ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

பல்லி விழும் பலன்கள் : பல்லி தலையில் வலது, இடது புறத்தில் விழுந்தால் என்ன நடக்கும்?

பல்லி விழும் பலன்கள் : பல்லி தலையில் வலது, இடது புறத்தில் விழுந்தால் என்ன நடக்கும்?

பல்லி

பல்லி

Benefits of Falling Lizard | பல்லி தலையில் விழுந்தால் என்ன பலன், இறப்பு சார்ந்த ஆபத்து ஏற்படுமா, விபத்து நேருமா, அல்லது கலகம் வருமா என்று சந்தேகங்கள் உள்ளன. பல்லி தலையில் விழுந்தால் என்ன அர்த்தம் என்று பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பல்லியைப் பார்த்தாலே சிலருக்கு அருவருப்பும், பலருக்கும் பயமும் ஏற்படும். பல்லி இருந்தாலே வாழும் இடம் என்று சொல்வார்கள். ஆனால், சுவற்றில் பல்லியைப் பார்த்தாலே தெறிக்க ஓடுபவர்களும் இருக்கிறார்கள். காரணம், பல்லி எங்கிருந்தாவது மேலே விழுந்து விடுமோ, விழுந்தால் என்ன நடக்குமோ என்ற அச்சம் எல்லாருக்கும் இருக்கிறது.

வேத ஜோதிடத்தில், விலங்குகள், பறவைகள் என்று பல விதமான உயிரினங்கள் சார்ந்து பஞ்சாங்கம், ஜோதிடக் குறிப்புகள் உள்ளன. அதில், பல்லி விழுந்தால் என்ன நடக்கும் என்பதைப் பற்றி கௌலி பஞ்சாங்கம் என்பதில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், பல்லி தலையில் விழுவதைத் தடுக்க முடியாது. பல்லி தலையில் விழுந்தால் என்ன பலன், இறப்பு சார்ந்த ஆபத்து ஏற்படுமா, விபத்து நேருமா, அல்லது கலகம் வருமா என்று சந்தேகங்கள் உள்ளன. பல்லி தலையில் விழுந்தால் என்ன அர்த்தம் என்று பார்க்கலாம்.

தலைப்பகுதிகளில் எங்கு பல்லி விழுந்தால் என்ன பலன்

பொதுவாகவே, தலையில் பல்லி விழுந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுவதுண்டு. ஆனால், தலையின் ஒவ்வொரு பகுதியில் விழுந்தாலும், ஒவ்வொரு பலன் இருக்கும்.

தலை முடியில் படும் படி பல்லி விழுந்தால், வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது கவனமுடன் செல்ல வேண்டும். அவசரப்பட வேண்டாம். நிதானமாகவும், கவனமாகவும் வாகனத்தை ஓட்ட வேண்டும்.

தலையின் நடுப்பகுதியில், உச்சி மண்டையில் பல்லி விழுந்தால், உடல் நல பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே உடல் ரீதியான பாதிப்புகள் இருந்தால், மருத்துவ ஆலோசனை மற்றும் தேவைப்பட்டால் மருத்துவ சோதனைகளை மேற்கொள்ளுங்கள்.

தலையின் வலது பக்கத்தில், கழுத்துக்கு மேல் பல்லி விழுந்தால் அல்லது பட்டால், பல்லி விழுந்தவரின் மூத்த சகோதரர் அல்லது சகோதரிக்கு ஏதேனும் பிரச்சனை உண்டாகும்.

தலையின் இடது பக்கத்தில், கழுத்துக்கு மேல் பல்லி விழுந்தால் அல்லது பட்டால், பல்லி விழுந்தவரின் மூத்த சகோதரர் அல்லது சகோதரிக்கு ஏதேனும் பிரச்சனை உண்டாகும்.

தலையின் முன் பகுதியில் (முன்னுச்சி பகுதியில் – பிரம்ம ரந்திரா என்று கூறப்படும் பகுதிக்கு முன்னர்) பல்லி விழுந்தால், நிதி ரீதியான ஆதாயங்கள், லாபம் கிடைக்கும்.

தலையின் பின் பகுதியில் (முன்னுச்சி பகுதிக்கு முன்னர் – பிரம்ம ரந்திரா என்று கூறப்படும் பகுதியில்) பல்லி விழுந்தால், தடைகள் ஏற்படும், எதையாவது செய்ய திட்டமிட்டிருந்தால் அது தாமதமாகும்.

பெண்களுக்கு, நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்கும் இடத்தில், பல்லி விழுந்தால், அல்லது பட்டால், விழுந்தவரின் அம்மா அல்லது சகோதரிக்கு ஏதேனும் பிரச்சனை உண்டாகும்.

ஆண்கள் / பெண்களில் பின் தலையில், முடியில் பல்லி விழுந்தால், விரும்பத்தகாத நிகழ்வு ஏற்படும். இது உடல் நலம் பாதிப்பையும் குறிக்கும்.

தலையில் பல்லி விழுந்து, அப்படியே இறங்கி கீழே நகர்ந்தால், சொத்து இழக்க நேரிடும் அல்லது பணம் தொலைந்து போகலாம்.

தலையில் பட்டு, முகத்தில் விழுந்தால் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும்.

ஒருவர் மீது அடிக்கடி பல்லி விழுந்தால், மகா மிருத்யுன்ஜ மந்திரத்தை தினசரி 9 முறை சொல்லலாம்.

Published by:Selvi M
First published:

Tags: Astrology, Lizards, Panchangam