• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • பிரசாதமாக தங்கத்தை வழங்கும் கோவில் பற்றி உங்களுக்கு தெரியுமா?

பிரசாதமாக தங்கத்தை வழங்கும் கோவில் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஆண்டு தோறும் தீபாவளி தினத்தன்று இந்த ம்காலெட்சுமி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதகமாக தங்கம் மற்றும் வெள்ளி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது...

  • Share this:
    கோவில் என்றாலே நம் எல்லோருக்கும் மிகவும் பிடித்த மற்றொரு விஷயம் பிரசாதம்தான். நாம் பல கோயில்களுக்குச் சென்று வந்திருப்போம். அதில் பெருமாள் கோயிலில் குங்குமம், துளசி, போன்ற பிரசாதங்களோடு, ஏதேனும் ஒரு உணவு பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம். இவ்வாறு வழங்கும் பிரசாதம் கடவுளுக்கு நிவேதனம் செய்தவை. அதனால் அதனை சிறிதளவுவாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் இருக்கும்.

    ஆனால் இவற்றில் மிகவும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரு கோயிலில் பிரசாதமாக தங்கம், வெள்ளி வழங்கப்படுகிறது.  தங்கத்தை  பிரசாதமாக வழங்கும் கோயில், மத்திய பிரதேசம் மாந்லத்டின் வட மேற்கு பகுதியில் இருக்கும் ரத்லா என அழைக்கப்படும் ரத்ன புரி நகரத்தில் உள்ள மகா லட்சுமி கோயிலில் தான் தங்கத்தைப் பிரசாதமாக வழங்கி வருகின்றனர்.

    மேலும் இந்த கோயிலுக்கு வந்து மகாலட்சுமி தேவியை வழிபட்டு செல்லும் பக்தர்கள், தங்களின் கோரிக்கை நிறைவேறினால், நேர்த்திக்கடனாகப் பணம் அல்லது பொருளுக்கு பதிலாக தங்கம் அல்லது வெள்ளியை காணிக்கையாக வழங்குகின்றனர். இப்படி பக்தர்கள் வழங்கும் தங்கம் மற்றும் வெள்ளி மலை போல் கோயிலில் குவிந்து கிடக்கிறது.

    ஆண்டு முழுவதும் காணிக்கையாக சேரும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை அனைத்து கோயில்களிலும் கோயில் திருப்பணிக்காக பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இந்த கோயிலில் ஆண்டு தோறும் தீபாவளி தினத்தன்று இந்த கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதகமாக வழங்குகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த கோயிலில் தரப்படும் இந்த பிரசாதத்தை யாரும் விற்பனை செய்வது இல்லை. அது இறைவனால் வழங்கப்பட்டதாக நினைத்து வைத்து பூஜிக்கின்றனர்.

    தீபாவளி தினத்தில் இந்த கோயிலுக்கு தரிசிக்க செல்லும் பக்தர்களில் திருமணம் ஆன பெண்களுக்கு இந்த தங்கம், வெள்ளி பிரசாதம் வழங்கப்படுகின்றது. மேலும் தீபாவளி தினத்தில் இந்த திருக்கோயில் சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்படுவது வழக்கமாக இருக்கின்றது.

    ஏழை,எளியோரின் வறுமையை போக்கும் விதமாக இந்த கோயிலில் தங்கம், வெள்ளி பிரசாதமாக வழங்கப்படுகிறது. இருப்பினும் இங்கு வழங்கப்படும் தங்கத்தை விற்பனை செய்யாமல் அதை அதிர்ஷ்டமாக பலரும் தங்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்து வருகின்றனர்.

    மேலும் படிக்க..முருகனின் ஆறுபடை வீட்டின் சிறப்புகள்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: