Home /News /spiritual /

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு அனுமதி... பக்தர்கள் மகிழ்ச்சி...

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு அனுமதி... பக்தர்கள் மகிழ்ச்சி...

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

Thiruvannamalai Girivalam | இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் முதல் கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் நாளையும் பங்குனி மாத பவுர்ணமியை யொட்டி கிரி வலத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பங்குனி மாத பௌர்ணமி இன்று பிற்பகல் 2.10 மணி அளவில் தொடங்கி நாளை 18 ஆம் தேதி பிற்பகல் 1.48 மணி வரை உள்ளது.

    இன்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் தொடங்கினர். மாலை லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தேவையான குடி தண்ணீர் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

    கிரிவலம்


    மேலும் படிக்க... திருவாரூர் ஆழித் தேரோட்டத்தின் புகைப்படங்கள்...

    கிரிவலம் வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Thiruvannamalai

    அடுத்த செய்தி