ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தானாம்..கோயில் நிர்வாகம் அறிவிப்பு..

புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தானாம்..கோயில் நிர்வாகம் அறிவிப்பு..

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

பஞ்சபூத தலங்களில் அக்னிதலமாக கருதப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், பக்தர்களுக்கு புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruvannamalai, India

  நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவார்கள்.

  அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.

  14 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையை கொண்ட திருவண்ணாமலை, மலையில் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்த நாட்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவர். தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வர்.

  Read More : இன்று புரட்டாசி வெள்ளி பிரதோஷம்... சிவனை வணங்கினால் சுக்கிர யோகம் நிச்சயம்

  இந்தநிலையில், பஞ்சபூத தலங்களில் அக்னிததலமாக கருதப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்களுக்கு புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (9-ந்தேதி ) அதிகாலை 4.06 மணிக்கு தொடங்கி நாளை (10-ந்தேதி) அதிகாலை 3.09 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Tiruvanamalai