காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண் விழிப்பது ரொம்பவே விசேஷம். காலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் இங்கு பலருக்கும். ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானமாக இருப்பது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிக்க வேண்டும். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம்.
ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங் கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங் கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.
கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமூலே ஸரஸ்வதீ
கரமத்யே து கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்
ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கினால் கிடைக்கும் நன்மைகள்
நம் ஒவ்வொரு செயலிலும் பக்கபலமாக இருந்து, நம்மையும் நம் இல்லத்தையும் சிறக்கவும் செழிக்கவும் செய்வாள் ஸ்ரீமகா லக்ஷ்மி தேவி. கல்வி ஞானம் கிடைக்கக்கூடிய இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். புத்தியில் தெளிவும் ஞாபக சக்தியும் அதிகரித்து, தெளிவானவர்களாக, திடமானவர்களாகத் திகழ்வீர்கள் என்பது உறுதி.
இந்த மந்திரத்தை எந்த திசையில் ஜபித்தால் என்ன பலன் கிடைக்கும்
1. கிழக்கு நோக்தி ஜபித்தால் நம்மை நோய்கள் அண்டாது.
2. தெற்கு நோக்தி ஜபித்தால் வசியம், சூனியம் போன்றவை நம்மை அண்டாது.
3. தென்திழக்கு நோக்கி ஜபித்தால் கடன் போன்ற பிரச்சனைகள் தீரும்.
4. மேற்கு நோக்கி ஜபித்தால் பகைகள் தீரும்.
வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த நாள் என்பதால், அன்றைய தினத்தில் சிறப்பு பூஜை செய்யலாம். பசு நெய் ஊற்றி இரண்டு முக விளக்கு ஏற்றி வழிபடவும். இதனால் மகா லட்சுமியின் ஆசி கிடைத்து செல்வம் பெருகும் என்பது ஐதீகம்
மேலும் படிக்க... தேவி மகாலட்சுமியின் அருளைப் பெற எளிய வழிகள்...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Temple