ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன? திருவண்ணாமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன? திருவண்ணாமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

திருவண்ணாமலை கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம்

பஞ்சபூத தலங்களில் அக்னிதலமாக கருதப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், இந்த மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai | Tiruvannamalai | Tamil Nadu

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    நினைத்தாலே முக்தி தரக்கூடிய  திருவண்ணாமலை  அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவார்கள்.

    அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.

    14 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையை கொண்ட திருவண்ணாமலை, மலையில் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்த நாட்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவர். தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வர்.

    இதையும் படிங்க | சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இந்த பொருட்கள் எடுத்து செல்ல தடை... தேவசம்போர்டு அறிவிப்பு...

    இந்தநிலையில், பஞ்சபூத தலங்களில் அக்னிததலமாக கருதப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்களுக்கு ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி வருகிற 7ஆம் தேதி மாலை 4.44 மணிக்கு தொடங்கி மறுநாள் 8ஆம் தேதி மாலை 4.48 மணிக்கு நிறைவடைகின்றது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Tiruvannamalai