Home /News /spiritual /

கருட பஞ்சமி 2022 : நாக தோஷம் உள்ளவர்களுக்கு என்னவெல்லாம் நடக்கும்? அதற்கான வழிபாடுகள் என்ன?

கருட பஞ்சமி 2022 : நாக தோஷம் உள்ளவர்களுக்கு என்னவெல்லாம் நடக்கும்? அதற்கான வழிபாடுகள் என்ன?

கருட பஞ்சமி 2022

கருட பஞ்சமி 2022

Garuda Panchami Pooja : நாகச் சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி இவ்விரு நாட்களையும் எவ்வாறு நாம் விரத நாளாக கொண்டாடலாம் என இந்த வீடியோவில் காணலாம்.

    கருட பஞ்சமி என்பது இந்து வழிபாட்டு முறையில் ஒரு பிரிவான நாக வழிபாட்டில் போற்றுதற்குரிய நாளாகும். இந்நாளில் நாக தோசம் நீங்கவும், தங்களின் சந்ததிகளுக்கு அந்தத் தோசம் பாதிக்காமல் இருக்கவும் நாக வழிபாடு செய்கின்றார்கள்.

    ஆடி மாதம் என்றாலே திருவிழாக்கள், விரதங்கள் நிறைந்த மாதம் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த மாதம் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் கோலாகலமாக நடப்பது வழக்கம். குறிப்பாக பெண்கள் நிறைய விரதம், பூஜைகள் அனுஷ்டிக்க வேண்டிய பல விசேஷங்கள் நிறைந்ததாக உள்ளது. இதில் குறிப்பாக நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி விரதங்கள் மிக முக்கியமானவை. இந்த விரதத்தைத் திருமணமான பெண்கள் மேற்கொண்டால், அவரின் கணவர் மற்றும் பிள்ளைகளின் ஆயுள், ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.

    ஆன்மீக வாதியான தேச மங்கையர்கரசி இது குறித்த வீடியோ ஒன்றை முன்னதாக வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    பொதுவாக நமது வாழ்வில் எல்லா நன்மைகளையும் நாம் பெற வேண்டும் எனில் அதற்கு ராகு , கேது இவர்களின் நலன் நமக்கு அவசியம். ராகு , கேது நமக்கு எதுக்கு நல்லது பண்ணனும்னு அப்ப நமக்குத் தெரியாது. நமது கல்யாணம் தடை படும் நேரத்தில் தான் இது சுத்தி சுத்தி வந்து நிற்கும். அப்படிப்பட்ட தோஷங்களை நமக்கு நீக்கி அனைத்தையும் கைகூடும் நாளாக இந்த நாகச் சதுர்த்தி நாள் நமக்கு அமைந்துள்ளது.

    இந்த நாளில் நாம் எந்த வகையான பலன்களை பெற முடியும் என்பதை நாம் முதலில் பாப்போம். நாக தோஷம் உள்ளவர்கள் , சர்ப்ப தோஷம் எனக் கூறுவார்கள் இதனால் நமக்கு என்னென்னவெல்லாம் நடக்கும் ?

    நாக தோஷத்தால் மன நிம்மதி குறைந்து போகும். உடல் ஆரோக்கியம் குறைந்து போகும் , கல்யாணம் நடக்காது , குழந்தைப் பேரு இருக்காது. இதுபோல நமக்கு பிரச்சனைகள் ஏற்படும். இதையெல்லாம் சரி செய்வதற்கு ஒரு நல்ல நாள் என்பது இந்த நாகச் சதுர்த்தி. சுமங்கலி பெண்கள் இந்த நாளன்று விரதம் இருந்து சுபிக்ஷமான நாள் நமக்கு கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால் நல்ல சுபிக்ஷமான வாழ்க்கை அவர்களுக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இத்தனை நல்லதும் இந்த நாகச் சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமியில் நமக்கு அமைந்துள்ளது. அதில் இந்த ஆண்டு ஆடிப்பூரமான நேற்றைய தினம் நாகச் சதுர்த்தி அமைந்துள்ளது. எங்களுக்கு இப்படி வழிபாடு செய்யும் பழக்கம் இல்லை. நாங்கள் தவறாக செய்து விட்டால் எங்களுக்கு மனம் சோர்ந்து போகும். எப்படி எளிமையான வழிபாடு செய்வது என்றால் இந்த வழிபாடு செய்வதற்கு ராகு காலம் தான் நல்ல நேரம். புற்று கோவில்கள் , கருங்கல் நாகம் இருக்கும் கோவில்களில் பால் , மஞ்சள் , சந்தானம் கொண்டு சென்று விக்கிரகத்ற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்யலாம்.

    வீட்டிலேயே நாகர் திருவுருவம் வைத்திருந்தால் அதில் அபிஷேகம் செய்து வழிபடலாம். அல்லது மஹாவிஷ்ணு , சிவன் , பிள்ளையார் , என பாம்போடு தொடர்புடைய தெய்வங்களில் பொட்டு வைத்து , பால் வைத்து நெய்வேத்யம் செய்து வழிபடலாம். இறுதியாக பாலை பூமியில் அதாவது மண்ணில் சென்று ஐட வேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் செடியில் மண்ணில் அந்த பால் விட வேண்டும். மீதம் உள்ள பாலை பிரசாதமாக எடுத்துக்கொள்ளலாம். அந்த பால் மண்ணில் பட வேண்டும். விரதம் இருக்க முடியவில்லை என்றால் எளிமையான உணவினை உண்டு விரதம் இருக்கலாம். இவை அனைத்தும் நேற்றைய தினம் ஆடி பூரம் அன்று நாகச்சதுர்த்தி அன்று அனைவரும் கடைபிடித்தது. தற்போது இன்று செய்ய வேண்டியவை.

    ALSO READ | ஆடி மாத அம்மன் தரிசனம்: சர்வ ரோக நிவாரணி புன்னை நல்லூர் மாரியம்மன்.!

    வாழைப்பழம் , வெற்றிலை பாக்கு கொண்டு நெய்வேத்யம் செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

    அவ்விதம் நேற்றைய தினம் பலரும் புற்று கோவில்கள் , கருங்கல் நாகம் இருக்கும் கோவில்களில் பால் , மஞ்சள் , சந்தானம் கொண்டு சென்று விக்கிரகத்ற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்துள்ளனர்.

    நாகசதுர்த்தி நேற்றைய தினம் முடிந்த நிலையில் இன்று கருட பஞ்சமி இதனை எவ்விதம் கொண்டாட வேண்டும்.



    கருட பஞ்சமி வழிபாடு செய்வதால் நன்மைகள் ;

    உடல் ஆரோக்கியம் , வாகன விபத்தில் இருந்து தப்பிக்கலாம் , வாகன விபத்தில் இருந்து நம்மை காப்பவர் கருடாழ்வார் . அவர் அதில் இருந்து நம்மைக் காக்க வல்லவர். கருடாழ்வார் மஹாவிஷ்ணுவிற்கு வாகனமாக உள்ளார். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என ஏதுவாக இருந்தாலும் நம்மை காக்கின்ற பெருந்தெய்வம்.

    நமக்கு ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏதுவாக இருந்தாலும் அதனை நீக்குகின்ற தன்மை கருடாழ்வாருக்கு உண்டு.

    நாக தோஷம் தீவிரமாக இருப்பவர்கள் முதல் நாள் நாக தோஷம் இருந்து நாகரை குளிர்வுறச் செய்து விட்டு , அடுத்த நாள் கருடாழ்வாரை வழிபாடு செய்தோமானால் 100க்கு 100 சதவிகிதம் அந்த வழிபாடு பூர்த்தி ஆகும்.

    கருடாழ்வாரை கருட பஞ்சமி அன்று எப்படி வழி பட வேண்டும்:

    கருடாழ்வார் படம் வீட்டில் இருந்தால் அதற்கு துளசி மாலை போட்டு , துளசி தீர்த்தம் வைத்து நாராயணனுக்கு விருப்பமான ஸ்தோத்திரம் படித்தாலே கருடாழ்வார் சந்தோஷப்படுவார். நெய்வேத்யமாக அவருக்கு கொழுக்கட்டை செய்து வைக்க வேண்டும். கருட பஞ்சமி அன்று செய்யக்கூடிய மிக முக்கியமான ஒன்று எனில் அது கொழுக்கட்டை. எள்ளு பூரண கொழுக்கட்டை , பால் கொழுக்கட்டை , நெய்வதேயமாக வைத்து பிரசாதமாக அவருக்கு படைத்து விட்டு அதனை பிறருக்கு கொடுக்கலாம்.

    எங்க வீட்டில் கருடர் படம் இல்லை நாங்கள் என்ன செய்வது என்றால் பக்கத்துல இருக்குற பெருமாள் கோவில் செல்லுங்கள் அங்கு கட்டாயம் கருடர் இருப்பார். வெற்றிலை பாக்கு கொஞ்சம் கல்கண்டு வாங்கி கொண்டு போங்க . சுவாமிக்கு அர்ச்சனை , நெய்வேத்யம் செய்து விட்டு அந்த கற்கண்டை அனைவருக்கும் கொடுங்கள். வாகனங்கள் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது என்பவர்கள் உங்கள் வண்டி சாவியை இறைவனுக்கு வைத்து பூஜை செய்து பின்னர் அந்த சாவியை வாங்கி கொள்ளுங்கள் இவ்விதமாக வழிபாடு செய்யலாம்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Pooja holidays, Snake

    அடுத்த செய்தி