ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

கருட பஞ்சமி 2022 : கருட வழிபாடு செய்வதால் இத்தனை பலன்கள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

கருட பஞ்சமி 2022 : கருட வழிபாடு செய்வதால் இத்தனை பலன்கள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

கருட பகவான்

கருட பகவான்

Garuda Panchami 2022 | கருடன், தனது தாயாருக்காக இந்திரனிடம் அமிர்தகலசத்தை திருடியதும், சாகா வரம் கொடுக்கும் அமிர்தத்தை ஒரு துளி கூட பருகாமல் அப்படியே நாகர்களிடம் கொடுத்ததையும் பார்த்து வியந்து போனார் விஷ்ணு.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

கருட பஞ்சமி என்பது மும்மூர்த்திகளில் ஒருவரான, விஷ்ணுவின் வாகனமான கருடனை வழிபடும் நாளாகும். பெரிய திருவடி, பக்ஷிராஜா, வைனதேயா, விஷ்ணுவாகனம், நாகாந்தகம், சுபர்ணா, கருத்மந்தம், மற்றும் காஷ்யபேயா என்றும் அழைக்கப்படுகிறார். தமிழ் மாதத்தில் ஆடி மாதத்திலும், இந்து பங்காங்கத்தின் படி ஷ்ரவண மாதத்தில் (ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் வரும்) வளர்பிறையின் (சுக்ல பட்ச பஞ்சமி) 5வது நாளில் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி என்ற இரண்டு நாட்களுமே வழிபாடுகள் செய்யப்படும்.

கருட பஞ்சமி புராணம்:

கருடன், கழுகு போல வெள்ளை முகம், தங்க நிறத்தில் உடல், பெரிய சிவப்பு நிற இறக்கைகள் மற்றும் தலையில் கிரீடம் அணிந்தவர் என்றும், மிகவும் வலிமையானவர், என்று புராணங்கள் விவரிக்கின்றன. புராணங்களின்படி, காஷ்யப முனிவருக்கு கத்ரு மற்றும் வினயதா என்ற இரண்டு மனைவிகள் இருந்தனர். கத்ரு ஆயிரம் பாம்புகளை தனது குழந்தைகளாக பெற்றெடுத்தார், வினயதா கருடனை மட்டுமே பெற்றெடுத்தார்.

கத்ரு மற்றும் வினயதா இருவரும், கடலைக் கடக்கும்போது ஏழு தலைகள் கொண்ட ஒரு வெள்ளை நிறக்குதிரை பறந்ததைப் பார்த்தனர். பறக்கும் குதிரையான உச்சைஷ்ரவஸின் வால் என்ன நிறத்தில் இருக்கும் என்பது பற்றி இருவரும் பந்தயம் கட்டுகிறார்கள். ஆயிரம் பாம்புகளின் தாயான கத்ரு, குதிரையின் வால் நிறம் கருப்பு என்றும், கருடனின் தாயான வினயதா நிறம் வெள்ளை என்றும் கூறினார். பந்தயத்தில் தோல்வியடைந்தவர் மற்றவருக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் மேற்கொண்டனர்.

கத்ரு, தன்னுடைய மகன்களான நாகர்களை வெள்ளைக் குதிரையின் வாலில் தொங்கச் சொல்லி, வினயதாவை ஏமாற்றினார். இதனால், குதிரையின் வெள்ளை வால் கருப்பாக மாறியது. இப்போது, ​​வினயதாவும் கருடனும், கத்ருவுக்கும் அவர் மகன்களுக்கும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாகர்களும் கத்ருவும் வினயதா மற்றும் கருடனை ஏளனமாக நடத்தினார்கள். பின்னர், நாகர்கள், அவர்களுக்கும் அவரது தாயாருக்கும் அமிர்தம் கிடைத்தால், அவர்களுக்கு விடுதலை அளிக்க விடுவிக்க ஒப்புக்கொண்டனர்.

Also Read : சர்வ ரோக நிவாரணி புன்னை நல்லூர் மாரியம்மன்.!

அமிர்தக் கலசத்தை தேவர்களின் தலைவனான இந்திரன் வைத்திருந்தார். கருடன் இந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைத் திருடி, நாகர்களுக்கு வழங்கி, தன்னையும் தனது தாயையும் அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்தான். நாகர்கள் எவ்வளவு கொடூரமாக நடந்தாலும் அதைப் பற்றி வெளிகாட்டாத கருடன், தனது தாயாருக்காக இந்திரனிடம் அமிர்தகலசத்தை திருடியதும், சாகா வரம் கொடுக்கும் அமிர்தத்தை ஒரு துளி கூட பருகாமல் அப்படியே நாகர்களிடம் கொடுத்ததையும் பார்த்து வியந்து போனார் விஷ்ணு.

கருடனுக்கு ஒரு வரம் அளித்தார் விஷ்ணு. கருடன் உடனே தனக்கு விஷ்ணுவை விட உயர்ந்த பதவி வேண்டும் என்று கூறி விஷ்ணுவின் வாகனமானார்.

கருட வழிபாடு: அம்மாவும் மகனும்

கருட தரிசனம் எவ்வளவு அரிதானது மற்றும் சுபிட்சமான பலன்களைத் தரும் என்பது பலரும் அறிந்ததே. வைணவர்களின் சமயத்தில், பெருமாள் ஆலயங்களில் மூலவர் சந்நிதிக்கு சென்று மூலவரை வணங்குவதற்கு முன்பு, கருட வழிபாடு செய்ய வேண்டும் என்பது நியதியாகக் கருதப்படுகிறது.

கருடன், காசிபர் - வினயதா தம்பதிக்கு, திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த பறவை இனங்களின் அரசன் ஆவார். கருடனுக்கும் அவரது தாயான வினயதாக்கும் இடையே உள்ள எல்லையிலாத பிணைப்பை வெளிப்படுத்தவே, கருட பஞ்சமி கொண்டாடப்படுகிறது. அம்மாக்கள் மற்றும் மகன்களுக்கு இடையேயான அன்பையும் பாசத்தையும், பிணைப்பையும் கொண்டாட, அதிகரிக்க இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. அம்மாக்கள், தங்கள் குழந்தைகளின் நல்ல ஆரோக்கியத்திற்காகவும், வளமான எதிர்காலத்திற்காகவும் கருடனை வணங்குகிறார்கள்.

Also Read : வறுமை நீக்கும் மகாலட்சுமி பூஜை செய்வது எப்படி.!

கருட வழிபாடு செய்வதன் மூலம் கிடைக்கும் பலன்கள்:

கருடனின் கனிவான பார்வையால் ஆசீர்வதிக்கப்பட்டவர் வேண்டியது எல்லாவற்றிலும் வெற்றி பெறுவது உறுதி. விஷ்ணுவின் வாகனமாக இருப்பதால், விஷ்ணு பக்தர்கள் அனைவராலும் வணங்கப்படுகிறார். மேலும், தொடர்ந்து கருட வழிபாடு செய்பவர்களுக்கு, அணிமா, மகிமா, லகிமா என்ற எட்டுவிதமான சித்திகளை அருளக் கூடியவர்.

நாகர்களின் பிடியில் இருந்து தன்னையும் தனது தாயையும் காத்துக் கொண்டதால், கருட வழிபாடு அனைத்து விதமான நாக தோஷங்களில் இருந்து விடுபட உதவுகிறது.

கருட பஞ்சமி அன்று கருட வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள்:

* பாம்புகள் மற்றும் பிற விஷ ஜந்துக்களால் ஆபத்து நேரிடுமோ என்ற பயம் நீங்கும்

* கண் திருஷ்டி, பில்லி சூனியம் மற்றும் பிற எதிர்மறை ஆற்றலை அகற்றும்

* சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் தீராத நோய்கள் தீரும்

* எல்லா நியாயமான விருப்பங்களும் படிப்படியாக நிறைவேறும்

* மனக்கவலைகளில் இருந்து விடுபட முடியும், தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்

* புகழ், பெயர், செல்வம் கிடைக்கும்

Also Read : திருமண தடை, குழந்தை வரம் உள்ளிட்ட பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் அம்மன் கோயில்கள்.!

தோஷங்கள் நீக்கும் கருட பஞ்சமி விரதம்:

இந்த ஆண்டு, ஆகஸ்ட் 2 ஆன இன்று பஞ்சமி திதி வருகிறது.பொதுவாகவே பஞ்சமியில் விரதம் இருப்பது மிகவும் சக்திவாய்ந்தது என்பது ஐதீகம். எனவே, கருட பஞ்சமி அன்று விரதம் இருப்பது அனைத்து தோஷங்களையும் நீக்கும்.

பெருமாள் ஆலயத்தில் கருட வழிபாடை மேற்கொண்டு, விளக்கு ஏற்றலாம். முளை கட்டிய பயிறு, வெல்லம் மற்றும் அரிசி சேர்த்து செய்த இனிப்புகள், பச்சையான பசும்பால், நாவல் பழம் ஆகியவற்றை கோவிலில் வழங்கலாம்.

Published by:Selvi M
First published:

Tags: Garuda festival