• HOME
 • »
 • NEWS
 • »
 • spiritual
 • »
 • செல்வ வளத்தையும் யோகத்தையும் அள்ளி தரும் கஜலட்சுமி விரதம்!

செல்வ வளத்தையும் யோகத்தையும் அள்ளி தரும் கஜலட்சுமி விரதம்!

கஜலட்சுமி

கஜலட்சுமி

ஆவணி மாத வளர்பிறையில் தசமி திதி அன்று கஜலட்சுமி விரதம் இருந்து வழிபட்டால் மூன்று செல்வங்கள் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். புதன்கிழமையன்று கஜலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. நம்முடைய ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தாலும் நாம் மனதார அன்னை கஜலட்சுமியை வேண்டிக்கொண்டால் தோஷங்கள் நீங்கி செல்வ வளம் பெருகும்.

 • Share this:
  ஒரு வருடத்தில் 20க்கும் மேற்பட்ட நாட்களில் மகாலட்சுமி பூஜை வருகின்றது. அஷ்டலட்சுமிகளில் சிறப்பான உருவம் கஜலட்சுமி. பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது பல்வேறு ஐஸ்வர்யங்கள் வந்தன. அவற்றோடு எல்லா ஐஸ்வர்யங்களுள் ஐஸ்வர்யமான திருமகள், கோடி சூரிய பிரகாசத்தோடு தோன்றினாள். அஷ்ட திக்கிலும் இருந்த தேவயானைகள் தங்களது மனைவியரோடு மங்கள நீராட்டி, மங்கலங்களைத் தரும் பிளிறலை எழுப்பி வழிபட்டன. அப்படிப்பட்ட மஹாலஷ்மியை விரதம் இருந்து வணங்க வேண்டிய நாள்தான் இந்த கஜலட்சுமி விரதம்...

  இதுதவிர ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகாலட்சுமிக்கு உரிய நாள் தான். அந்த நாட்களில் வீட்டில் கலசம் வைத்து மகாலட்சுமியை பூஜை செய்யலாம். அல்லது வீட்டில் பெருமாள் மகாலட்சுமி படத்திற்கு பூக்களையும் துளசியையும் சாற்றி நெய் விளக்கு போட்டு வணங்கலாம். இம்முறை கஜலட்சுமி விரதம் பெருமாளுக்குரிய புதன்கிழமையான இன்று வந்ததினால், அவசியம் வீட்டில் பெருமாள் தாயார் படத்திற்கு, ஏதேனும் ஒரு இனிப்புடன் கூடிய அன்னத்தை நைவேத்தியம் செய்து வணங்குவது நல்லது...  இந்த விரதத்தால் வறுமை நீங்கும். செலவுகள் கட்டுப்படும். பற்பல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

  கஜலட்சுமியை ஆவணி மாத வளர்பிறையில் தசமி திதி அன்று விரதம் இருந்து வழிபட்டால் மூன்று செல்வங்கள் நமக்கு கிடைப்பதாக ஐதீகம் உண்டு. அவை செல்வம், புகழ், ஆளுமை திறன்
  போன்றவை. இவற்றை கொடுக்கும் கஜலட்சுமி தாயாரை பெண்கள் இந்த நாளன்று பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் கஜலட்சுமி பூஜை எப்படி செய்வது? அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பதை தெரிந்துக் கொள்வோம் வாங்க...

  கஜலட்சுமி பூஜை எப்படி செய்வது?

  காமாட்சி அம்மன் விளக்கில் இருப்பது கஜ லட்சுமி தாயார் தான். இருபுறமும் யானைகள் விசிறி விடுவது போல இருக்கும் இந்த கஜலட்சுமி தாயாரை ஆவணி வளர்பிறை தசமி திதியன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் வைத்து வழிபட்டால் கேட்ட வரமெல்லாம் கிடைக்கும். விரதம் இருக்கும் நாளில் அதிகாலையில் நீராடி, பூஜை அறையில் மரப்பலகை ஒன்றில் சிகப்பு அல்லது மஞ்சள் நிற துணி விரித்து அதில் பச்சரிசி பரப்பி தாமரை கோலம் போட்டு, அதன் மீது அஷ்ட லக்ஷ்மி படம் அல்லது கஜலட்சுமி படத்தை வைத்து அவருக்கு தாமரை மலர் சூட்டி கஜலட்சுமி விளக்கை வைத்து அதில் நெய் தீபமிட்டு தூப, தீப, ஆராதனைகள் காண்பித்து மூல மந்திரங்களை உச்சரித்து முறையாக உங்கள் தேவைகளை வேண்டி வணங்கிக் கேட்டுக் கொண்டால் வீடு, மனை, தோட்டம் போன்ற செல்வங்களையும், செல்வம், புகழ், ஆளுமை திறன் ஆகிய வரங்களையும் வாரி வழங்குவாள். மேலும் இந்த விரதம் இருந்தால் நவகிரக தோஷங்கள் விலகும் என்பதும் நம்பிக்கை.  கிடைக்கும் பலன்கள்

  செல்வம், புகழ், ஆளுமை திறன் ஆகும். இந்த மூன்றும் ஒருவர் இடத்தில் இருந்து விட்டால் போதும், அவரை ஒருவராலும் அசைத்து விட முடியாது. இந்த மூன்றையும் கொடுப்பவர் தான் கஜலக்ஷ்மி. அஷ்ட லட்சுமிகளில் ஒன்றாக இருக்கும் கஜலட்சுமி, ராஜலட்சுமி என்கிற பெயரிலும் அழைக்கப்படுகின்றார். ஆவணி மாத வளர்பிறை தசமி நாளில் தேவலோக யானைகள் அனைத்தும் ஒன்று கூடி இன்னாளில் கஜ லட்சுமி தாயாரை வணங்கி நீராடி பிளிறலை எழுப்பி வழிபட்டதாக புராணங்கள் குறிப்பிடுகிறது.

  மேலும் படிக்க... திருப்பதியில் பெருமாளை இப்படிதான் வணங்க வேண்டுமாம்!

  புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் என்னென்ன?

  மேலும் படிக்க... புரட்டாசியில் பிறந்தவர்களுக்கான பலன்!
  நீங்கள் புதுமண தம்பதிகளா? அப்போ திருப்பதி ஏழுமலையானின் இந்த பிரசாதம் உங்களுக்குதான்...

  இன்று கேதார கௌரி விரதம்... கடைப்பிடிக்கும் முறைகள்!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: