இறைவனுக்கு அபிஷேகம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்!

இறைவனுக்கு அபிஷேகம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்!

ஒரு ஆலயத்தில் நாள் முழுக்க 6 கால பூஜைகள் நடைபெறும். அவற்றை முழுமையாக தெரிந்து கொண்டு வழிபட்டால் நிறைய பலன்களைப் பெற முடியும்.

 • Share this:
  கடவுளின் உள்ளம் அபிஷேகம் செய்ய, செய்ய குளிரும். அது அபிஷேகத்தை ஏற்பாடு செய்து நடத்தும் பக்தனையும் குளிரச் செய்யும். அபிஷேகங்களில் பல வகைகள் இருந்தாலும் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய மூன்றும் சிறந்ததாகும். எந்த வகை அபிஷேகம் செய்தாலும் 24 நிமிடங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சில ஆலயங்களில் 2 நாழிகை அளவுக்கு (48 நிமிடங்கள்) அபிஷேகங்கள் செய்யப்படுவது உண்டு.

  ஒரு ஆலயத்தின் மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றல் சக்தியை வெளிப்படுத்துகிறது என்பது, அந்த சிலைக்கு செய்யப்படும் அபிஷேகங்களின் அளவையும், சிறப்பையும் பொருத்தே அமையும். இந்த உண்மையை சங்க காலத்துக்கு முன்பே நம் மூதாதையர்கள் கண்டுபிடித்து விட்டனர். எனவே தான் ஆலயங்களில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்படுவதற்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அதோடு அபிஷேக பொருட்கள் தடையின்றி கிடைக்க நிலங்களை கோவில்களுக்கு எழுதி வைத்தனர்.

  அபிஷேகம் செய்வதினால் கிடைக்கும் பலன்கள்

  1.  பால் கொண்டு அபிஷேகம் செய்தால்: நீண்ட ஆயுள் கிடைக்கும்

  2.  நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்தால்: சுகத்தைக் கொடுக்கும்

  3. பஞ்சகவ்யம் கொண்டு அபிஷேகம் செய்தால்: மனதைப் பரிசுத்தம் செய்யும் அதனால் தீய எண்ணங்கள் வராது.

  4. பஞ்சாமிருதம் கொண்டு அபிஷேகம் செய்தால்: வெற்றியைத் தரும்

  மேலும் படிக்க... கருங்கல்லில் தெய்வ சிலைகளை வடிப்பதற்கு காரணம் இதுதான்...

  5. நெய் கொண்டு அபிஷேகம் செய்தால்: மோட்சத்தைத் தரும்

  6. தயிர் கொண்டு அபிஷேகம் செய்தால்: மகப்பேறு தரும்.

  7. கரும்புச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால்: ஆரோக்யத்தைத் தரும், நீண்ட நாட்களாக இருந்து வந்த நோயும் விலகும் என்பார்கள்.  8. தேன் கொண்டு அபிஷேகம் செய்தால்: கலைவாணியின் அருளைப் பெற்றுத் தரும்.

  9. பழரசம் கொண்டு அபிஷேகம் செய்தால்: எம பயத்தை நீக்கும்

  மேலும் படிக்க... சிதம்பரம் நடராஜகோயிலின் ரகசியம் இதுதான்...

  10. இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தால்: உயர்ந்த பதவியைத் தரும்.

  11. சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால்: இறைவனோடு இரண்டறக் கலக்கச் செய்யும்.

  12. கலசாபிஷேகம் கொண்டு அபிஷேகம் செய்தால்: அஷ்ட லக்ஷ்மி கடாக்ஷத்தைத் தரும்.

  13. நல்ல வஸ்திரம் கொண்டு அணிவித்து மரியாதை செய்தால் : வறுமை நீங்கும்.

  மேலும் படிக்க... இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 05, 2021)

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vaijayanthi S
  First published: