• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • தீபாவளி பூஜைக்கு லட்சுமி சிலை வாங்க போரீங்களா? அப்போ கண்டிப்பாக இதை தெரிந்துக் கொள்ளுங்கள்...

தீபாவளி பூஜைக்கு லட்சுமி சிலை வாங்க போரீங்களா? அப்போ கண்டிப்பாக இதை தெரிந்துக் கொள்ளுங்கள்...

மகாலட்சுமி மட்டும் தனியாக இருக்கும் படம், சிலைகளை வாங்கி வர வேண்டாம். விநாயகர் மற்றும் இதர தெய்வங்கள் இருப்பது போன்ற படங்களை வாங்கலாம்.

  • Share this:
    தீபாவளி பண்டிகையையொட்டி செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியை வழிபட்டு அவரது அருள் ஆசியை பெறுவது வழக்கம். இதற்காக தீபாவளிக்கு முந்தைய நாள் லட்சுமி மற்றும் விநாயகர் சிலைகளை புதிதாக வாங்கி வீட்டுக்கு கொண்டு வருவார். அப்படி வாங்கி வரும்போது நம்முடைய வாகனத்தில் வைத்து மிகவும் பாதுகாப்பாக கொண்டு வர வேண்டும். கவனக் குறைவாக எடுத்து வந்தால், சிலையில் பாதிப்பு ஏற்பட்டால் அடுத்த நிதியாண்டு கவலைக்குரியதாக இருக்கும் என்பது நம்பிக்கை.

    லட்சுமி சிலையை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

    1.லட்சுமி சிலை வாங்கி வந்து வீட்டில் பூஜை செய்வது செல்வத்தை கொண்டு வரும் என்பது நம்பிக்கை. பல லட்சுமி சிலைகள் இருந்தாலும் தீபாவளி பூஜைக்கு என்று பிரத்தியேக சிலைகள், படங்கள் உள்ளன. அடுத்த ஆண்டு முழுவதும் வீட்டில் பணப் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க ஐராவதம் யானைகளுடன் லட்சுமி இருப்பது போன்ற சிலை அல்லது படத்தை வாங்கி வந்து பூஜைக்கு வைக்க வேண்டும்.

    2.மகாலட்சுமியின் பின்புறத்திலிருந்து இரண்டு யானைகளும் நீர், தங்கம், வெள்ளிக் காசுகளை பொழிய வேண்டும். யானை தும்பிக்கையில் கலசத்துடன் இருந்தால் அந்த சிலை மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படும்.

    3. மகாலட்சுமி தாமரை மலர் மீது அமர்ந்திருப்பது போன்ற சிலை, படத்தை வாங்க வேண்டும்.

    4. மகாலட்சுமி ஆந்தை மீது அமர்ந்தபடி இருக்கும் படங்கள், சிலைகளை வாங்க வேண்டாம். அது வீட்டுக்குள் எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வந்துவிடும்.

    5. அதே போல் மகாலட்சுமி நிற்பது போன்ற சிலை, படத்தையும் வாங்கக் கூடாது. இது வீட்டுக்குள் பணப் புழக்கத்தைத் தடுத்துவிடும் என்பது நம்பிக்கை.

    6. மகாலட்சுமி மட்டும் தனியாக இருக்கும் படம், சிலைகளை வாங்கி வர வேண்டாம். விநாயகர் மற்றும் இதர தெய்வங்கள் இருப்பது போன்ற படங்களை வாங்கலாம். மகாலட்சுமிக்கு வலது பக்கத்தில் தான் விநாயகர் இருக்க வேண்டும். இடது புறத்தில் விஷ்ணு இருக்க வேண்டும்.

    7. தாமிரம், வெண்கலம், வெள்ளி, களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வாங்குவது நல்லது. சிலையை வாங்கி தண்ணீர் அல்லது உணவுப் பொருளுடன் வைத்துக் கொண்டு வருவது நல்லது. இந்த நாளில் தங்கம் அல்லது வெள்ளி நாணயங்கள், நகைகள் வாங்குவது நல்லதாகக் கருதப்படுகிறது.

    மேலும் படிக்க... தீபாவளி: லட்சுமி குபேர பூஜை செய்ய வழிமுறைகளும் நேரமும்!

    Diwali 2021: தீபாவளி எப்போது? கங்கா ஸ்நானம், பூஜை செய்யும் நேரம் குறித்த தகவல்கள்...   

    Diwali 2021 : தீபாவளி அன்று விளக்கேற்றும்போது கவனிக்க வேண்டியவைகள் என்னென்ன?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: