ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

கடக ராசி : குருப்பெயர்ச்சி பலன்கள் 2020

கடக ராசி : குருப்பெயர்ச்சி பலன்கள் 2020

கடகம்

கடகம்

குரு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்கிறார். குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கபடி இந்த ஆண்டு 15-11-2020 அன்று (ஞயிற்று கிழமை) இரவு 11-48 மணிக்கு மகர ராசிக்கு மாறுகிறார். இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் ஒவ்வொரு ராசி வாரியாக விரிவாக கணித்து கொடுக்கப்பட்டு உள்ளது. கணித்தவர்: காழியூர் நாராயணன்

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 4 minute read
 • Last Updated :

  சாமர்த்தியமாக பேசும் வல்லமை படைத்த கடகராசி அன்பர்களே..

  குழந்தைகளிடம் நீங்கள் காட்டும் அன்பு அபரீதமானதாக இருக்கும். தாய் தந்தை யரிடமும் நல்ல அன்பு கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு இந்த குருபெயர்ச்சி சிறப்பாகஅமையும். குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு6-ம் இடத்தில் இருந்தார். அவர் மனநிம்மதியை இழக்க செய்திருப்பார். உங்கள் நிலையில் இருந்து தடுமாற்றத்தை உண்டு பண்ணியிருப்பார். பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும்.

  வீண்பகையும், விரோதமும் உருவாகியிருக்கும். பல்வேறு தொல்லைகளை அனுபவித்து இருப்பீர்கள். இப்போது குருபகவான் 6-ம்இடத்தில்  இருந்து 7-ம் இடத்திற்கு செல்வது மிகவும் உயர்வான நிலை. மேலும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாகஉள்ளது. குரு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுபநிகழ்ச்சியை தருவார்.

  செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள்பூர்த்தியாகும். எண்ணற்ற பலவசதிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வை தருவார். அவர் 2021 ஏப்ரல் 4-ந்தேதி முதல் 2021செப்டம்பர் 14-ந்தேதிவரைஅதிசாரம் பெற்று கும்பராசியில் இருக்கிறார்.இந்த காலக்கட்டத்தில் அவரால் நன்மைகள் கிடைக்காது. அவர் 2021 நவம்பர் 13-ந்தேதி அன்று முழுபெயர்ச்சி அடைந்து 8-ம் இடமான கும்பராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அப்போது குரு மனவேதனையும், நிலையற்றதன்மைûயும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண்விரோதத்தை உருவாக்குவார். இதற்காக கவலை கொள்ள தேவை இல்லை . காரணம் அவரது 7-ம் இடத்து பார்வை சாதகமாக காணப்படுகிறது.

  இதனால் மந்த நிலைமாறும். தேவையான பொருட்களை வாங்கலாம். அக்கம்பக்கத்தினர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். அதன்பிறகு 2022ஏப்ரல் 14-ந்தேதி அன்று பெயர்ச்சி அடைந்து9-ம்இடமான மீனராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். அப்போது குருவால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்தகாரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பின்னடைவுகள் மறையும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்புஉண்டு. உங்களைபுரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையைஅறிந்து சரணடையும் நிலை வரலாம்.

  மற்றகிரகங்களின்நிலை

  சனிபகவான் 6-ம் இடமான தனுசு ராசியில் நின்று உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடைய செய்வார். நல்ல பணப்புழக்கத்தை கொடுப்பார். அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளை இருக்கும் இடம்தெரியாமல் ஆக்குவீர். மேலும் சனியின் 10-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலம் அவர் பொருளாதார வளத்தையும், காரிய அனுகூலத்தையும் தருவார். தொழிலில்நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். இந்தநிலையில் 2020 டிசம்பர் 26-ந்தேதி அன்று சனிபகவான்7-ம் இடமான மகரராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம்அல்ல. அவரால் முன்புபோல் நற்பலனை தர முடியாது.

  பொதுவாக இந்த இடத்தில் இருக்கும் போது குடும்பத்தில் பல்வேறு பிரச்சினையை உருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும். தீயோர் சேர்க்கையால் அவதியுறலாம் என்பதுபொதுவானபலன்கள். ராகு உங்கள் ராசிக்கு 11-ம் இடமான ரிஷபத்தில் இருப்பது மிகச்-சிறப்பான இடம்ஆகும். அவர் பொருளாதாரத்தில் நல்ல வளத்தை தருவார். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். கேது இப்போது 5-ம் இடமான விருச்சிகத்தில் இருக்கிறார். இந்த இடத்தில் அவர் அரசு வகையில் சிற்சில பிரச்சினையை தரலாம் . மேலும் திருட்டு பயமும் ஏற்படலாம். ஆனால் இதற்காக கவலை கொள்ள தேவை இல்லை காரணம் அவரது பின்னோக்கிய 7-ம்இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11-இடமான ரிஷபத்தில் விழுகிறது. இதன்மூலம் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.

  இனிவிரிவானபலனைகாணலாம்.

  குரு பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார்.மதிப்பு, மரியாதைகூடும். பெண்களால் மேன்மை கிடைக்கும். எடுத்தகாரியங்கள்அனைத்திலும் வெற்றி காணலாம். வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். உறவினர்கள் வகைகளில் அன்னியோனியம் நிலவும். குழந்தைபாக்கியம் கிடைக்கும். சிலர்புதிய வாகனம்வாங்கலாம்.

  பணப்புழக்கம் இருக்கும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். வீட்டுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும். குழந்தைபாக்கியம்கிடைக்கும். புதிய வீடு கட்ட வாய்ப்பு உண்டு. அல்லது வசதியான வீட்டுக்கு குடிபுகுவர்.

  உத்தியோகம் சிறப்பாக இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.  சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும்.போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்தநிலையை அடைவர் புதிய பதவிதேடிவரும்.

  சகஊழியர்களின்ஒத்துழைப்பும் வந்துசேரும். 2021 ஏப்ரல் 4-ந்தேதிமுதல் 2021 செப்டம்பர் 14-ந்தேதிவரைஎதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. உங்கள் நிலையில் மாற்றம்ஏற்படும். தனியார் துறையில்வேலைபார்ப்பவர்களுக்கு வேலையில்பளு இருந்தாலும் அதற்கானபலன் கிடைக்கும். இடமாற்றத்தை காணலாம்..

  வழக்கமான சம்பள உயர்வு, சலுகைகள் கிடைப்பதில் எந்த தடையும் ஏற்படாது. வியாபாரத்தில் அதிக வருமானத்தை காணலாம். புதிய வியாபாரம் நல்லலாபத்தை தரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். தங்கம்,வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.பெண்களை பங்குதாரராக கொண்டநிறுவனம் நல்ல முன்னேற்றம்அடையும். இரும்புவியாபாரம், தரகுபோன்றதொழில்நல்லவளர்ச்சிஅடையும். வேலையின்றிஇருப்பவர்கள் சுயதொழிலில் இறங்கலாம்.சேமிப்புஅதிகரிக்கும். 2021 ஏப்ரல் 4-ந்தேதிமுதல் 2021 செப்டம்பர்14-ந்தேதி வரை அரசிடம் இருந்து எதிர்பார்த்தஉதவிகிடைப்பதுஅரிது. மேலும் திருட்டு பயமும் ஏற்படலாம்.

  பண விஷயத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகள் சமூகநலசேவகர்கள் மேம்பாடு காண்பர். அவர்களுக்கு பதவி கிடைக்கும். கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்ததடையும், மனதில்ஏற்பட்டசோர்வுமறையும். ஒப்பந்தங்கள்தாராளமாக கிடைக்கும். புகழ், பாராட்டு வரும். 2021 ஏப்ரல் 4-ந்தேதி முதல் 2021செப்டம்பர் 14-ந்தேதி வரை கலைஞர்களுக்கு காரியத்தடை, பொருள்ந ஷ்டம் ஏற்படலாம்.

  மாணவர்கள்

  கல்வி, கேள்விகளில்சி றந்துவிளங்குவர் குருவால் போட்டிகளில் வெற்றி பெறவாய்ப்பு உண்டு.காலர்ஷிப்போன்றவைகிடைக்கும். 2021 ஏப்ரல் 4-ந்தேதி முதல் 2021 செப்டம்பர் 14-ந்தேதிவரை அதிக கவனம் செலுத்திபடிக்க வேண்டியது இருக்கும்.விவசாயம்: நல்ல வருமானத்தை காணலாம். புதியசொத்துவாங்கலாம்.மஞ்சள்,கரும்பு ,எள், உளுந்து, பயறுவகை, பனைத்தொழில் மற்றும் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம். கால்நடை செல்வம் பெருகும். வழக்குவிவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.

  பெண்கள்

  பெண்கள் வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியை பெறுவர்.திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள்கைகூடும். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். சகோதரர்களால் உதவி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். பிள்ளைகள் வகையில் இருந்த பிரச்சினைமறையும். அவர்களால் பெருமை கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.

  வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைபெறுவர். 2021 ஏப்ரல் 4-ந்தேதிமுதல் 2021 செப்டம்பர் 14-ந்தேதி வரை விட்டுக்கொடுத்துப்போகவும். வேலைப்பளு இருக்கும். வேலையில்க வனம்தேவை. .உடல்நலம் சிறப்படையும். மருத்துவ செலவு குறையும். ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வந்தவர்கள் வீடுதிரும்புவர்.

  பரிகாரம்

  விநாயகர் வழிபாடு முன்னேற்றத்தை தரும். கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிபகவானுக்கு எள்சோறுபடைத்துவழிபடுங்கள். காக்கைக்கு அன்னமிட்டுஉண்ணுங்கள். ஏப்ரல் 4-ந்தேதிமுதல் 2021செப்டம்பர் 14-ந்தேதி வரைகு ருபகவானுக்குமஞ்சள் நிறபூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். ஏழை சிறுவர்களுக்கு படிக்கவும் உதவி செய்யுங்கள்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Gurupeyarchi, Rasi Palan