மேஷம்
வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இன்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதிர்காலத்திற்காக திட்டம் போட வேண்டிய நேரம் இது. நீண்ட நாட்களாக நீங்கள் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கும் ஒரு விஷயத்திற்கு கவனம் செலுத்த வேண்டும். கடந்த காலத்தில் இருந்த ஒரு நபர் உங்களை மீண்டும் தொடர்பு கொள்வார்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மாரிகோல்டு
ரிஷபம்
உங்களுக்கு தீவிரமான பொறுப்புகள் வழங்கப்படும் நாளாக இருக்கும். உங்கள் சீனியர்கள் சொல்வதை மறுக்க வேண்டாம். இன்று முதலீடு செய்யவதற்கு சிறந்த நாளாக இருக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பட்டாம்பூச்சி
மிதுனம்
உங்களுடைய திறமைக்கு எதிர்பார்த்ததை விட அதிகமானது நிச்சயம் கிடைக்கும். கடந்த காலத்தில் நீங்கள் கஷ்டப்பட்டிருந்தால் செய்வதற்கு உரிய ஆலோசனை பெற வேண்டும். மாணவர்கள் கல்வியில் சாதனை செய்வார்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சிலந்தி வலை
கடகம்
உங்களுக்கு தெரிந்த ஒரு நபர் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறார். அவர் உங்களிடம் பண உதவி கேட்டு வரலாம். நீங்கள் வணிகம் செய்து கொண்டிருந்தால் உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். வேலை மாற வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தால் அதை தற்போது செயல்படுத்தாமல் கொஞ்ச நாட்கள் தள்ளிப்போடவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சூரிய உதயம்
சிம்மம்
சிந்திப்பதற்கு இன்று சில யோசனைகள் தோன்றும். நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் இன்று உங்களிடமிருந்து நெட்வொர்க் லீடை எதிர்பார்ப்பார்கள். நீங்கள் தொலைத்த மிக முக்கியமான விஷயம் ஒன்றும் உங்களுக்கு மீண்டும் கிடைக்கும். இன்று அதிக வேலை பளு உள்ள நாளாகவும் இருக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மலைகளின் காட்சி
கன்னி
கடந்த சில நாட்களாக நீங்கள் காத்திருந்த மிக முக்கியமான விஷயம் ஒன்று இன்று நடக்கும். அது மட்டுமின்றி அலுவலகத்திலும் உங்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. தனிப்பட்ட விஷயத்தில் மற்றவர்களின் தலையீடால் அன்றாட வேலைகள் தடைப்படும் வாய்ப்பு உள்ளது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கலைப்பொருள்
துலாம்
கொண்டாட்டங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. நீங்கள் திட்டமிடாதபடி ஏதேனும் நடந்தால், அதில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவும். முக்கியமான முடிவுகளை அவசரத்தில் எடுக்க வேண்டாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பிளாட்டினம் ரிங்
விருச்சிகம்
இன்று மிகவும் பிராக்டிகளாக இருப்பது யாரையாவது காயப்படுத்தலாம். உங்களை எக்ஸ்ப்ரஸ் செய்யும் திறனில் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நீங்கள் நினைப்பது அனைத்தையும் முழுவதாக உங்களால் கம்யூனிகேட் செய்ய முடிவதில்லை.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தங்கத்துகள்
தனுசு
இன்று நீங்கள் நினைப்பது போல உங்கள் நாள் சிறப்பாக இருக்கும். தேவை இல்லாமல் எதையாவது சிந்தித்து உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக் கொள்ளாதீர்கள். நீங்கள் நிதானமாக உங்கள் வேலையைச் செய்து முடிக்கலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – அழகான நினைவு
மகரம்
தெரியாத இடத்திற்கு புதிதாக பயணம் செய்தீர்கள் என்றால் அது உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உங்களுடைய உறவினர்களைப் பற்றி நினைவுகளில் மூழ்கி இருப்பீர்கள். குறுகிய கால டிரேடிங் செய்வது உங்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புறா
கும்பம்
நீங்கள் எடுக்கும் முடிவுகளில் நம்பிக்கை வைத்திருங்கள். உங்களுடைய பர்பாமென்ஸ் பார்த்து உங்களுடைய மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். கூடுதலாக வழங்கப்படும் பொறுப்புகள் உங்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மூன்று புறாக்கள்
மீனம்
எதிர்காலத்திற்காகத் திட்டமிடுவதற்கு இன்று சிறந்த நாள். வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதற்கு தேவையான அடிப்படை திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள். வேலையில் நீங்கள் முதலாளிக்கு உங்கள் திறனை வெளிப்படுத்த வேண்டும். உங்கள் குறிக்கோளை நோக்கி நீங்கள் செல்வத்தை உணர்வீர்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – லிலாக் நிறங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks