முகப்பு /செய்தி /ஆன்மிகம் / காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஒரு‌ ஜோடி வைர வளையல் காணிக்கை..!

காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஒரு‌ ஜோடி வைர வளையல் காணிக்கை..!

வைர வளையல் காஞ்சி காமாட்சி அம்மன்

வைர வளையல் காஞ்சி காமாட்சி அம்மன்

Kanchipuram | காஞ்சி காமாட்சி அம்மனுக்கு மும்பையை சேர்ந்த பக்தர் ஓரு‌ ஜோடி வைர வளையல் காணிக்கை செலுத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் மகாசக்தி பீடங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் இருந்து வருகிறது. இக்கோயிலை தரிசனம் செய்ய நாள் தோறும் பல்வேறு மாநில பக்தர்கள், உள்ளூர் பக்தர்கள் என வருகை புரிந்து தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது மாசி மக பிரம்மோற்சவ விழா கடந்த 10 தினங்களாக கொடியேற்றத்துடன் நடைபெற்று வருகிறது. இதில் நாள்தோறும் காலை மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் காமாட்சி அம்பாள், லட்சுமி சரஸ்வதியுடன் வந்து 4 ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இந்நிலையில் இக்கோவில் மூலவரான காமாட்சி அம்மனுக்கு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் அஜய் கிருஷ்ணமூர்த்தி சார்பில் சென்னையைச் சேர்ந்த ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் என் நடராஜன் கோவில் ஸ்ரீ காரியம் ந. சுந்தரேச ஐயரிடம் ஒரு ஜோடி வைர வளையலை காணிக்கையாக வழங்கினார்.

இதன் மதிப்பு சுமார் 1.58 லட்சம் மற்றும் 21.8 6 8 கிராம் எடை மற்றும் 26 வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த வளையலை காணிக்கையாக வழங்கியபோது காஞ்சி நகர வரவேற்பு குழுவின் தலைவர் டி. கணேஷ், நிர்வாகிகள் பாபு, ராஜேஷ் ஆகியோரும் உடன் இருந்தனர். இந்த வைர வளையல் உடனடியாக காமாட்சி அம்மனுக்கு சாற்றப்பட்டு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.

First published:

Tags: Local News, Masi Magam, Murugan