பெயர்ச்சி பலன்கள் 2020

சிம்மராசி : குருப்பெயர்ச்சி பலன்கள் 2020

சிம்மம்

சிம்மம்

குரு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்கிறார். குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கபடி இந்த ஆண்டு 15-11-2020 அன்று (ஞயிற்று கிழமை) இரவு 11-48 மணிக்கு மகர ராசிக்கு மாறுகிறார். இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் ஒவ்வொரு ராசி வாரியாக விரிவாக கணித்து கொடுக்கப்பட்டு உள்ளது. கணித்தவர்: காழியூர் நாராயணன்

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 4 minute read
 • Last Updated :

  பெரிய மனிதர்களின் நட்பும், சுகவாசமும் பெற்று விளங்கும் சிம்மராசிஅன்பர்களே..

  நீங்கள் சூரியனைப் போல பிரகாசத்துடன் காணப்படுவீர்கள். மற்றவர்களிடமிருந்து தனித்துவத்தை பெற்றிருப்பீர்கள். உங்களின் செயல்பாடுகள் உங்களை முன்னிலைப்படுத்தும் இப்படிப்பட்ட குணநலன்களை கொண்ட உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சுமாரானநிலை. இதுவரை குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்தார். அவரால் குடும்பம் மேம்பட்டிருக்கலாம். நல்ல பணப்புழக்கத்தை தந்திருப்பார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைத்திருப்பார்.

  பிள்ளைகளால் பெருமை கிடைத்திருக்கும்.பெண்களால் எண்ணற்ற முன்னேற்றத்தை அடைந்திருப்பீர்கள். இந்தநிலையில் இப்போது குருபெயர்ச்சி நடக்கிறது. குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம்இடத்தில் இருந்து 6-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார்.

  இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. 5-ம் இடத்தில் இருந்தது போன்ற நன்மைகளை அவரால் கொடுக்க முடியாது. அதேநேரம் மிகவும் பிற்போக்கான பலனையும் அவர் தரமாட்டார். பொதுவாக6-ம் இடத்தில் இருக்கும் குரு உடல்நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார்.

  மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார் என்பது ஜோதிடவாக்கு. ஆனாலும் அதற்காக கவலை கொள்ள வேண்டாம்.

  குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும்அவரது 9-ம் இடத்து பார்வை மிகவும் சாதகமாக காணப்படுகிறது. குருவின்பார்வை மூலம் எந்த இடையூறுகளையும் தடுத்து நிறுத்தலாம். மேலும்அவர் 2021 ஏப்ரல் 4-ந்தேதிமுதல் 2021செப்டம்பர் 14-ந்தேதி வரைஅதிசாரம் பெற்று கும்பராசியில் இருக்கிறார்.இதுசிறப்பான இடம். பிறகு 2021 நவம்பர் 13-ந்தேதி அன்று முழுபெயர்ச்சிஅடைந்து 7-ம்இடமான கும்பராசிக்கு மாறுகிறார்.

  இது மிகவும்உயர்வான நிலை. அவர் குடும்பத்தில்ம கிழ்ச்சியை அதிகரித்து சுபநிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும்.

  பணப்புழக்கம் அதிகரிக்கும். எண்ணற்ற பலவசதிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வைதருவார்.அதன்பிறகு 2022 ஏப்ரல் 14-ந்தேதிஅன்றுபெயர்ச்சிஅடைந்து 8-ம் இடமான மீனராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை.

  அப்போது குரு மனவேதனையும், நிலையற்றதன்மையும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதத்தை உருவாக்குவார். மற்ற கிரகங்களின் நிலை சனிபகவான் தற்போது 5-ம்இடமான தனுசுராசியில் உள்ளார். இதுசிறப்பானஇடம்அல்ல. 5-ல்சனி இருக்கும் போது மனைவி, மக்கள் மத்தியில் ஒருகுழப்பத்தைஉருவாக்கலாம்.

  மனதில் ஏனோ இனம் புரியாத வேதனை குடிகொள்ளலாம். குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகளை தருவார். அவர் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும்அவரது 7-ம் இடத்துபார்வை சிறப்பாக உள்ளன. இதனால் நன்மைகள் கிடைக்கும் .இந்தநிலையில்அவர் 2020 டிசம்பர் 26-ந்தேதி அன்று மகரராசிக்கு அடியெடுத்து வைக்கிறார்.

  இங்கு நல்ல பணப்புழக்கத்தையும், காரியத்தில் வெற்றியையும் கொடுப்பார். அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவீர்.

  மேலும் சனியின் 10-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக அமையும்.அதன் மூலம் அவர் பொருளாதார வளத்தையும், காரிய அனுகூலத்தையும் தருவார். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார்.ராகு10-ம் இடமான ரிஷபத்தில்இருக்கிறார். இதுஅவ்வளவு சிறப்பானஇடம் அல்ல.இங்குஅவர்பொருள்இழப்பையும், சிறுசிறுஉடல்உபாதைகளையும் கொடுப்பார். கேது இப்போது 4-ம்இடமான விருச்சிகத்தில் இருக்கிறார். இது சிறப்பானஇடம் அல்ல. அவரால்

  தீயோர்சேர்க்கைக்குஆளாகி அவதியுறலாம். உடல் நலம் பாதிப்பு வரலாம். வயிறு பிரச்சினைவரும். இரண்டு கிரகங்களுமே சாதகமற்ற இடத்தில் இருக்கிறார்கள் என்று கவலை கொள்ள தேவை இல்லை. காரணம் கேதுவின்பின்னோக்கிய 11-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 6-இடமான மகரத்தில் விழுகிறது. இதனால் இது சிறப்பானஅம்சமாகும்.

  இனி விரிவான பலனை காணலாம்.

  குடும்பத்தில் சீரான வசதி இருக்கும்.தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்-மனைவிஇடையேஅன்பு பெருகும். உறவினர்கள் வகையில்அன்னியோனியம் நிலவும். சிலர் புதியவாகனம்வாங்கலாம்.திருமணம்போன்றசுபகாரியங்கள்தடைபடலாம். மதிப்பு,மரியாதை சுமாராகவேஇருக்கும்.எனவேவீண் விவாதங்களை                                  தவிர்க்கவும்.அனாவசியசெலவைத்தவிர்க்கவேண்டும். 2021 ஏப்ரல் 4-ந்தேதிமுதல் 2021 செப்டம்பர் 14-ந்தேதிவரை உங்கள் ஆற்றல் மேம்படும்.ஆன்மிகஆன்றோர்களின்ஆசியும், அருளும் கிடைக்கும்.

  கணவன்மனைவி இடையே அன்பு இருக்கும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள்கைகூடும்.

  குருபொருளாதாரவளத்தை அதிகரிக்க செய்வார்.

  பெண்கள்

  பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தைபாக்கியம் கிடைக்கும். உத்தியோகம் கடந்த காலத்தைவிட வேலைப்பளுஅதிகரிக்கும். அலைச்சல்இருக்கும். மேல்அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.சிலருக்கு எதிர்பாராத வகையில் மாற்றம் ஏற்படலாம். சிலர் வேலையில் அதிகஆர்வம் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் குருப்பிரீத்தி செய்தால் சிறப்பானபலனைபெறலாம். வழக்கமாக கிடைக்க வேண்டிய பதவிஉயர்வு, சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. 2021 ஏப்ரல் 4-ந்தேதி 14-ந்தேதி வரை சிறப்பான பலனைபெறலாம். குருவின் பலத்தால் மேன்மை காண்பர். சகஊழியர்கள்உதவிகரமாக இருப்பர்.

  கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு தானாகவந்துசேரும். வியாபாரத்தில்போதியலாபம்  கிடைக்கும். சிலர் தீயோர் சேர்க்கையால் பண இழப்பை               சந்திக்க நேரலாம். கவனம் தேவை. யாரையும் நம்பி பணத்தைஒப்படைக்கவேண்டாம். டிசம்பர் 26-ந்தேதிக்கு பிறகு தொழில்வளர் முகமாக இருக்கும். எதிர்பாராதவகையில் பணம் சிடைக்கும் .எதிரிகளின் இடையூறுகள் இருக்கும். .அவர்களின்சதியை சனிபகவானால்முறியடிப்பீர்கள். 2021ஏப்ரல் 4-ந்தேதிமுதல் 2021 செப்டம்பர் 14-ந் தேதி வரை பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்குவர்த்தகம் நல்லலாபத்தைதரும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.

  கலைஞர்கள்

  கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் முயற்சியின் பேரில் பெறலாம். எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம்.

  அரசியல்வாதிகள், சமூக நலசேவகர்கள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டிய திருக்கும். 2021 ஏப்ரல் 4-ந்தேதி முதல் 2021 செப்டம்பர் 14-ந்தேதிவரை அவப்பெயர், போட்டிகள் முதலியன மறையும். புதிய ஒப்பந்தங்கள் பெறுவர். புகழ்,பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனைக் காணலாம். பொதுமக்களிடையே நற்பெயர் கிடைக்கும்.

  மாணவர்கள்

  மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் முன்னேற்றம் காண்பர்.

  சிலர் தகாதசேர்க்கையால் படிப்பில்கவனம் செலுத்த முடியாமல்போகலாம். எனவே அந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளில்சற்றுகவனம் செலுத்த வேண்டும். 2021 ஏப்ரல் 4-ந்தேதி முதல் 2021 செப்டம்பர் 14-ந்தேதி வரை மதிப்பெண்கள் அதிகரிக்க                தொடங்கும். போட்டிகளில் வெற்றி காணலாம்.

  விவசாயம்

  விவசாயம் பாசிபயறு, எள், துவரை, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், பழவகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும். டிசம்பர் 26-ந்தேதிக்கு பிறகு வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டுபோனபொருட்கள்மீண்டும் கிடைக்கும்.

  பெண்கள்

  குடும்பத்தேவைக்காக அதிகமாக பாடுபட வேண்டியதிருக்கும். கணவரிடம் விட்டுக்கொடுத்துப்போகவும். வேலைப்பளு இருக்கும். வேலையில் கவனம் தேவை.2021 ஏப்ரல் 4-ந்தேதிமுதல்2021 செப்டம்பர் 14-ந்தேதி வரை திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.

  பிரச்சினைகள்மறைந்து ஒற்றுமைஏற்படும். குடும்பத்தினரிடம் நன்மதிப்பு பெறுவர். குழந்தைபாக்கியம் கிடைக்கும். திருப்திகரமாக வாழலாம்.

  தோழிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். சுபநிகழ் -ச்சிகளில் கலந்து கொள்வீர்கள் .வேலைக்குசெல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும் வியாபாரம் செய்யும் பெண்கள்நல்லவருமானத்தை பெறுவர். உடல்நலம் கேதுவால் சிற்சிலஉபாதைகள்வரலாம். பயணத்தின்போது சற்றுகவனம்தேவை.

  பரிகாரம்:

  குருபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். அப்போது கொண்டை கடலை படைத்து தானம் செய்யவும். ஆலங்குடி, திருச்செந்தூர், திட்டக்குடி, பட்டமங்கலம் போன்ற ஏதாவது ஒரு குருத்தலத்திற்கு சென்று வாருங்கள்.

  பத்திரகாளியம்மனுக்கு எலுமிச்சை பழவிளக்கு ஏற்றி பூஜை செய்யவும். பாம்பு புற்றுக்கு பால்  ஊற்றலாம். ஏழைகளுக்கு ஆடைதானம் செய்யுங்கள். குறிப்பாக நீலம் மற்றும் பலவண்ணம் நிறதுணிகளை கொடுத்துவாருங்கள்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Gurupeyarchi, Rasi Palan