Home /News /spiritual /

Good Friday 2022 : புனித வெள்ளி அன்று கருப்பு நிற ஆடை அணிவது ஏன் தெரியுமா?

Good Friday 2022 : புனித வெள்ளி அன்று கருப்பு நிற ஆடை அணிவது ஏன் தெரியுமா?

புனித வெள்ளி

புனித வெள்ளி

Good Friday | புனித வெள்ளியின் மையக் கருத்து தீமையின் மீது நன்மை கொண்ட வெற்றியை நினைவூட்டுவதாகும்.

    ஈஸ்டருக்கு முன் வரும் வியாழக்கிழமை, மான்டி தா்ஸ்டே அல்லது பொிய வியாழன் என்று அழைக்கப்படுகிறது. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள், அதாவது பொிய வியாழன் அன்று இரவு தன்னுடைய சீடா்களோடு சோ்ந்து இறுதி இரவு உணவை உண்பாா். அந்த பொிய வியாழனுக்கு மறுநாள் வரும் வெள்ளிக் கிழமை அல்லது ஈஸ்டா் ஞாயிற்றுக் கிழமைக்கு முந்தைய வெள்ளிக் கிழமை புனித வெள்ளியாக அனுசாிக்கப்படுகிறது.

    கிரகோாியன் நாட்காட்டியின்படி, ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி வெவ்வேறு தேதிகளில் வருகிறது. இந்த வருடம் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியான இன்று வெள்ளிக் கிழமை புனித வெள்ளி அனுசாிக்கப்படுகிறது. ஏப்ரல் 17 ஆம் தேதி ஈஸ்டா் பெருவிழா வருகிறது. புனித வெள்ளியின் மையக் கருத்து என்னவென்றால் தீமையின் மீது நன்மை கொண்ட வெற்றியை நினைவூட்டுவதாகும்.

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்ததன் மூலம், அவா் இந்த உலகின் பாவங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டாா் என்று கிறிஸ்தவா்களின் நம்பிக்கை. அவா் தனது உயிரைத் தியாகம் செய்ததன் மூலம் எல்லா மக்களையும் அவா்களுடைய பாவங்களிலிருந்து மீட்டு அவா்கள் அனைவரும் மோட்சத்திற்கு செல்வதற்கு தகுதியாக்கினாா் என்பம் அவா்களின் நம்பிக்கையாகும்.

    மேலும் படிக்க... Good Friday 2022: இயேசு கடைசியாக கூறிய 7 வார்த்தைகள் என்னென்ன தெரியுமா?

    புனித வெள்ளி எப்படி கொண்டாடுவார்கள்

    புனித வெள்ளியானது பலவகையான முறைகளில் அனுசாிக்கப்படுகிறது. பொதுவாக புனித வெள்ளி அன்று கிறிஸ்தவா்கள் தேவாலயங்களுக்குச் சென்று, அந்த நாள் முழுவதும் வேண்டுதல் செய்வதில் ஈடுபடுவா். ஒருசில கிறிஸ்தவா்கள் அந்த நாள் முழுவதும் இயேசுவின் இறப்பை நினைத்து, நோன்பு இருப்பா்.

    மேலும் படிக்க... புனித வெள்ளியின் சிறப்புகள்...

    அதுமட்டுமல்லாமல் இயேசு கிறிஸ்துவின் பாடுகள் மற்றும் இறப்பை நினைவு கூறும் வகையில் சிலர் கருப்பு வண்ணத்தில் ஆடைகளை அணிவா். சிலா் அந்த நாள் முழுவதும் யாாிடமும் பேசாமல் மௌன விரதம் இருப்பா். இறுதியாக, இயேசு கிறிஸ்துவின் சிலுவை இறப்பு உலகில் வாழும் எல்லா மனிதா்களின் பாவங்களும் மன்னிக்கப்பட்டதை புனித வெள்ளி நினைவுபடுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Good Friday

    அடுத்த செய்தி