• HOME
 • »
 • NEWS
 • »
 • spiritual
 • »
 • நோய் தீர்க்கும் கணபதி மந்திரம்...

நோய் தீர்க்கும் கணபதி மந்திரம்...

விநாயகர்

விநாயகர்

நோய்கள் குணமாக இந்த கணபதி மந்திரத்தை தினமும் சொன்னால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று அகத்தியர் கூறியுளார்.

 • Share this:
  மனிதர்களுக்கு வரும் நோய்கள் குறித்தும், மனித உடல் பாகத்தை மையமாக வைத்து எத்தனை நோய்கள் வரும் என்பதையும் அகத்தியர் மிக அழகாக கூறியுள்ளார். அதன்படி நோயால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமும் கூறியுள்ளார். ஆனால் அகத்தியர் கூறிய பல்வேறு மருந்துவ முறைகள் பாதுகாக்கப்படாமல் விட்டப்படியால் இன்னும் அவை பற்றிய குறிப்புகள் கிடைக்காமல் உள்ளது. அவற்றில் ஒரு சில குறிப்புகள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு வழக்கில் உள்ளது.

  1. கிடைத்த குறிப்புகளில் ஒரு சில மருத்துவக் குறிப்பு நெற்றியில் அணியும் திருநீரை மந்திர உரு ஏற்றினால் ஒரு சில நோய்கள் விலகும் என்று கூறியுள்ளார். அகத்தியர் அருளிய உடல்நோய்கள் அனைத்தையும் முற்றிலும் நீக்கும் இம்மந்திரத்தினை ஜெபித்து நோய்களினின்றும் விடுதலைப் பெற்று வாழலாம்.

  கணபதி மந்திரம்

  ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்ற
  அருமையுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
  ஓமப்பா ஆதிகண பதிதானொன்று
  உறுதியுள்ள மகாகண பதிதானொன்று
  தாமப்பா நடனகண பதிதானொன்று
  சங்கையுள்ள சக்திகண பதிதானொன்று
  நாமப்பா சொல்லுகிறோம் ஒன்றாய்க் கேளு
  நன்மையுள்ள வாலகண பதிதானொன்றே.
  ஒன்றான உச்சிட்ட கணபதிதானொன்று
  உத்தமமே உக்கிரகண பதிதானொன்று
  நன்றான மூலகண பதிதானொன்று
  நாட்டமுட அஷ்டகண பதிக்குமொன்றாய்க்
  குன்றாத மூலமந்திர சூக்ஷந்தன்னைக்
  குறிப்புடனே சொல்லுகிறேன்
  குணமாய்க்கேளு
  நின்றாடு மூலமடா ஆதிமூலம்
  நிலையறிந்து
  ஓம்கிலி அங்உங்கெண்ணே

  மேலும் படிக்க... பிள்ளையாரின் பெருமைகள், திருதலங்கள் , புராணங்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்...

  ஆதி கணபதி, மகா கணபதி, நடன கணபதி, சக்தி கணபதி, பால கணபதி, உச்சிட்ட கணபதி, உக்கிர கணபதி, மூல கணபதி என எட்டு வகை கணபதி இருப்பதாக கூறுகிறார். இந்த எட்டு வகை கணபதிக்கும் ஒரே முலமந்திரம் இருக்கிறது. அது “ஓம் கிலி அங் உங்” என்பதாகும். இந்த மூல மந்திரத்தை எவ்வாறு பயன் படுத்தி பலனடைய வேண்டும் என்பதை அகத்தியர் விளக்கியுள்ளார்.

  எண்ணமுடன் இடதுகையால் விபூதி வைத்து ஏகாந்த கணபதியின் சுழியைநாட்டி சொன்னமொழி தவறாமற் சுழியைப்பார்த்து சுத்தமுடன் ஓம்கிலி அங்உங் கென்று தன்னகமே சாட்சியாய் இருநூற்றெட்டுத் (208) தான் செபித்து விபூதியைநீ கடாட்சித்தாக்கால் முன்னிறைந்த சற்குருவின் கடாக்ஷத்தாலே மூர்க்கமுடன் தீருகிற வியாதிகேளே. மேலும்,

  கேளப்பா சுரமுடனே சன்னிதீரும்
  கெடியான குன்மமுடன் காசந்தீரும்
  சூளப்பா வஞ்சினையும் ஏவல்தீரும்
  சுருக்கான பலவிஷமுந் தோஷந்தீரும்
  வாளப்பா கரப்பனொடு கெர்ப்பரோகம்
  வயற்றிலுள்ள திரட்சியெல்லாம்
  வாங்கிப்போகும்
  ஆளப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்று
  ஆதியென்ற பூரணத்தில் அழுந்தலாமே.

  அகத்தியர்


  இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு அதில் கணபதியின் சுழியான “உ” என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த திரு நீற்றைப் பார்த்து கணபதியின் மூல மந்திரத்தை இருநூற்றி எட்டு தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார். இப்படி செபிக்கப் பட்ட விபூதியை அணிவதால் சுரமுடன் ஜன்னியும் தீருமாம், குன்மமுடன் காசமும் தீருமாம் வஞ்சனை, ஏவல்கள் தீருமாம். அத்துடன் பலவித தோஷங்கள் நீங்குமாம் என்பது ஐதீகம்...

  மேலும் படிக்க... விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் வாழ்த்து அட்டைகள்!

  எந்தெந்த திதியில் எந்தெந்த விநாயகரை வணங்குதல்   

  விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய 12 முக்கிய ஸ்லோகங்கள்...

  விநாயகரின் 32 வடிவங்கள் என்னென்ன தெரியுமா? 

  தோஷங்கள் நீக்கும் விநாயகர்... 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய பிள்ளையார்கள்...                 

  விநாயகர் சிலைகளை இயற்கை மூலப் பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டும் – சத்குரு வேண்டுகோள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: