Good Friday 2022: இயேசு கடைசியாக கூறிய 7 வார்த்தைகள் என்னென்ன தெரியுமா?
Good Friday 2022: இயேசு கடைசியாக கூறிய 7 வார்த்தைகள் என்னென்ன தெரியுமா?
இயேசு கடைசியாக கூறிய 7 வார்த்தைகள்
Good Friday 2022 | உலகில் எந்த மனிதன் இறந்தாலும், அந்த தினம் துக்கநாளாக தான் அனுசரிக்கப்படும். ஆனால், கிருஸ்துவர்கள் இயேசுவை சிலுவையில் ஏற்றிய நாளை புனித வெள்ளி என அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...
புனித வெள்ளி அன்று கிறிஸ்துவ ஆலயங்களில் வழிபாடு நடக்கும். இந்த ஆண்டு புனித வெள்ளி நாளை வெள்ளிக்கிழமை ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் இயேசு கிறிஸ்து கூறிய ஏழு வார்த்தைகள் அனைத்து ஆலயங்களிலும் பிரசங்கிக்கப்படுவது வழக்கம்.
இயேசுவின் ஏழு வார்த்தைகள் பின்வருமாறு...
முதலாம் வார்த்தை: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.
இரண்டாம் வார்த்தை: இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மூன்றாம் வார்த்தை: இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்.
நான்காம் வார்த்தை: ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
ஐந்தாம் வார்த்தை: அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.
ஆறாம் வார்த்தை: இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
ஏழாம் வார்த்தை: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.