பொதுவாகவே பெரும்பாலான சாபங்கள், தோஷ நிவர்த்தி, ஜாதக ரீதியான நெருக்கடியான கிரக அமைப்புகள் என்று ஒரு சில குடும்பங்கள, ஒருசில பிரச்சனைகள் தலைமுறையாக பாதித்து வரும். இதில், ஒரு சில வீடுகளில் ஒரே ஒரு ஆண் பிள்ளை மட்டும் தான் பிறக்கும், அல்லது பெண் குழந்தைகள் பிறக்காது என்பது போன்ற அமைப்புகள் இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண் குழந்தைகள் பிறந்தால், அதில் ஒரு குழந்தை இறந்து போகும் அல்லது தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டு உயிர் வாழ்வதே கடினமாக மாறிவிடும் அல்லது பெரிய விபத்து நேரிடலாம். இது போன்ற, பல தலைமுறைகளாக ஒரு குறிப்பிட்ட முறையில் தான் குழந்தை பிறக்கின்றது என்பது அந்தக் குடும்பத்தில் இருக்கும் சாபத்தை குறிக்கும்.
இவர்களுடைய ஜாதக அமைப்பும் கிட்டத்தட்ட இதை வெளிப்படுத்தும். இதில் இருந்து விடுபட்டு, ஒரு பிள்ளையாக இருந்தாலும் ஆரோக்கியமாக, அடுத்த தலைமுறை தழைத்து வாழ, பிச்சை எடுத்து சிவன் கோவிலில் காணிக்கையாக செலுத்த வேண்டும் என்பது பரிகாரமாக சொல்லப்படுகிறது. அதைப் பற்றி முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தலைமுறையாக குடும்பங்களை பாதிக்கும் சாபம்
சொந்த வீடு அமையாது, வணிகம் செய்தால் நஷ்டமடையும், குடும்பத்தில் பிறக்கும் முதல் குழந்தை இறந்து போகும், ஒரே ஒரு குழந்தை தான் பிறக்கும் என்று பலவிதங்களில் ஒரே மாதிரியான அமைப்பு ஒரு சில குடும்பங்களில் காணப்படும். இவ்வாறு தொடர்ச்சியாக நடப்பது என்பது முந்தைய மூத்தவர்களின் சாபம் அல்லது அவர்களுக்கு செய்யத் தவறிய நீத்தார் கடன் அதனால் ஏற்பட்ட கர்மவினை ஆகியவற்றை குறிக்கும்.
உதாரணமாக சில தலைமுறைகளுக்கு முன்பு குடும்பத்தில் ஏதேனும் ஒரு பெண் குழந்தை அல்லது ஆண் குழந்தையை சரியாக கவனிக்க முடியாமல் அவர்கள் இறந்து போனால், அதன் தாக்கம் அடுத்தடுத்த தலைமுறைகளை தோஷமாக அல்லது சாபமாக பாதிக்கும். தோஷமாக ஜாதகத்தில் காணப்படும். சாபம் என்றால், குழந்தை பிறப்பில் பிரச்சனை ஏற்படும்.
இவை, தொடர்ச்சியாக ஒரு சில ஜாதகத்திலும் காணப்படும். உதாரணமாக பித்ரு தோஷம் என்று கூறப்படும் சனி மற்றும் ராகு சேர்ந்து இருக்கும் காலகட்டம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரிடமும் காணப்படும். அதாவது, கிரகங்களில் பெயர்ச்சி ஆகும் போது, எப்போதெல்லாம் சனி மற்றும் ராகு ஒரே ராசிக்கட்டத்தில் சஞ்சாரம் செய்கிறதோ, அந்த கால கட்டத்தில் தான் அந்த குடும்பத்தில் இருப்பவர்களுக்கு குழந்தை பிறக்கும். குழந்தை ஜாதகத்தில் சனி மற்றும் ராகுவின் இணைப்பு இருக்கும். அதே போல, ராகு மற்றும் கேது உள்ளிட்ட கிரகங்களுக்குள் எல்லா கிரகமும் அடங்கியிருப்பது போல கடுமையான கால சர்ப்ப தோஷம் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலருக்கும் காணப்படும்.
அதில் ஒன்று தான், ஒரு ஆண் குழந்தை பிறப்பது என்பது. ஒரே ஒரு ஆண் குழந்தை பிறந்தவர்கள், குழந்தையின் நீண்ட ஆயுளுக்கு, ஆரோக்கியமான வாழ்வுக்கு, மற்றும் ஒரு ஆண் குழந்தை மட்டுமே பிறக்கும் என்ற சாபத்தில் இருந்து நிவர்த்தி பெற, பிச்சை எடுத்து அதை சிவன் கோவில் காணிக்கை செலுத்த வேண்டும்.
பரிகாரங்கள் மற்றும் பிரார்த்தனைகள் ஏன் சிவன் கோவிலில் செய்யப்படுகின்றன?
இவ்வாறு தலைமுறையாக நீண்டு வரும் சாபம் அல்லது ஜாதகத்தில் இருக்கும் தோஷ நிவர்த்திக்கு சிவன் கோவிலில்தான் பெரும்பாலான பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. கர்ம வினை நீங்குவதற்கு, கடுமையான ஜாதக தோஷம் அல்லது கடுமையாக பிரார்த்தனை செய்வது என்பது எல்லாமே சிவபெருமானுக்கு உகந்தவை.
பல்வேறு இதிகாசம் மற்றும் புராண கதைகளில் கூட தன்னை வருத்திக்கொண்டு கடுமையான தவம் செய்தவர்களுக்கு, சிவபெருமான் வேண்டிய வரங்களை எல்லாம் கொடுத்திருக்கிறார் என்று பல கதைகள் உள்ளன. அதன் அடிப்படையில் உடலை வருத்திக்கொண்டு அல்லது தன்னை தாழ்த்திக் கொண்டு சிவபெருமானிடம் வேண்டுதலை மேற்கொள்ளும் பொழுது எவ்வளவு கடுமையான தோஷமாக அல்லது தலைமுறையை தாக்கும் அளவுக்கு சாபங்கள் உள்ளது கர்மவினைகள் இருந்தாலும் நீங்கும் என்பது ஐதீகம்.
உதாரணமாக பிரம்மஹத்தி தோஷம் என்பது மிகக் கடுமையான தோஷம், இதனை சிவபெருமான் தான் நீக்கினார் என்பது ஐதீகம். அதுமட்டுமில்லாமல், கிரகங்களின் பெயர்ச்சி ஒரு சிலருக்கு ஒரு சில குறிப்பிட்ட காலகட்டத்தில் கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தும். அப்பொழுதும் கூட பரிகாரங்கள், பூஜைகள், யாகம் அல்லது வேண்டுதல்கள் நிறைவேறுவது என்று எல்லாமே சிவபெருமானுக்கு தான் செய்யப்படும்.
பிச்சை எடுப்பது தன்னை மிகவும் தாழ்த்திக் கொண்டு, இறைவன் முன்பு ‘நான் எதுவுமே இல்லை’ என்ற நிலையை உணரும் ஒரு தன்மை ஆகும். அவ்வாறு, எல்லாவற்றையும் தவிர்த்து யாசித்து, அதை காணிக்கையாக சிவபெருமான் கோவிலில் செலுத்தும் போது, அனைத்து கர்ம வினைகளும் நீங்கி, குடும்பத்தையே தாக்கி வந்த சாபமும் தோஷமும் நீங்கப்பெறும் என்பது காலம் காலமாக கூறப்பட்டு வரும் நம்பிக்கை. எனவே
இந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும்?
இந்த நிலையில் ஒரு குடும்பத்தை ஒரே ஒரு ஆண் வாரிசு மட்டும் தான் பிறக்கிறது, அந்த ஆண் வாரிசு ஆரோக்கியமாகவும் நீண்ட காலம் உயிர் வாழ வேண்டும் என்ற நிலையில் பிச்சை எடுத்து சிவபெருமான் கோவிலில் காணிக்கை செலுத்த வேண்டும்.
இரண்டு ஆண் குழந்தைகள் பெற்றிருக்கும் தம்பதிகளிடம், தலா ஒரு ரூபாயை யாசித்துப் பெற வேண்டும். யாசகமாக பெற்ற காசை, சிவபெருமான் கோவிலில் காணிக்கை செலுத்த வேண்டும். அவ்வாறு செய்தால், அந்த குடும்பத்தை தாக்கி வந்த தோஷம் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dhosham | தோஷம், Pariharam | பரிகாரம், Sivan