ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

பல்லி விழும் பலன்கள்... பல்லி நம் உடலில் எந்த இடத்தில் விழுந்தால் அதிர்ஷ்டம்

பல்லி விழும் பலன்கள்... பல்லி நம் உடலில் எந்த இடத்தில் விழுந்தால் அதிர்ஷ்டம்

பல்லி விழும் பலன்

பல்லி விழும் பலன்

Benefits of Falling Lizard | பல்லி மேலே பட்டால் அல்லது விழுந்தால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. சில நேரங்களில் நமக்கான அதிர்ஷ்டம், வளர்ச்சி, சொத்து சேருவது, என்று பல நன்மைகளும் ஏற்படும். எங்கு பல்லி விழுந்தால் அதிர்ஷ்டம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பல்லியைப் பார்த்தாலே சிலருக்கு பயமும், சிலருக்கு அருவருப்பும் ஏற்படும். வீடுகளில் பல்லி இருக்கும் இடத்தை வாழும் இடம் என்று சொல்வார்கள். அதாவது, அந்த வீட்டில் இருப்பவர்கள் தலைமுறை தலைமுறையாக செழித்து வாழ்வார்கள. பல்லி எங்கிருந்தாவது மேலே விழுந்து விடுமோ, விழுந்தால் என்ன நடக்குமோ என்ற அச்சம் எல்லாருக்கும் இருக்கிறது. பல்லி மேலே விழுந்தால், உடனடியாக பஞ்சாங்கத்தை எடுத்தோ அல்லது இணையத்தில் பல்லி விழும் பலன்களைத் தேடுவோம். பல்லி விழுந்தால் என்ன நடக்கும் என்பதைப் பற்றி கௌலி பஞ்சாங்கம் என்பதில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பல்லி மேலே பட்டால் அல்லது விழுந்தால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. சில நேரங்களில் நமக்கான அதிர்ஷ்டம், வளர்ச்சி, சொத்து சேருவது, என்று பல நன்மைகளும் ஏற்படும். எங்கு பல்லி விழுந்தால் அதிர்ஷ்டம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

ஆண்களுக்கு வலது, பெண்களுக்கு இடது

பொதுவாகவே ஆண்களுக்கு அவர்களின் வலப்பக்கத்திலும், பெண்களுக்கு அவர்களின் இடப் பக்கத்திலும் எந்த இடத்தில் பல்லி விழுந்தாலுமே, நல்ல சகுனம் தான்.

அர்த்தநாரீஸ்வரர் திருவுருவத்தில், ஓருடல் ஈருயிர் என்ற தத்துவத்தில், வலப்புறம் சிவ பெருமானும் இடப்புறம் உமையாளும் இருப்பது, ஆண்களுக்கு உரித்தானது வலது பக்கமும் பெண்களுக்கு உரித்தானது இடது பக்கம் என்று கூறப்படுகிறது. அந்த அடிப்படையில், உடலில் எந்த பாகத்திலும், ஆணாக இருந்தால் வலது பக்கத்தில் பல்லி விழுவதும், பெண்ணாக இருந்தால் இடது பக்கத்தில் பல்லி விழுவதும் அதிர்ஷ்டம்.

நெற்றியில் பல்லி விழுந்தால் லட்சுமி கடாட்சம்

இந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கிறது என்று ஒரு சிலருடைய வீட்டை பார்க்கும் போதே மனதில் தோன்றும். அந்த அளவுக்கு வீடு நேர்த்தியாகவும், அழகாகவும், காணப்படும். லட்சுமி கடாட்சம் இருக்கும் வீட்டில் வறுமையும் ஏற்படாது பஞ்சமும் இருக்காது, மகிழ்ச்சி நிலவும். நெற்றியில் பல்லி விழுவது உங்களுடைய பொருளாதாரம் மேம்பட இருக்கிறது என்பதற்கான அறிகுறி. லக்ஷ்மி என்பது செல்வத்தை குறிக்கும் கடவுள். ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு தற்போது இருக்கும் நிலையை விட உங்களுடைய செல்வ நிலை மேம்பட்டு, வருமானம் அல்லது லாபம் அதிகரித்து, பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமை மேம்படும்.

Also Read : பல்லி விழும் பலன்கள் : பல்லி தலையில் வலது, இடது புறத்தில் விழுந்தால் என்ன நடக்கும்?

தலைமுடியில் பல்லி விழுவது அதிர்ஷ்டத்தின் அறிகுறி

தலையில் பல்லி விழுவது மிகவும் ஆபத்தானது, தலையில் பல்லி விழுந்தாலே பெரிதாக பதற்றப்படுவார்கள், அது ஒரு எச்சரிக்கை அறிகுறி, தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் வீட்டில் மரணம் ஏற்படலாம் என்றெல்லாம் சிந்தனைகள் ஏற்படும். ஆனால் தலையில் விழாமல் தலை முடியில் பட்டு பல்லி ஓடுவது என்பது அதிர்ஷ்டத்தின் அறிகுறி.

சில நேரங்களில் நமக்கு நன்மைகள் கிடைக்கவில்லை என்றால் கூட நமக்கு நடக்கவிருக்கும் தீமைகளில், அல்லது கெட்டது ஏதோ ஒன்று நம்பி விட்டு விலகுவது கூட மிகப் பெரிய நன்மைதான். பல்லி தலை முடியில் பட்டு, உடனடியாக விலகிச் செல்வது என்பது உங்களுக்கு வரவிருந்த ஏதோ ஒரு தீமை அல்லது துரதிர்ஷ்டம் உங்களை பாதிக்காமல் விலகிச் சென்று விடுகிறது என்பதை குறிக்கும்.

Also Read : குரு பகவானின் அருளால் இந்த ராசியினருக்கு தீபாவளிக்கு பிறகு நினைத்தது நடக்கும்..!

முகத்தில் பல்லி விழுந்தால் உறவினர்களால் நன்மை

பொதுவாக முகத்தில் பல்லி விழுந்தால் உறவினர்களால் நன்மை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த இடத்தில் தான் பல்லி விழுந்தது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாமல் இருக்கும்போது உங்கள் வீட்டிற்கு திடீரென்று வரும் உறவினர்கள் அல்லது உறவினர்களின் மூலம் கிடைக்கும் செய்தியால் உங்களுக்கு அதிர்ஷ்டமும் நன்மையும் கிடைக்கும் என்று அர்த்தம்.

புருவங்களில் பல்லி விழுந்தால் உயர்பதவி கிடைக்கும்

புருவங்களில் பல்லி விழுவது என்பது மிகப்பெரிய பதவி உங்களுக்கு கிடைக்க இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு அறிகுறியாகும். ஏற்கனவே அதிகாரம்மிக்க பதவிகளில் இருப்பவர்களுக்கு அந்தஸ்தத்தை உயர்த்தும்.

Published by:Selvi M
First published:

Tags: Astrology, Lizards, Panchangam